Monday, February 25, 2013

யசோதையும் கண்ணனும்


யசோதையும் கண்ணனும்



யசோதையையும்  கண்ணனையும் 
வரைய நினைத்தேன். வரைந்தேன் 























கண்ணன் அவன் தாயோடு 
ஒட்டி நின்றுகொண்டு நம்மை 
பார்க்கும் அழகே அழகு. 

கற்பனை உதித்தது.
கட்டுரை  வந்தது. 

கண்ணன்:அம்மா எனக்கு வெண்ணை வேணும்

யசோதை:அதான் இப்போது கொடுத்தேனே

கண்ணன்:அதை நான் எப்போதோ
சாப்பிட்டுவிட்டேன்.

யசோதை:கொஞ்சம்பொறு.
இப்போதுதான் தயிர் கடைய
ஆரம்பித்துள்ளேன். தருகிறேன்.

கண்ணன்:முடியாது எனக்கு இப்பவே வேணும்.

யசோதை:  வெண்ணையை உறியில்
வைத்திருக்கிறேன்.
உன் அண்ணன் பலராமனை
எடுத்து தர சொல்லு.

கண்ணன்: பலராமன் அதை
அப்போதே சாப்பிட்டுவிட்டான்.

யசோதை:கொஞ்சம் பொறுடா கண்ணா
நீ நல்ல பிள்ளை அல்லவா .என் செல்லமே

கண்ணன்: சரிம்மா

யசோதை: யசோதை: அது சரி நீ ஏன்
வெண்ணையை மட்டும் விரும்பி உண்கிறாய்?
நான் கொடுப்பது போதாது  என்று
மற்றவர் வீட்டிலும் திருடி உண்கிறாய் ?


கண்ணன்:எனக்கு வெள்ளை உள்ளம்
உடையவர்களைதான் பிடிக்கும்.
அதை உணர்த்தும் வகையில்தான்
வெண்ணையை நான்
கையில் வைத்திருக்கிறேன்

யசோதை: போடா நீ சொல்வது
எனக்கு ஒன்றும் புரியவில்லை

கண்ணன்: உனக்கு மட்டும் அல்ல
இந்த உலகத்தில் யாருக்கும் புரியவில்லை.

2 comments:


  1. 4:27 PM (50 minutes ago)
    Gopalakrishnan
    to me
    Dear Sir,

    படம் அழகோ அழகு.
    நல்லா ரொம்ப ஜோரா
    வரைஞ்சிருக்கிறேள்.
    பாராட்டுக்கள்.

    படைப்பவனையே
    படைத்த படைப்பாளியும்
    காப்பவனையே [தூரிகையால்] காக்கும்
    கில்லாடியுமான பதிவர் பட்டாபிராமன் சார் ...... வாழ்க வாழ்கவே.;)))))

    //யசோதை: போடா நீ சொல்வது
    எனக்கு ஒன்றும் புரியவில்லை

    கண்ணன்: உனக்கு மட்டும் அல்ல
    இந்த உலகத்தில் யாருக்கும் புரியவில்லை. //

    எனக்குப்புரிந்து விட்டதூஊஊஊஊ.

    உங்களிடம் இனி அனாவஸ்யமாக ஏதும் வாதாடக்கூடாது என்று.

    அன்புடன் VGK


    Pattabi Raman
    5:17 PM (1 minute ago)

    to Gopalakrishnan

    தாயே யசோதா
    உந்தன் ஆயர்குலதுதித்த
    மாயன் கோபாலக்ருஷ்ணன்
    செய்யும் ஜாலத்தை கேளடி.

    இன்னும் சொல்வார் ஊத்துக்காடு
    வேங்கடசுப்பையர்
    கண்ணனை பற்றி

    அவனை வேண்டி அழைத்தால்
    ஆடாது அசங்காமல்
    கண்ணன் வருவான்.

    ஆடாது என்றால் அடங்காது
    அங்குமிங்கும் திரியும்
    நம் மனம் அவனை மட்டுமே
    நினைந்து காற்றில்லாத
    இடத்தில் ஆடாது அசங்காது
    எரியும் தீபம்போல
    நின்றால் அவன் வருவான்

    அதற்க்கு நீங்கள் தயாரா?



    ReplyDelete
  2. படம் அழகோ அழகு...

    உரையாடல் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete