இந்த கேள்வி உலகத்தில் மனிதர்கள் தோன்றிய நாள் முதல் உண்டு
பதில் கிடைத்ததா?
சிலருக்கு கிடைத்தது/பலருக்கு இன்னும் கிடைக்கவில்லை
திருமூலரின் திருமந்திரத்தில் பதில் உள்ளது
ஆனால் அதை பாராயணம் செய்வதற்கு மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள் அதை படித்தவர்கள்
அதில் கூறியுள்ளதை நடைமுறைபடுத்த எந்த முயற்சியும் எடுப்பதில்லை
கடவுளை இன்று எல்லோரும் கோயிலில் தேடுகிறார்கள்
கோயிலில் உள்ள சிலையை பார்த்துவிட்டு அர்ச்சனை,அபிஷேகம் செய்து விட்டு வந்தால் கடவுளை கண்டதாக நினைத்து கொள்கிரார்கள்
சிலர் கண்ணை மூடிக்கொண்டு இருட்டில் கடவுளை தேடுகிறார்கள்
சிலர் கடவுளை கண்டதாக பிதற்றும் போலிகளிடம் சென்று கடவுளை காட்ட சொல்கிறார்கள்
சிலர் வானத்தில் கடவுளை தேடுகிறார்கள்
கடவுள் நம்பிக்கையில்லா வாய்சவடால் அரசியல்வாதிகள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதாக ஊரை ஏமாற்றுகிறார்கள்
ஆனால் திருமூலர் என்ன சொல்கிறார்?
வானத்தில் கடவுளை தேடும் மதி இல்லாதவர்களே
தேனுக்குள் இருக்கும் இனிப்பு சிவப்பு அல்லது கருப்பு நிறமா?
தேனுடன் இனிப்பு கலந்து நின்று இனிப்பது போல்
மனிதனின் உடலுக்குள் ஈசன் ஒளிந்திருக்கின்றான்
அவனை உங்களுக்குள் தேடி கண்டு உணர்ந்துகொள்ளுங்கள்.
உணர்ந்துகொண்டால் இறைவன் எல்லா உயிரிலும் கலந்துள்ளான் என்பதை உணர்ந்துகொண்டு
அகந்தையில்லாமல் எல்லா உயிருடனும் அனுசரித்து வாழ்ந்து ஆனந்தமாக வாழலாம்
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment