இவ்வுலகில் செல்வத்திற்கு அதிபதியாகிய
இலக்குமிதேவியை வழிபட்டால்தான் செல்வம் வருமா?
வழிபடாவிட்டால் செல்வந்தராக முடியாதா?
இலக்குமிதேவி இந்து கடவுள்
மற்ற மதத்தினர்கள் இந்துக்களை விட
பெரும் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்களே?அது எப்படி?.
அவர்கள் இலக்குமிதேவியை வழிபாடு செய்வதில்லையே?
மனிதர்கள் செய்யும் நல்வினைகளால் புண்ணியம் சேருகிறது.
தீவினைகளால் பாவம் சேருகிறது.
நல்வினைகளால் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையும் தீவினைகளால்
துன்பகரமான் வாழ்க்கையும் அமைகிறது என்பதுதான் உண்மை.
மனிதர்களின் வாழ்க்கையை நாம் கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை
புரியவரும்.
செல்வம் படைத்தவர்கள் தனக்கு உண்மையான தேவையை மட்டும்
வைத்துக்கொண்டு ஏழைகளுக்கும் துன்பப்படுவோர்களுக்கும் உதவவேண்டும்.
அவ்வாறு செய்யாவிடில் என்ன நடக்கும்
அவர்கள் தீராத நோயால் அவதிபடுவார்கள்.அல்லது
செல்வம் கொள்ளை போகும் அல்லது அவர்கள்
சேர்த்து வைத்த செல்வமே அவர்கள் உயிரை குடித்துவிடும்.
அதனால்தான் செல்வத்தின் பயன் ஈதல் என்றனர் நம் முன்னோர்.
அந்த எண்ணம் வரவேண்டுமானால் இறைவனை நினைத்துகொண்டே இருக்கவேண்டும்.
கர்ணன் தன செல்வத்தை எல்லாம் தானம் செய்து அழியா புகழ் பெற்றான்.
நம்முடைய பாரம்பரியத்தை பார்க்கும்போது தர்மம் செய்ய வறுமை தடை இல்லை என்பதை பலர் வாழ்ந்து காட்டியுள்ளனர்.
அவர்களை தெய்வங்களே நேரில் வந்து பாராட்டி அருள் செய்துள்ளனர்.
நேர்மையாக் உழையுங்கள். தவறுகள் செய்யாதீர்கள்
இறைவன் பார்த்துகொண்டு இருக்கின்றான் உங்கள் உள்ளத்தில் இருந்துகொண்டு.
தருமம் செய்ய தொடங்குங்கள் விளம்பரமிலாமல்
செல்வம் தானே வரும்
ராம நாமம் சொல்லிகொண்டிருந்தால் ராமனை போல் பற்றற்ற வாழ்க்கை சித்திக்கும்.
உங்கள் மனதில் ராம ராஜ்ஜியம் உருவாகும்.
No comments:
Post a Comment