சங்கரர் சொல்கிறார்,நீயே கடவுள்
ராமானுஜர் சொல்கிறார் ,நீ பகவானுக்கு சரீரம்,
அவனிடம் பக்தி பண்ணு என்கிறார்
மத்வர் சொல்லுகிறார் பகவான் வேறு நீ வேறு
நீ அவனுக்கு தொண்டு செய்பவன் மட்டுமே
சதாசிவ ப்ரம்மேந்திரர் சொல்லுகிறார்
எனக்கு எல்லாம் ப்ரம்மாமாக காட்சியளிக்கிறது
ராமதாசர் சொல்கிறார் இந்த அண்டமனைத்தும் ராம மயம்
கண்ண பரமாத்மா சொல்கிறார் காண்பதனைத்தும் நானே ,
அதன் உள்ளிருந்து இயக்குவதும் நானே என்கிறார்
பொதுவாக எது எப்படி இருந்தாலும் இறைவன் ஆலயங்களில்
உறைந்து அருள் செய்வதாக நம்புகின்றனர்.அங்கு சென்று வழிபாடு என்ற பெயரில் எதையோ நினைந்து,எல்லோரும் செய்வதை செய்து விட்டு தங்கள் ஆன்மீக கடமை முடிந்துவிட்டதாக திருப்திபட்டு கொள்கின்றனர்
இறைவன் எல்லா இடத்திலும் எல்லா உயிர்களிலும் நீக்கமற நிறைந்துள்ளதாக வேதங்கள் சொல்கின்றனவே ,ஏன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆன்மீக பிரசாரகர்களை கேட்டால் ஒரு உதாரணம் சொல்கின்றனர்
நமக்கு பால் வேண்டுமென்றால் பசுவின் வாலையோ அல்லது கொம்பையோ பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா ? அல்லது அதன் மடியின் காம்புகளை பிடித்து கறந்தால் பால் கிடைக்குமா என்று கேட்கின்றனர்.
இறைவனின் சக்தி எல்லா இடத்திலும் நிறைந்திருந்தாலும் கோயிலில் பல காரணங்களால் அங்கு அதிக அளவில் சேமித்து வைக்கபட்டிருக்கிறது என்று விளக்கம் கொடுக்கின்றனர்.
தன்னிடம் கடவுள் உள்ளதை உணர்ந்த ஆத்ம ஞானிகள் எங்கும் செல்வதில்லை.
அவர்களுக்கு எதுவும் தேவையில்லை
சராசரி மனிதனுக்கு தேவையில்லாமல் எதுவும் இல்லை
அதனால் அவன் தேவைகள் நிறைவேறும்வரை ஒவ்வொரு கோயிலாக ஏறி இறங்கி கொண்டிருக்கின்றான்
எல்லாம் உண்மையே .
அவரவர்களின் ஆன்மீக முதிற்சிகேர்ப்ப இறைவனை அடையும் வழியை
தேர்ந்தெடுத்து கொள்வது அவரவர் கையில்தான் உள்ளது
No comments:
Post a Comment