Friday, November 4, 2011

மனமும் உடலும் இணைந்தது உயிர்


மனமும் உடலும் இணைந்தது உயிர்.
மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு
அந்த எண்ணங்கள் அதன் நோக்கத்தை பொருத்து தீயவை அல்லது நல்லவையாக
கருதப்படுகின்றன
நல்ல எண்ணங்கள் உள்ளத்தில் நிலவும்போது மனம் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
அது உடலிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.பிறர் மீது அன்பு கொள்ள வைக்கிறது. பிறருக்கு உதவி அல்லது நன்மை செய்ய தூண்டுகிறது ஆனால் தீய எண்ணங்கள் அதற்க்கு எதிர்மறையான் விளைவுகளையே ஏற்படுத்துகிறது.
தீய எண்ணங்கள் உடலில் நோய்களை உண்டாக்கி பாதிப்பையும் துன்பத்தையும் ஏற்படுத்துகின்றன.
ஆனால் இதிலிருந்து எப்படி தப்பிப்பது. ?
இறைவன் எப்போதும் நன்மையே செய்பவன்.
அவனையே நாம் நினைத்துகொண்டிருந்தால் மனதில் தீய சிந்தனைகள் தோன்றாது.
அதற்க்கு மிக சுலபமான வழி ராம நாமம் சொல்வதுதான். ராம நாமம் சொல்வதால் ஏற்கெனவே வழிபடும் கடவுள் அல்லது சார்ந்துள்ள மதம் தடையாக் இருக்குமா என்று சிலருக்கு ஐயம் எழக்கூடும்
அது தவறு. ராம நாமம் இன்று உலகில் மதத்தை சார்ந்தவர்கள் மற்றும் எந்த மதத்தை சாராதவர்களாலும்
உச்சரிக்கப்பட்டு வருகிறது. ஏன் பல கோடி தெய்வங்களும் உச்சரித்து வருகின்றன.
அதே நேரத்தில் அவரர்களுக்கு உள்ள கடமைகளையும் விருப்பு வெறுப்பின்றி
செய்து வரவேண்டும். கடமைகளை ஒழுங்காக செய்யாது வழிபாடு மட்டும் செய்வதால் யாதொரு பயனும் இல்லை

No comments:

Post a Comment