அது அந்த உடலில் தங்கியிருக்கும்வரை அந்த உயிர் இயங்கும்
அது நீங்கியபின் அந்த உடல் வெறும் சடலமே
இந்த ஆன்மாவை பற்றிய அறிவு மனித உயிர்களுக்கு மட்டுமே சாத்தியம்.
தேவர்களும் கடவுள்களுமே மனிதர்களைவிட அதிக சக்திகளை பெற்றிருந்தாலும் தங்களை இயங்குவது /தங்களை இயக்குவது ஆன்மாவாகிய பரப்ரம்மம் என்பதை அறியாதவர்களாகதான் இருக்கிறார்கள் என்பதை இதிஹாச புராணங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்
இறைவன் கண்ணனாக அவதாரம் எடுத்து பகவத்கீதையில் இந்த ஆன்மாவை பற்றி விரிவாக விளக்கியுள்ளான்.
பகவத் கீதைக்கு பல ஆசாரியர்கள் விளக்க உரை எழுதியுள்ளார்கள்.
இன்னும் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்
சமீப காலத்தில் வாழ்ந்த பகவான் ரமண மகரிஷியும் எளிய தமிழில் விளக்கம் அளித்துள்ளார். இவைகளை படித்தால் மட்டும் போதாது.
நம் உடலில் உள்ள ஆன்மா குறித்து அமைதியாக சில நிமிடங்கலாகவாவது சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு இருந்தும் மனிதர்கள் இந்த ஆன்மாவை பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமல் ஆன்மா தாங்கும் இந்த உடல்தான் ஆன்மா என்று அதை பராமரிப்பதிலேயே தன ஆயுட்காலம் முழுவது செலவிட்டு வீணே மடிகின்றனர்.
வேகமாக ஓடிகொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறையில் எல்லோரும் சாஸ்திரங்களை படித்து புரிந்துகொண்டு வாழ்க்கை நடத்த வாய்ப்பிலை.
உலக காரியங்களை செய்துகொண்டே ராம நாமத்தை ஜபம் செய்து வந்தால் இயல்பாக ஆன்ம ஞானம் சித்திக்கும்
இது ஞானிகள் உலகிற்கு தங்கள் அனுபவத்தால் கண்டு தெரிவித்த உண்மை.
No comments:
Post a Comment