யானையை விழுங்கும் பாம்பு
படங்கள் -உதவி-நன்றி
http://karanthaijayakumar.blogspot.com/2013/09/blog-post_12.html
யானையை விழுங்கும் பாம்பு
என்ற சிற்பம் ஒரு தகவலைச் சொல்லுகிறது.
இந்த இடத்தில் யானை என்பது
இவ்வுலகில் வாழும் உயிர்களை குறிக்கிறது.
பாம்பு என்பது
காலனைக் குறிக்கிறது.
இந்த உலகில் பிறந்த உடனேயே
ஒவ்வொரு உயிரையும் மரணம்
விழுங்கி கொண்டே வருகிறது
என்பதை மறைமுகமாகக் காட்டும்
உண்மைதான் இந்த சிற்பம் கூறும் பாடம்.
அந்த காலன் என்னும் பாம்பை தன் காலில் போட்டு
நசுக்கும் சக்தி படைத்தவன் உள்ளே இருக்கிறான்
என்பதைத்தான்(அதாவது நம் உள்ளத்தின் உள்ளே இருக்கிறான்)
துவாரபாலகர் காட்டுகிறார்.
மார்க்கண்டேயரின் உயிரை கவர
வந்த காலனை காலால் உதைத்து காத்த
காலகாலனை நம் உயிர் இந்த உடலை விட்டு
நீங்குமுன் பற்றுக்கோடாக கொண்டு
உய்யவேண்டும் என்பதே
இந்த சிற்பம் கூறும். உண்மை.
இந்த உண்மையை அறியாது
யானை போன்று நாம் ஆபத்தை அறியா மூடமாயிருந்தால்
நாம் காலன் என்னும் பாம்புக்கு இரையாகிவிடுவோம்
என்பதை உணர்ந்து கொண்டு
எந்த கடமை செய்தாலும்
இறை உணர்வோடு இருக்கப்
பழக வேண்டும். .
படங்கள் -உதவி-நன்றி
http://karanthaijayakumar.blogspot.com/2013/09/blog-post_12.html
எந்த கடமை செய்தாலும்
ReplyDeleteஇறை உணர்வோடு இருக்கப்
பழக வேண்டும். .
ஆழ்ந்த த்த்துவம்
நன்றி
Deleteஆஹா, அருமையான புது விளக்கம். நன்றி.
ReplyDeleteஅதுதான் உண்மையான விளக்கம்.
Deleteநாங்கள் சிற்பத்தைதான் ரசிப்போம்.
அதற்கும் மேல் நாங்கள்
எதையும் சிந்திப்பதில்லை .
எங்களுக்கு ஏராளமான வேலைகள்
இருக்கின்றன என்று இருப்பவர்கள்தான்
இந்த உலகில் அதிகம்.
வரும் பின்னூட்டங்களின்
எண்ணிக்கையே இதை
எடுத்துக்காட்டும் உண்மை.