Friday, February 15, 2013
முடி என்னும் மந்திர சொல்
முடி என்னும் மந்திர சொல்
முடி என்றால் ஒரு செயலை முடித்துவிடு
என்று அனைவருக்கும் தெரியும்.
அனைத்து உயிரினங்கள் மீதும் வளரும்
ஒரு உணர்ச்சியற்ற உயிர்
அது உடலில் இருக்கும்வரை அது வளரும்,
சுருளும், வளையும்,நிமிர்ந்து நிற்கும்
,வெட்ட வெட்ட துளிர்க்கும். நிறம் மாறும்.
அதன் நிறம் கருப்பாய் இருந்தாலும் அது அழகு
அது வெள்ளை நிறமாய் வெளுத்தாலும்
அது சிலருக்கு அழகு.
அது வளர்ந்து இருக்கும் இடத்தை பொறுத்து
அதற்க்கு மவுசு அதிகம்.
அது முளை விட்டதும் மனிதர்களை
படுத்தும் பாடு சொல்ல முடியாது.
எல்லா உயிரினங்களும் படாத பாடு படுகின்றன.
மற்றவர்களையும் படாத பாடு படுத்தி வைக்கின்றன.
முகத்தில் முளைத்து துளிர் விடும்
அரும்பு மீசையாகட்டும்,
காடுபோல் செழித்து பற்றி படரும்
கொடுவா மீசையாகட்டும் மனிதர்களையும்
அவர்களை சார்ந்தவர்களையும் ஆட்டி படைக்கிறது.
இல்லாவிடில் முழுவதும் மழித்து பச்சைநிறம்
அல்லது கருப்பு நிறமுடன் சிவந்த முகத்தில் தோன்றும்
அழகுஎன்னவென்பது?
அதனால்தான் என்னவோ திருவள்ளுவரும்
ஒரு தத்துவத்தை சொல்ல முடிக்கு என்று
ஒரு குறளை போட்டு வைத்துவிட்டார் போலும்
(மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின்)
தலை மயிர் நரைத்து விட்டால்
தங்கள் எதிர்காலமே சூன்யமாய் போய்விட்டது
என்று இடிந்துபோகிறது மனிதர் கூட்டம்.
பலருக்கு முடி உழுவதும். உதிர்ந்து போய்விட்டதே
என்று கவலைப்படுகிறது
வழுக்கை தலையர்கள் கூட்டம்.
வெளுத்த முடியினை கருப்பாக்கி பார்த்து
அதில் மகிழ்கிறது இந்த மக்கள் கூட்டம்
சிறிது காலத்திற்கு பிறகு வெள்ளை முடி
தெரிந்ததும் மீண்டும்கருப்பாக்குகிறது
சாயங்களின் துணை கொண்டு
சாயம் வெளுத்து போன இந்தமனிதர்கள்.
இன்னும் சிலர் விதவிதமாய் வண்ண சாயங்களை
தலையில் தடவி ஆட்டம் போடுகின்றனர்.
இன்னும் சிலர் லட்சக்கணக்கில் சிலவு செய்து
வழுக்கைதலையில் மயிர் நடவு விழா செய்கின்றனர்.
தலையில் மயிர் முளைக்க,வளர என
ஏராளமான மாத்திரைகள், எண்ணைகள்,மூலிகைகள்
சாய பூச்சுக்கள் சிகிச்சை முறைகள்
என கோடி கோடியாய் பணத்தை கறக்கின்றனர்
காற்றுள்ள போதே தூற்றி கொள்ளும் வியாபாரிகளும்,
மருந்து கம்பனிகளும், மருத்துவர்களும் வியாபாரிகள்.
எதுவும் செய்ய முடியாத நிலையில்
தலைக்கு விரும்பியவாறு விக்குகளை வைத்துக்கொண்டு
பொய்யான மகிழ்ச்சியில் திரிகின்றனர்.
முடிக்கு இந்த பூவுலகில் இவ்வளவு மகாத்மியம்
இருப்பதினால்தான் என்னவோ மலையப்பன்
குபேரனுக்கு தான் பட்ட கடனை தீர்க்க
தன் பக்தர்களிடம் முடி காணிக்கை
கேட்கிறானோ தெரியவில்லை.
அவனுக்கு செலுத்தும் முடியினை ஏலத்தில் விட்டு
அதை காசக்குகிறான். போலும்.
(இன்னும் வரும்)
படம்-நன்றி-google
Subscribe to:
Post Comments (Atom)
என்னென்ன வித்தைகள் நடக்கின்றன-ஒரு 'முடி'விற்கு(ம்) வரும் வரை...
ReplyDelete'முடி ' இன்னும் வளரும்
Delete