மனதை எந்த எண்ணம் திறமுடையதாக வைக்கிறதோ அதுவே மந்த்ரம்
திறமுடையதாக என்றால் என்ன பொருள் ?
நினைக்கின்ற எண்ணங்களை செயல்படுத்த ,மன திண்மையை உண்டாக்குவது
என்னதான் உடல் வலிமையாய் இருந்தாலும் மனம் ஒத்துழைக்க மறுத்தால்
எந்த பணியையும் வெற்றிகரமாக செய்யமுடியாது
அதே போல்தான் மனமும்
இரண்டும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் நினைத்ததை சாதிக்கமுடியும்
இவ்வுலகத்தில் ஒவ்வொரு உயிரும் அவைகளுக்கென்று நிர்ணயிக்கப்பட்ட
கடமைகளை முடிக்கவே பிறவிஎடுக்கின்றன
மனம் காமம் கோபம்,கஞ்சத்தனம் ,ஆசைகள்,ஆணவம்,பொறாமை போன்ற ஆறு தீய குணங்களால் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது தவிர்க்கமுடியாதது
அதற்க்கு காரணம் மனதில் உள்ள கடந்த கால நினைவு பதிவுகள்,
ஒவ்வொரு கணமும் நம் புலன்களின் மூலம் மனம் பெரும் தகவல்கள்.
இரண்டும் சேர்ந்து மனிதனை எண்ணங்கள் ஆட்டி படைக்கின்றன.
மனதை சுலபமாக அடக்க முடியாது
எனினும் முயற்சியால் ,இறைவனின் அருளால்
அதில் தோன்றும் எண்ணங்களை நெறிப்படுத்தி
நமது நோக்கங்களை அடைய முடியும்
அதற்க்கு எளிதான் வழி
இறைவன்நாமத்தை ஓயாமல் உச்சரிப்பதுதான்
ராம நாமம் அதற்க்கு துணை புரியும்
No comments:
Post a Comment