Friday, February 8, 2013
விடை அறிந்த பின்னும்?
விடை அறிந்த பின்னும்?
ஒரு கணக்கு.
படித்தவனுக்கும் பாமரனுக்கும்
விடை புரியாத கணக்கு.
படித்தவன் கணக்கிற்கும்
விடை தெரிந்து கொண்டு விட்டான்.
எந்த வழி முறையை கையாண்டு
கணக்கு போட்டால் விடை கிடைக்கும் என்று தெரிந்துவிட்டது.
படிக்காதவனுக்கோ விடை தெரியாது.
ஆனாலும் அவனிடம் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
அதுவும் அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது.
அது அவனை கடைதேற்றுகிறது.
அதிகம் படித்தவன் பல வழிகள்
இருப்பதை கண்டறிகிறான்.
ஆனால் எந்த வழி சிறந்தது என்று ஆராய்ச்சி செய்வதிலும்,
தான் ஒரு வழியை தேர்ந்தெடுத்து
அதை மற்றவருக்கு சொல்ல அவர்கள் அதை மறுப்பதும்,
வாக்கு வாதமாக ,போராட்டமாக
அவன் வாழ்வு அவனுக்கு பயன்படாமல்
போய்க்கொண்டிருக்கிறது.
சிலர் மற்றவர்களுக்கு
இப்படி பல வழிகள் உள்ளது என்று
பிரசாரம் செய்வதிலேயே அவர்கள்
ஆயுளை முடிதுகொள்ளுகிறார்கள்
சொல்பவர்களும் சரி கேட்பவர்களும் சரி.
அறிந்துகொண்டதை செயலில் காட்டி
உண்மையை அறிந்துகொண்டு கடைதேறுபவர்கள்
பல கோடி மனிதர்களில் ஒரு சிலரே.
சிலருக்கு எந்த வழியை தேர்ந்தெடுப்பது
என்ற குழப்பமே வாழ்நாள் முழுவதும் நிலவுகிறது.
சிலர் புத்தகங்களில் அதை தேடுகிறார்கள்,
மனிதர்களிடம் தேடுகிறார்கள்.
பல இடங்களில் சுற்றி சுற்றி தேடுகிறார்கள்.
அவர்களுக்கு ஒன்றும் புரிவதில்லை.
எந்த வழியிலும் அவர்கள் முழுமையாக
முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்வதில்லை.
பலர் அவர்கள் செல்லும் வழிதான் சிறந்தது என்று மற்றவர்களை கட்டாயபடுதுவதும், மற்ற வழிகள் புறம்பானது என்றும். மக்களை திசை திருப்பிவிடுகிறார்கள்.
ஆனால் எந்த வழியை பின்பற்றி நடந்தாலும்
இறுதிவரை அந்த வழியை கடைபிடித்து
ஒழுகியவர்கள் உண்மையை அறிந்துகொண்டிருக்கிரார்கள் என்பது யாராலேயும் மாற்ற முடியாத உண்மை.
ஆனால் உண்மையில் உண்மையை
அறிந்துகொள்வது மிக சுலபம் என்று
.உண்மையை அறிந்துகொண்ட பின்
அவர்களுக்கு தெரியும்.
ஆனால் அந்த உண்மையை அறியும்வரை அந்த உண்மை தன் எதிரே இருந்தாலும் அறிய இயலாத நிலை உள்ளது.
அதுதான் அந்த உண்மைபொருளின் மகத்துவம்.
தந்தை தன் எதிரே இருந்தாலும்
தன்னோடு பல நாள் பழகினாலும்
இவர்தான் உன் தந்தை என்று
தாய் சொல்லாவிடில்
தந்தையை அறிந்துகொள்ள முடியுமோ?
(இன்னும் வரும்)
Subscribe to:
Post Comments (Atom)
ஒவ்வொன்றும் சிந்திக்க வேண்டிய வரிகள்...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete