நீல மயில் மீது
ஞாலம் வலம் வந்த
முருகா
நீல மயில் மீது
ஞாலம் வலம் வந்த
முருகா நீதான்
எனக்கு வரமருளவேண்டும்.
நிழலை நிஜம் என்று
நித்தம் நித்தம் நம்பி
ஓடி அலையும் என்
மனதை நின் திருவடியில்
நிலை பெற செய்ய வேண்டும்
நின் புகழ் பாடும்
பாமாலையை பாடாமல்
வாடி வதங்கும் மாலைகளை
சூடிய மாந்தர் புகழ் பாடி
வயிறு வளர்க்கும் நிலை
மாற வேண்டும்
மலைமேல் சிலையாய்
நின்று அருளும் உன்
வடிவை மனதில் நினையாமல்
கணத்தில் தோன்றி மறையும்
மாயப்பொருட்களை காலமெல்லாம்
நினைந்து கண்ணீர் வடிக்கும்
போக்கு அகலவேண்டும்
முருகா முருகா என்று உன் நாமம்
சொல்லி உருகாமல் நொடிக்கொரு
முறை மாறும் மனம் கொண்ட
அற்ப மனிதர்களிடம் ஆசை கொண்டு
துன்பத்தில் உழலும் என் துன்பம்
போக்கவேண்டும்.
யாமிருக்க பயமேன் என்று
அபயம்தர நீ இருக்க
இதர உபாயங்களை நாடுவதில்
பயனில்லை என்று உணர்த்திய முருகா
உன் பாதங்களே சரணம் சரணம்
No comments:
Post a Comment