Monday, September 30, 2013

மாயவன் கண்ணனை வேண்டிடுவோம்

மாயவன் கண்ணனை 
வேண்டிடுவோம்

மாளாப்  பிறவியை வேரறுக்க
மாயவன் கண்ணனை



வேண்டிடுவோம்

மனம் ஒன்றி
மாதவம் செய்தால்
மாதவன் அருளைப் பெற்றிடலாம்

ஓராயிரம் நாமங்கள் கொண்டவனாம்
அன்பினால்அதில் ஒரு நாமம்
சொன்னால் கூட போதும்
சித்தம் மகிழ்பவனாம்

கல்லிலும் இருப்பான்
நாமகளின் சொல்லிலும் இருப்பான்
 புல்லிலும் இருப்பான்
நெஞ்சார நினைப்பவர்க்கு
நிழலாகவும் இருப்பான்

நான்மறைகளுக்கு
எட்டாப் பொருளானான்

நாலாயிரம் பாடிய ஆழ்வார்களின்
உள்ளம் வசமானான்

தூணிலும் இருப்பான்
துரும்பிலும்  இருப்பான்
பூக்கும் அரும்பிலும் இருப்பான்.
ஊர்ந்து செல்லும்
எறும்பிலும் இருப்பான்.
எல்லா உயிர்களின்
இதயத்திலும் இருப்பான்.

கண்ணார காண்பதற்கு கவின்மிகு
வடிவமாகவும் தோன்றுவான்.



நான்கு கரம் கொண்டவன்
சக்கரத்தை கையில் ஏந்தியவன்
சடுதியில் சங்கடங்கள் தீர்க்க

சங்கினால் சங்கை தீர்ப்பான்
பாவம் போக்கும் கங்கையானான்

உன்னை போற்றி துதிப்பவர்க்கு
வாழ்வில் தாழ்வுண்டோ ?

உன்னை தூற்றி பிதற்றுபவர்க்கு என்றும்
வாழ்வில் மகிழ்ச்சியுண்டோ ?

அன்போடு உன் திருவடியில்
 மலரிட்டால் போதும்
அருளோடு பொருளும்
அகலாது நிற்கும்

உண்ணும் எதையும் உனக்கு சமர்ப்பித்து
அடியவர்க்கு உணவிட்டு உண்டால்
உண்டாகும் மகிழ்சிக்கு ஈடேது?

எல்லாம் உனதென்றும்,
யாதும் உன் செயலென்றும்
அறிந்துகொண்டேன்
அகந்தை விட்டேன்.
சிந்தையில் நிறைவு கொண்டேன். 

3 comments:

  1. கேள்விகளும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான பதிவு. படங்கள் இரண்டும் நன்றாக வரைந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete