மனிதனின் சிறுமைகளும்
இறைவனின் பெருமைகளும்.
தண்ணீரில் உள்ள கிளிஞ்சல்கள்
சூரிய ஒளியில் வெள்ளிபோல்
மின்னுகின்றன.
அதுபோல்தான் நம்முடைய
பெருமையும்.
நம்மிடமுள்ள சிறுமைகளை
இறைவன் நீக்கிவிட்டால்
நாமும் அவன்போல் மின்னலாம்.
அதற்க்கு பொறுமை மிக வேண்டும்.
அதற்காகத்தான் அவன் திருவடிகளை
அல்லும் பகலும் நாடவேண்டும்.
அவன் பெருமைகளை அனைவருக்கும்
எடுத்து சொல்கிறேன்.
கடலில் பெய்யும் மழைபோல்
இவ்வுலக மோகத்தில் மூழ்கியுள்ள
மனிதர்களின் கண்களில்
அவை படுவதில்லை .
இறைவனே இவ்வுலகிற்கு பலமுறை
வந்து உண்மையினை உணர்த்தி சென்றான்.
இந்த மானிடம் அனைத்தையும்
மறந்துவிட்டு மாயையில்
மூழ்கி கிடக்கிறது
மது என்ற அரக்கனை அழித்த
மதுசூதனை மறந்துவிட்டு மதுவின்
மயக்கத்தில் மயங்கி கிடக்கிறது இந்த உலகம்.
மாதொரு பாகனை நினையாமல்
மாதரை நினைத்து நினைத்து
மாய்ந்து போகிறது மனித குலம்.
அடியவர்களை காக்க ஆயுதம்.
ஏந்தினான் இறைவன்.
இன்றோ மனிதர்கள் கையில்
ஆயுதங்களுடன் சுற்றி திரிகின்றார்
அகப்பட்டோரை அடித்து கொல்ல.
அன்பில்லா உலகம்
அன்பு மயமான இறைவனை
பூசிக்கிறது
யாசிக்கிறது அன்பை அல்ல
அழியும் பொருட்களை தா என்று?
அழியாத இறைவனுக்கு
அழியும் பொருட்களை சாற்றி
அவனை கோயிலுக்குள்
அடைத்துவைத்து
அவனை பாதுகாக்க
ஆயுதம் தாங்கிய காவலாளிகளை
நியமித்து. அமைதியில்லாமல்
தவிக்கிறது ஆன்மிகம் பேசும்
அறியாதோர் கூட்டம்.
நம்மை பாதுகாக்கும்
இறைவனுக்கு எதற்கு பாதுகாப்பு?
நம்முடைய பாதுகாப்பை நாடுபவன்
நம்மை எப்படி பாதுகாக்கமுடியும்
என்ற அடிப்படை தத்துவத்தை கூட
புரிந்து கொள்ள முடியாத
இந்த மனித இனம் எப்படி
இறைவனை உணரமுடியும்?
இந்நிலையில் இவன் சொல்லுவதா
இவர்கள் காதில் ஏறப்போகிறது?
எல்லாம் இறைவன் சித்தம்.
நல்ல கருத்துக்கள்...
ReplyDeleteProfile Picture-யார் ஐயா...?
நான்தான்
Deleteஎன் 15 வயதினிலே