Sunday, November 20, 2011

தீய எண்ணங்கள் அழியும்வரை

ஆசைகளே துன்பத்திற்கு காரணம் என்றான் புத்தன்
ஆசைப்பட ஆசைப்பட ஆய்வரும் துன்பம் என்றார் திருமூலர்
ஆசைகளுக்கு அளவே இல்லை
ஒரு ஆசை நிறைவேறியதும் அடுத்த ஆசை தயாராக நிற்கிறது
ஆசை நிறைவேறாவிடில் ஏக்கமாக மாறுகிறது
தீரா கோபமாக உருவெடுக்கிறது
தனக்கு கிடைக்காதது மற்றவருக்கு கிடைத்தால் மனதில் பொறாமை
தோன்றுகிறது
பொறாமை கொண்டஉள்ளம் பொறாமை கொண்டவனையும் அழிக்கும்
பொறாமை கொள்ள செய்தவனையும் அழிக்கும்
ஆசைகள் இருப்பதில் தவறில்லை
அதை நேர்மையான முறையில் நிறைவேற்றிகொள்வதிலும் தவறில்லை
ஆசை பேராசையாக மாறினால்தான் அது அனைவருக்கும்
ஆபத்தை விளைவிக்கும் அணுகுண்டாகிறது
ஒரு நாட்டை ஆள்பவனின் பேராசையால்
அவன் போர் தொடுக்கும் நாட்டு மக்களும்
அவன் நாட்டு மக்களும் காரணமின்றி விரோதம்
பாராட்டி போரிட்டு அழிகின்றனர்.
அதே போல்தான் குடும்பங்களும் சீரழிகின்றன
ராமாயணத்தில் ராவணன் செய்த தவறால் இலங்கையும் அதன் மக்களும் அழிந்தனர்
மகாபாரதத்தில் துரியோதனன் கொண்ட பேராசையால் அவன் குலமே அழிந்தது
இந்த நிலை பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்பும் இன்றும் அதே நிலைதான்
மக்களோ தலைவர்களோ எந்த பாடமும் கற்றுக்கொள்ளவில்லை
இந்த உலகம் அழியும் வரை அப்படியேதான் இருக்கும்
ஒவ்வொரு மனிதனின் மனதில் உள்ள
தீய எண்ணங்கள் அழியும்வரை இந்நிலை
தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்
அதற்காக இப்படியே இதை விட்டுவிட
இறைவனும் விடுவதில்லை
அவன் அனுப்பிவைக்கும்
இறையடியார்களும் விடுவதில்லை
அவர்கள் மனித குலத்தை
நல்வழிபடுத்தும் முயற்சிகளை
செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்
நாம்தான் நம் மனதை தீய வழிகளில் செல்லாமல்
தடுத்து நல்வழியில் வாழ்க்கை நடத்த முயற்சி செய்ய வேண்டும்
அதற்க்கு எளிய வழி இறைவனை
எந்நேரமும் நினைத்து கொண்டு இருப்பதுதான்

No comments:

Post a Comment