Thursday, February 21, 2013

மகாபாரத கதையின் தத்துவம் என்ன?





மகாபாரத கதையின் 
தத்துவம் என்ன?

நான் சொல்ல வந்தது வேறு
ஆனால் இங்கே சொல்லுவது வேறு
அதுதான் இறைவன் சித்தம் போலும். 

எத்தனை யுகங்களுக்கு கதையை படிப்பது,
அவரவர் கற்பனைக் கேற்ப கதை விடுவது.

கதை பாமரனுக்கு இருக்கட்டும் 
ஆன்மீகத்தில் ஓரளவு முன்னேறிய நிலையில் இருப்பவர்களும்.பிரவசனம் செய்பவர்களுக்கு கைதட்டி தலையை ஆட்டி கொண்டிருந்தால் என்ன பயன்?

தத்துவம் எங்குண்டோ
தத்துவனும் அங்குண்டு 
என்றார் திருமூலர். 

தாயிற் சிறந்த தயாவான 
அந்த தத்துவனை 
அறிந்து கொள்ளவேண்டாமோ?

தத்துவங்களை பற்றி பேசியே 
பொருள் தேடி,உண்டு, விலங்குகளை
போல் விதவிதமாக உறவு கொண்டு 
உறங்கி,கழிந்து ஆயுள் முழுவதும் 
செய்ததையே தினமும் செய்து
பேசியதையே பேசி,
பார்த்ததையே பார்த்து 
கழிப்பதற்க்கா 
இந்த மனித பிறவி. 

மறலி ஒவ்வொரு கணமும் நம்மை விரட்டிகொண்டிருக்கிறான். 

பிறவி பெற்றதன் பயனை நாடாது 
இந்த ஆன்மாவை சிறிது காலம் தாங்கி அழிந்து போகக்கூடிய உடலையும் கணத்திற்கு  கணம் மாறி கொண்டிருக்கும் மனதையும் நம்பி 
மோசம் போகலாமா? 

விழித்துகொண்டால் 
பிழைத்துகொள்ளலாம்

ஏற்கெனவே காலம் என்னும் பாம்பு 
ஒரு தவளையை கவ்வி பிடித்து விட்டது 
அது சிறிது சிறிதாக அதை விழுங்கிகொண்டிருக்கிறது 
ஆனால் அந்த தவளையோ அதை உணராமால் அதன் முன்னே நின்றுகொண்டிருக்கும் பூச்சிகளை பிடித்து தின்பதில் மும்முரமாய் இருக்கிறது. 

பாம்பின் நிலையும் அதுதான் 
அதை பிடிக்க ராஜனாகமும், கழுகும் 
வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கின்றன. 

ஆறறிவு உள்ள மனிதர்களும்  
அப்படிதான் இருக்கிறார்கள். 

உலக இன்பங்கள் மனிதர்களை 
களைத்து போக செய்கின்றன.

உடலை உளுத்துப்போக 
செய்கின்றன 

உளுத்துப்போன உடல் 
நோய் வாய்ப்ப்படுகிறது

உடல் சக்தி இழந்தால் 
உள்ளம் சக்தி இழக்கிறது. 

மனமோ கடந்த கால நினைவுகளை மூழ்கி
நிகழ் காலத்தை நிர்மூலமாக்கிறது

அதுமட்டுமல்லாது கற்பனையான பயங்களை உண்டுபண்ணி மனிதர்களின் செயல்திறனை குறைக்கின்றன அல்லது முழுவதுமாக செயலிழக்க செய்கின்றன. 

மகாபாரதம் கூறும் 
பாடம் என்ன? 

ஜெயித்தாலும் தோற்றாலும்
இவ்வுலகில் எதுவும் நமக்கு
சொந்தம் கிடையாது.

அரசன் ஆண்டியாவான். 
ஆண்டியும் அரசனாவான் 

ஆனால் எந்நிலையிலும் 
இறைவனை மறவாது இருப்பவர்கள். 
அவனருளால் துன்பங்களை தாங்கும் 
ஆற்றலையும் அவன் அருளையும் 
பெறுவார்கள். என்பதை உணர்த்துவதை 
புரிந்துகொண்டு. இறைநினைவோடு 
கூடிய வாழ்க்கையை வாழவேண்டும். 

 படம்-நன்றி-google-images

6 comments:

  1. /// ஜெயித்தாலும் தோற்றாலும்
    இவ்வுலகில் எதுவும் நமக்கு
    சொந்தம் கிடையாது. ///

    எல்லாம் சாம்பல்... அதுவும் பறந்து விடும்...

    ReplyDelete
    Replies
    1. மந்திரித்த சாம்பல்
      திருநீறு

      சிவனை நினைந்து
      நெற்றியில் அணிந்திட
      வாழ்வில் வெற்றிகள் சேரும்

      குமரனை தியானித்து
      நீறணிய வினைகள்
      வெந்து சாம்பாலாகும்

      அம்மனின் திருவடி
      பட்ட சாம்பல்
      அயிஸ்வரங்களை
      அள்ளித்தரும்

      ஞானி கணபதியை தரிசித்து
      திருநீறு அணிந்துகொண்டால்
      தொட்ட காரியமெல்லாம் துலங்கும்
      நம் வாழ்வில்

      மகான்கள் வாழ்த்தி அளிக்கும்
      திருநீறு மன சஞ்சலத்தை
      போக்கும்.

      முருகனுக்கு அபிஷேகம் செய்த
      திருநீற்றை உட்கொண்டால்
      தீரா பிணியகலும்

      வெறும் சாம்பல்
      என்று சொல்லாதீர்
      அனைத்து வளங்களும்
      தரும் திருநீறு என்று சொல்லுவீர்

      இன்னும் அதிகம் திருநீறு
      பற்றி அறிய வேண்டுமென்றால்
      படியுங்கள் திருநீற்று பதிகம்

      Delete
  2. ராமரசம் என நினைத்தேன். கிருஷ்ணாமிர்தமாய் உள்ளது. :)

    ReplyDelete
    Replies
    1. இருப்பதே ஒரே ரசம்தான்

      அவ்வப்போது அது இருக்கும்
      பாட்டிலின் மீது ஒட்டப்படும்
      லேபில்கள் மட்டும் மாறும்.

      அதை புரிந்துகொண்டால்
      இந்த உலகில்
      குழப்பங்கள் இல்லை

      .புரிந்துகொண்டவர்கள்
      அமைதியாய்
      ஆனந்தமாய்
      இருக்கிறார்கள்

      புரியாதவர்கள்
      தானும் துன்புற்று இந்த உலகையும்
      துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிரார்கள்

      அவ்வளவுதான் .

      Delete
  3. Replies
    1. That is good
      Life is to enjoy
      Life is to love
      Life is not for entertainment only
      It is for enlightenment also
      Life is to give and and not to take
      Life is to liberate our soul from bondage of birth and deaths
      Life is to pray to GOD
      and not become a prey to
      Dogs of desires

      Reading alone is not sufficient
      It should ignit your spark
      already dormant in you.

      Thank You
      God Bless you.

      Delete