Wednesday, November 30, 2011

தியாகம்தான் உலகில் உயர்ந்தது

மரங்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
என்ன மரங்கள் என்றால் மட்டமா?
மனிதனுக்குள் ஆத்மா இயங்குவதுபோல்
ஒவ்வொரு மரத்திற்கும் உயிர் இருக்கிறது
.அதனுள்ளே ஆத்மா இருக்கிறது.
மரமும் ஒரு பிறவிதான்
பாகவதம் படித்தால் தெரியும்
நிர்வாணமாக திரிந்த இரு மனிதர்கள் ஆடையில்லாத
மரமாக பிறவி அடைந்தனர்
அவர்களுக்கு கண்ணபிரான் முக்தி அளித்தான்
மரங்கள் எங்கும் செல்வதில்லை.
ஆனால் அது வளருகிறது,பூக்கிறது,காய்க்கிறது,
கனிகள் தருகிறது,அடுத்த தலைமுறைக்கு விதைகள் தருகிறது.
வெயில் நேரத்தில் நிழல் தருகிறது.கால்நடைகளுக்கு உணவாகிறது.
ஆயிரகணக்கான பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் தங்க இடம் தருகிறது
.மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தருகிறது.
அவன் பிறக்கும்போது தொட்டிலாகவும் வாழும்போது கட்டிலாகவும்,உட்காரும்போது இருக்கையாகவும்,அவன் மரிக்கும்போது பாடையாகவும்,அவனை எரித்து சாம்பலாக்க விறகாகவும் உதவுகிறது.
மனிதர்கள் வெளிவிடும் கரிமிலவாயு போன்ற நச்சு வாயுக்களை
உட்கொண்டு உயிரினம் வாழ பிராணவாயு தருகிறது.
இப்படி தனக்கு என்று எதையும் வைத்துக்கொள்ளாமல்
அனைத்தையும் தியாகம் செய்துவிடுகிறது
அதனால்தான் அதற்க்கு வேண்டியதனைத்தையும்
இறைவன் அது இருக்கும் இடத்திற்கே அளித்து விடுகிறான்.

இவ்வுலகில் தனக்கென்று எதுவும் வைத்துகொள்லாமல் பிறருக்கேன்றே வாழும் உத்தமர்கள் இன்னும் இருப்பதால்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது

ஆனால் மனிதன் வாழ்நாள் முழுவதும் சுயநலத்துடன் பொருளை தேடி அங்குமிங்கும் அலைந்து எதிலும் திருப்தியில்லாமல் திரிந்து மனதில் இருள் சூழ்ந்து மடிந்துபோகின்றான்
மரத்தை பார்த்தாவது இனியாவது மனிதர்கள் திருந்தட்டும்

தியாகம்தான் உலகில் உயர்ந்தது அதனால்தான் இந்த உலகம் அழியாமல் காப்பாற்றப்பட்டுவருகிறது

1 comment:

  1. "தியாகம்தான் உலகில் உயர்ந்தது"
    அருமையான வரிகள் நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete