என்றார் ரெட்டியப்பட்டி ஸ்வாமிகள்
ஏற்கெனவே பல பிறவிகளில் செய்த நல்வினைகள்
,தீவினைகள் காரணமாக இந்த பிறவி ஏற்பட்டுள்ளது
.மனிதர்களில் சிலர் பிறக்கும்போதே,அங்கம்,குறையுள்ளவர்கலாகவும்
,சிலர் மன நோயுடனும் பிறக்கிறார்கள்.
சிலர் வாழ்நாள் முழுவதும் துன்பத்திலும் தீரா நோயிலும் உழன்று வாழ்கையை கழிக்கின்றனர்.
சிலர் வாழ்க்கை சுகமாக போகின்றது.
சிலருக்கு எல்லாம் இருந்தும் மனதில் அச்சம்
,சிலருக்கு,எதிலும் திருப்தியில்லை,
சிலர் இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதைவிட்டுவிட்டு கவலைபட்டுகொண்டே நாட்களை தள்ளுகின்றனர்.
சிலர் பிறருக்கு கெடுதல் செய்வதையே தங்கள் வாழ்வின் நோக்கமாக கொண்டு பிறரை துன்புறுத்தி. தாங்களும் முடிவில் அழிகின்றனர்.இன்று அனைவரின் மனதிலும் சுயநலம்தான் மேலோங்கியுள்ளது.அதனால்தான் அவர்களும் நிம்மதியாக இல்லை மற்றவர்களையும் அவர்கள் நிம்மதியாக இருக்க விடுவதில்லை
இப்படியாக ஒவ்வொருவரின் வாழ்க்கை ஒவ்வொரு விதமாக இருக்கிறது.
செய்யும் வினைகளினார்ல் பாவ புண்ணியங்கள் ஏற்படுகின்றன.
அதனால்தான் பகவான் கண்ணன் கீதையில் பலனை எதிர்பாராமல்
உங்கள் கடமைகளை செய்யுங்கள் என்று சொன்னான்.
அப்போது நீங்கள் வினைகளில் மாட்டிக்கொள்ள மாட்டீர்கள்.
ஆனால் யார் அந்த அறிவுரையை கேட்கிறார்கள்.
அதனால் இந்த மானிட சமூகமே வினைகளின் பயன்களில் சிக்குண்டு
துன்ப கடலில் மூழ்கி அல்லபட்டுகொண்டிருக்கின்றன.
இதிலிருந்து விடுபடும் ஒரே வழி இறைவனின் பாதங்களை சரணடைவதுதான்
மிக சுலபமான வழி அவன் நாமத்தை ஓதுவதுதான்.
பற்றுகளை விடுவதற்கு பற்றர்வர்களின் தாள பற்றவேண்டும்
ஸ்ரீ ராமனாக அவதரித்த ஸ்ரீமான் நாராயணனின் பாதங்களை பற்ற வேண்டும்
ராம நாமத்தை சொல்லிகொண்டிருந்தால்வினைகளும் நீங்கும்.
மன நிறைவான் வாழ்க்கையும் சித்திக்கும்
நல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.