Friday, March 1, 2013

பாரோர் போற்றும் பரந்தாமனே


பாரோர் போற்றும் பரந்தாமனே 


























விண்ணிலிருந்து
மண்ணுக்கு வந்தவா
அவன்தான் கண்ணன் என்ற
காண்போர் மனதையெல்லாம்
கொள்ளை கொண்ட யாதவா

அகந்தை கொண்டு பிறரை
அடிமைகொண்டு துன்புறுத்திய
அசுர குணம் கொண்டவர்களை
கூண்டோடு அழித்தொழித்தவா

அவன் பாதங்களையே
சரண் என்று
அடைந்தோரை
அருகில் நின்று காத்தவா

கொட்டும் மழையை பெய்யவைத்து
ஆயர் குலமக்களை துன்பத்திற்கு
ஆளாக்கிய இந்திரனின் கொட்டத்தை
அடக்க குன்றை குடையாய்
பிடித்து நின்று காத்த  கொற்றவா

கடமை செய் என்னும்
அவன் மந்திரத்தை
சிரமேற்கொண்டு நடந்த
 பக்தனுக்கு அருள் செய்ய
அவன் வீட்டு வாசலில்
கால்கடுக்க நின்ற தூயவா

எட்டெழுத்து மந்திரமானாய்
சிலையாய் மலைமேல் நின்றாய்

கலியுகத்தில் கஷ்டங்களை
போக்கியருளும்  அஷ்டலக்ஷ்மிகள்
வாசம் செய்யும் ஸ்ரீ நிவாசனானாய்

படியேறி வருவோர்க்கு
மிடி தீர்க்கும்
பக்த வத்சலனானாய்

பாரோர் போற்றும் பரந்தாமனே

உன் உருவம் என் நெஞ்சில்
நிலைக்கட்டும் எப்போதும்

உன் நாமம் எக்கணமும்
என் நாவில் ஒலிக்கட்டும்.






4 comments:

  1. Replies
    1. உருகாதோர்
      உள்ளத்தில் உட்புகான்
      அந்த உத்தமன்

      Delete
  2. உன் உருவம் என் நெஞ்சில்
    நிலைக்கட்டும் எப்போதும்

    உன் நாமம் எக்கணமும்
    என் நாவில் ஒலிக்கட்டும்.

    எங்களின் பிரார்த்தனையும் இதுவே!

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனை நிச்சயம் பலிக்கும்
      அனைத்திலும் அவனை
      கண்டுகொண்டால்

      Delete