Saturday, September 28, 2013

கண்ணா உன் குழலோசை காதில் கேட்டேனம்மா

கண்ணா உன் குழலோசை 
காதில் கேட்டேனம்மா

கண்ணா உன் குழலோசை
காதில் கேட்டேனம்மா
என் மனதில் இருந்த குழப்பமெல்லாம்
அக்கணமே அகன்றதம்மா



ஆதிசேஷம்   குடை பிடிக்க
அடைமழையில்
அவனிக்கு கண்ணனாய்  வந்தாய்




அகிலத்து
மாந்தரெல்லாம் இன்புறவே

பாலை கடைந்தெடுத்து வந்த
வெண்ணையினை பலமுறை உண்டு
தீர்த்தாய் உன் அண்ணன் பலராமனுடன்



வீட்டில் உண்டது போதாதென்று
அயலார் வீட்டிலும் வெண்ணை திருடி
தின்றாய், ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானாய்

உன்னை ஏசியவர்களை உன்னை
உள்ளன்போடு அனைத்தையும்
விடுத்து நேசிக்கும்படி செய்தாய்




ஆடல்வல்லான் ஆடிய நடனம்போல்
கோபர்களுக்கு துன்பம் தந்த காளிங்கனின்
தலைமீது நடனமாடி அவர்கள் இடரைத் தீர்த்தாய்



ஐவர் பாண்டவர் நலன் காக்க பாதகரிடம்
தூது சென்றாய் ஐம்புல  கள்வரிடம்
அகப்பட்டுக்கொண்ட
என்னை காக்க உன்னிடம் தூது
செல்ல யாருளர்?

உந்தன் நாமம் சொல்ல சொல்ல
அகன்றிடும் காமம்

அபயம் தந்திடும் உந்தன் வடிவம்
காணக் காண மாயமாய்
 மறைந்திடும் மரணபயம்

பக்தியினால் பாடி
உன்னை அடைந்தாள் மீரா



பாசுரங்களினால் உன்னை பாடி
உன்னில் கலந்தாள்  ஆண்டாள்



உள்ளத்தில் உன்னை
நினைத்து விட்டால்
கள்ளப் புலனைந்தும்
காணாமல் போய்விடும்
என்றுணர்ந்தேன் ,

எந்நேரமும் உன் நாமம் செப்புகின்றேன்
குறைவில்லா  ஆனந்தம் பெற்றேன்.

pic. courtesy-google images.


7 comments:

  1. ரசிக்க வைக்கும் வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. //உன்னை ஏசியவர்களை உன்னை
      உள்ளன்போடு அனைத்தையும்
      விடுத்து நேசிக்கும்படி செய்தாய்//

      அது தான் ஸ்ரீ [கோபால] கிருஷ்ணனின் தனிச்சிறப்பு ! ;)))))

      அருமையான பகிர்வுக்கு அடியேனின் நன்றிகள். பாராட்டுக்கள்.

      Delete
  2. //பக்தியினால் பாடி உன்னை அடைந்தாள் மீரா

    பாசுரங்களினால் உன்னை பாடி உன்னில் கலந்தாள் ஆண்டாள்//

    பிரேம பக்திக்கு எடுத்துக்காட்டான இவ்விருவர் சரித்திரமும் சுவையோ சுவை நிறைந்தவை.

    இது ஒருபுறம் இருக்கட்டும் ..... ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா உங்களை உடனே அழைக்கிறார் அங்கே ......

    வாங்கோ அண்ணா ! அட வாங்கோண்ணா ....... !! ;)

    ReplyDelete
  3. //உள்ளத்தில் உன்னை நினைத்து விட்டால்
    கள்ளப் புலனைந்தும் காணாமல் போய்விடும்
    என்றுணர்ந்தேன் //

    அதே அதே ......... எப்போதும் அடியேனுக்கு அதே நினைவு மட்டுமே ! ;)

    ReplyDelete
  4. அதே நினைவு இருக்கட்டும்

    ReplyDelete
  5. உள்ளத்தில் உன்னை
    நினைத்து விட்டால்
    கள்ளப் புலனைந்தும்
    காணாமல் போய்விடும்
    என்றுணர்ந்தேன் ,

    எந்நேரமும் உன் நாமம் செப்புகின்றேன்
    குறைவில்லா ஆனந்தம் பெற்றேன்.

    நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete