MEDITATION என்னும் மாயவலை
இன்று யாரை பார்த்தாலும் meditation
என்ற வார்த்தையை உச்சரிக்கிறார்கள்.
அதுவும் மெத்தப் படித்த மெத்தை
(அடுக்கு மாடி கட்டிடம்)யில் வசித்துக்கொண்டு
பல லட்சம் செலவழித்து கல்வி பயின்று
பல கோடி சம்பாதித்த பின் பல்வேறு ஆசைகள்,
குழப்பங்கள்,ஏமாற்றங்கள் இழப்புக்கள்
என மனம் குழம்பிப்போய்
எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத
ஒரு சூழ்நிலை கைதிகளாக
வலம் வருபவர்களே இன்று அதிகம்.
இந்த பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க
கூடி கும்மாளமடித்தும் குடித்தும்,
ஊரெல்லாம் சுற்றியும் மனம்
அமைதியடையாமல் இருக்கும்
கூட்டம் இன்று பெருகிவிட்டது.
அதனால் இந்த கூட்டத்தை குறி வைத்து
ஆன்மிகம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும்
கூட்டமும் கோடி கோடியாய் காசை அள்ளுகிறது.
வாழ்வில் எல்லா சுகங்களையும் அனுபவித்த
இந்த மேல்தட்டு கூட்டம்
ஆன்மீக சுகத்தையும் அதுபோல்
ஆடம்பரமான வசதிகளுடன் பெற்றுவிடலாம்
என்று நம்பி சேர்த்து வைத்த காசை எல்லாம்
இந்த போலி சாமியார்களிடமும்,
சாமியாடிகளிடமும் கொண்டு அழுதுவிட்டு
ஆன்மீகத்தில் எந்த முன்னேற்றமில்லாமல்
ஏற்கெனவே இருந்த உளைச்சலை
அதிகமாக்கிகொண்டவர்களே இன்று அதிகம்.
ஆன்மீக கொள்ளையர்கள் அவர்களுக்கு
தியானத்தை பற்றி சொல்லும் கொடுக்கிறார்களாம்.
ஒவ்வொரு நிறுவனமும் தியானத்திற்கு
பலவிதமான் பெயர்களை சூட்டி எல்லோரையும்
சேர்த்துக்கொண்டு லூட்டி அடிக்கின்றனர் .
இன்னும் சிலர் போதை பொருட்களை
வருபவர்களுக்கு அவர்களறியாமல் அளித்து
அவர்களை மயக்க நிலையில் ஆழ்த்தி
அவர்கள் தியானத்தில் இருப்பதாக
ஒரு மாய தோற்றத்தினை ஏற்படுத்துகின்றனர்.
பொய்யையும் புளுகையும் இட்டுக்கட்டி
சில வடமொழி ஸ்லோகங்களை மனப்பாடம் செய்து
கவர்ச்சியான ஆங்கிலத்தில்
அழகான பெண்களை அருகில் வைத்துக்கொண்டு
உச்சரித்துவிட்டு.அங்கு வருபவர்களை
தங்களுக்கு அடிமை சேவகம்
செய்ய வைத்துவிடுகின்றனர்.
வருபவர்களும் தாங்கள் குருவிற்கு
சேவை செய்கின்றோம் என்று நம்புகின்றனர்.
இதை அறியாமல் வருபவர்கள் அவர்களுக்கு
அடிமையாகி விடுவதுடன் இந்த போலிகள்
செய்யும் சமூக விரோத செயல்களுக்கும்
அவர்களை அறியாமலே உடன்தையாகிவிடுவதும் உண்டு
ஏற்கெனவே அவர்களிடம் உள்ள சிக்கல்களே
தீராத நிலையில் மேலும் புதிய சிக்கல்களில்
சிக்கிகொள்வதுடன் பெரும் பொருளையும்
இழக்க நேரிடுகிறது.
வெளியில் சொல்ல வெட்கம்.
மனதில் உள்ளே துக்கம்.
ஆன்மிகம் என்பது செலவில்லாமல் கிடைப்பது.
அதற்க்கு எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை.
எதுவும் செய்யாமல் இருப்பதுதான்
உண்மையான இன்பம் தருவது
எதுவும் செய்யாமல் இருப்பது என்றால்
அவரவருக்கு ஏற்ப்பட்ட, ஏற்றுக்கொண்ட கடமைகளை செய்யாது,பொறுப்பின்றி சோம்பேறியாய்
வெட்டியாய் திரிவது என்று பொருள் அல்ல
பிறரை வாட்டும் செயலை செய்யாமல் இருக்கவேண்டும்.
பிறர் சொத்தை அபகரிக்காமல் இருக்கவேண்டும்
ஆன்மிகம் என்பது கொடுப்பதுதான்
பெறுவது அல்ல .
துவக்கத்தில் தான் பயன்படுத்தியது போக
தன்னிடம் உள்ளதை இல்லாதவருக்கு
கொடுப்பதுதான்.
காலபோக்கில் தன்னிடம் உள்ளவற்றை
தேவையானவர்களுக்கு தியாகம் செய்வது.
முதலில் பொருளாக தொடங்கி,
சேவையாக மலர்ந்து அன்பாக
பரிநமளிப்பதே ஆன்மிகம்.
ஆனந்தம் என்பது நம் உள்ளே உள்ளது
அதை வெளியில் தேடவேண்டியதில்லை
என்ற உண்மையை புரிந்து கொள்ளவேண்டும்.
தன்னிடம் ஆனந்தம் உள்ளது .
அது எந்த சூழ்நிலையிலும் மாறாதது என்பதை
புரிந்துகொள்வதுதான். உண்மையான ஆன்மீகம்.
புரிந்துவிட்டால் நம் மனம் அமைதிடைந்துவிடும்.
பிறகு இந்த உலகில் நாம்சுயநலம் கருதி எந்த செயலையும் செய்யமாட்டோம்.
சுயநலம் இல்லாத இடத்தில்
சுகமில்லாமல் வேறென்ன இருக்கும்.?
Pic.-courtisy-googleimages
சாரே ! அது meditation. medidation அல்ல.
ReplyDeleteசுப்பு தாத்தா.
ஐயா
Deleteஎன் கண்கள் செய்த தவறா அல்லது
விரல்கள் செய்த தவறா என்று தெரியவில்லை
தவற்றை சுட்டி காட்டியதற்கு நன்றி
தற்போது பதிவில் தவற்றை சரி செய்து விட்டேன்,
அனுப்பிய அஞ்சலை
நான் ஒன்றும் செய்வதற்கில்லை.
அது அறுந்து போன பட்டம்.
அதன் நூல்
என் கையில் இல்லை.
அருமையான கருத்துகள். நண்பர்கள் அனைவரும் படிக்க வேண்டுகிறேன். எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteநன்றி திரு Pattabi Raman.
This comment has been removed by the author.
Deleteவருகைக்கும்
Deleteகருத்துக்கும் நன்றி RN sir
:))
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteகுறியீடுகளுக்கு பொருள் என்னவோ?
ம்.. நல்ல கருத்துக்கள்... அதிலும் நேர்த்தியான வார்த்தை தேர்வுகள்...
ReplyDeleteமிக்க நன்றி... தங்கள் அடிமனத்து கோபம் வார்த்தைகளில் தெரிகிறது....தெரிக்கிறது.....
என் வரையில் தெரிந்ததை இங்கு பங்கு வைக்க ஆசிக்கிறேன்... தவறிருந்தால் பொருத்தருளவும்..
What is Meditation.....???
எனும் கேள்விக்கு நிறைய பதில்கள் கேட்டாலும்... சிம்பிளாய், நச்சுன்னு கேள்விப்பட்டு... எனக்கு பிடித்த ஒரு பதில் கீழ் குறிப்பிடுகிறேன்....
Silencing of Body, Mind and Intellect...
மிக ஆழமான நேர்த்தியான பதில்... என தோன்றுகிறது...
இந்த பதிலுக்கு.... என் வரையிலான விளக்கம்.....
1. உடல்...எப்போதும் விழிப்புடன் இருக்கும்.... ஒரு உதாரணத்துக்கு எறும்பு ஊறினால் என்ன செய்யும்,மூளைக்கு தகவல் தரவும்.. மூளை அனுப்பும் செய்தியை செய்யவும் தயாராய் இருக்கும்......
நல்ல ஒரு சூழலில், இந்த உடலை தளர்த்தி, அமைதிப்படுத்த வேண்டும்... வரும் கட்டளைகளை பற்றி அதீத கவலை கொள்ளாமல்... இலகுவாக நீயூரல் சிஸ்டத்தை வைத்துக் கொள்ளும் ஒரு நிலை.... தூக்கம் இல்லாத... விழிப்பும் இல்லாத..... 7 HZ தொடங்கி 14 HZ வரையிலான ஒரு பிரிக்குவென்ஸி.....
இன்னிலையே Silencing of Body.........
2. முதல் பாயிண்டில் சொன்னது போல, மனதையும் அமைதிப்படுத்த வேண்டும்...
Silencing of mind........
இது ரெண்டும் நடந்தால் கூட............ பகுத்தறிவு அமைதியாகாது..
‘யேய்... இதுதான் தியானமா... அட சூப்பரா இருக்கே...’
என கிச்சடி கிண்டும்...
அதையும் அமைதிப்படுத்தி.....
ஒரு தூய சூழலில் இருந்தால்............
அந்த நிலையில் நீடித்தால்...........
அது தான் ஒரு மிகப்பெரிய தொடக்கம்.....
இதற்கு மேல் சொல்ல கடினம்.......... அல்லது விண்டவர் கண்டிலர்... கண்டவர் விண்டிலர்.....
ஆனால் இது சுலபமில்லை...
இம்மாதிரி ஒரு மேஜிக் நடக்க....... அதாவது உடல் அமைதிப்பட குறைந்த பட்சம் சில நிமிடங்கள் பிடிக்கும் (24 நிமிடம் என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது)........
ஏன் கஷ்டம்.... இம்மாதிரி ஒரு உடல் மன பகுத்தறிவு அமைதி எனும் அந்த நிலை வரும் வரை பொறுமையாக இருக்க உடலுக்கு முடிவதில்லை....
குறுக்கு வலி... இடுப்பு வலி... பெருங்கால் பிடிப்பது என ஏகப்பட்ட உடல் உபாதைகள்....
என்றாலும் தியானத்திற்க்கான முயற்சியே ஒரு மிகப்பெரிய ஆறுதல்....
அறிந்ததை, உணர்ந்ததை மெலிதாக சொல்லி விட்டேன்... வேண்டுமானால் இன்னும் சொல்லுவேன்...
தொடர்புக்கு lawranceprabha@gmail.com
வருகைக்கும்கருத்துகளுக்கும் நன்றி
Deleteதியானம் என்பதற்கு ஏன்
இவ்வளவு நீண்ட விளக்கம் ?
சும்மா இருங்கள்
அதுவே போதும்.
மனதை அடக்க நினைத்தால்
நீங்கள்தான் அதற்க்கு அடங்க நேரிடும்
ஒரு குழந்தை விளையாடுவதை
எப்படி அமைதியாக பார்த்து இன்பம்
அடைகிறோமோ மனதையும்
அதன் போக்கில் விட்டுவிடுங்கள்
அதை நீங்கள் தடுக்க நினைத்தால்,
அதன் போக்கை மாற்ற நினைத்தால்
அது சண்டித்தனம் செய்யும்.
அமைதியாக இருந்தால் அது விளையாடிவிட்டு
உங்கள் மடியில் வந்து படுத்து தூங்கிவிடும்.
பிறகு நீங்கள் உங்கள்
வேலைகளை பார்க்கலாம்.