நாம் உயிர் வாழ அளித்திருக்கிறார்
அவற்றில் சிலவற்றைத்தான்
நாம் அறிந்து வைத்துள்ளோம்
நாம் அறியாதது ஏராளம்
அவற்றை நாம் கணக்கிடமுடியாது
ஒரு வரையறைக்குட்பட்ட நம் புலன்கள் மூலம்
தெரிந்துகொள்ளமுடியாது
நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை
அறியும் சக்தியே நமக்கு இல்லை
எல்லாவற்றிற்கும் ஒரு கருவியின் உதவியை நாடுகிறோம்
இல்லாவிடில் மற்றவரின் உதவியை நாடுகிறோம்
இந்நிலையில் கர்வம் கொண்டு பிதற்றுவது தேவையற்றது
இறைவனுக்கு நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும்
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அது முடியாது
கடவுளே இல்லை என்றும் கடவுளை கற்பித்தவன்
முட்டாள் என்றும் பிதற்றுகின்றனர்
அவர்களால் விவரிக்க முடியாதவற்றை
இயற்க்கை என்று மழுப்புகின்றனர்
இந்த அண்ட சராசரங்கள் ,உயிர்கள் அனைத்தும்
ஒரே மூல பொருளான இறைவனிடமிருந்துதான்
வந்துள்ளன
இந்த உலகத்தின் கண்டுபிடிப்புகள் எல்லாம்
ஏற்கெனவே உள்ள மூலபொருட்களிளிருந்து
தான் வெளிவந்துள்ளன
எனவே அகந்தையை விட்டுவிட்டு
இறைவனை சரணடைந்து நம் கடமைகளை
பிறர் மனம் நோகாமல்,பிறரின் வாழ்வை கெடுக்காமல்
அன்பு செய்து வாழ்வதே உண்மையான மார்க்கம்
//பிறர் மனம் நோகாமல்,பிறரின் வாழ்வை கெடுக்காமல்
ReplyDeleteஅன்பு செய்து வாழ்வதே உண்மையான மார்க்கம்// உணமை தான்