ராமா ராமா என்று சொல்லிகொண்டிருந்தால் முக்தி கிடைக்குமா?
ஏன் கிடைக்காது?
காட்டில் வழிப்பறி செய்த ரத்னாகரன் என்பவன் மரா மரா என்று ராம நாமத்தை மாற்றி சொல்லியும் தான் செய்து வந்த பாவ தொழிலை விட்டுவிட்டு மனதை நல வழியில் திருப்பி இறைஅருள் பெற்று வால்மீகி மகரிஷியாகி இராமாயண காவியத்தை படைக்கவில்லையா?
நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்த நம் தேசபிதா மகாத்மா காந்தி ராம நாமத்தை தான் உச்சரித்து ஆன்மீக பலம் பெற்றது மட்டுமல்லாமல் நாட்டு மக்களையும் ராம நாமத்தை உச்சரிக்க வைத்தது மட்டுமல்லாமல் வெவேறு மதம்,ஜாதி அனைத்தையும் கடந்து ஒன்றிணைந்து நம் நாடும் ஆங்கிலயரிடமிருந்து சுதந்திரம் பெறவில்லையா?
முக்தி என்பது மரணத்திற்கு பின் கிடைப்பது அன்று
இவ்வுலகில் வாழும்போதே பெறப்படுவது
யாருக்கும் எதற்கும் அடிமைப்படாமல் அமைதியாக ,மன நிறைவுடன் வாழ்வதுதான் முக்தி
அமைதியில்லா மனதை அமைதியுற செய்வது ராம் நாமம்
நம்பிக்கையுடன் சொல்லி வந்தால் அதன் பயனை உணர முடியும்.
இது சத்தியம்
நீங்க சொல்வதும் சரிதான்.
ReplyDelete