மகரிஷிகளும் ஞானிகளும் (1)
கேள்விப் பட்டிருக்கிருக்கிறோம் பல
யோகிகளை பற்றியும் மகரிஷிகளை
பற்றியும்.சமீப காலத்தில் வாழ்ந்த
யோகிகளையும் ஞானிகளை பற்றியும்
அவர்கள் தங்கள் வாழ்நாளில்
நிகழ்த்திய அற்புதங்களையும் கண்டிருக்கிறோம்.
பலருக்கு அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது.
நம்மைப்போல உடலுடன்
நம்மிடையே வலம் வந்த அவர்கள்
பூத உடலை உகுக்கும்
காலம் நெருங்குவதை அறிந்து
அதிலிருந்து வெளியேறும் வகை
அறிந்துகொண்டு தன் ஆத்மாவை
ஒளிஉடலில் நிலைபெற
செய்துகொண்டு என்றும் மாறா
பேரின்பத்தில் வலம்
வந்து கொண்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு இவ்வுலக தேவை
என்று ஏதும் இல்லாமையால்
இறைவனிடமிருந்து தாங்கள்
பெற்ற வரத்தினை புவி மக்கள்
துன்பம் தீர்க்க பயன்படுத்துகின்றனர்.
இப்படியாக எண்ணற்ற ஒளிகள்
இந்த உலகத்தில் அதுவும் நம் தமிழ்நாட்டில்
பல இடங்களின் புனிதஆத்மாக்கள் மூலம்
வெளிப்பட்டு துன்புறும் மக்களை ஈர்த்து
அவர்களின் துன்பங்கள் நீங்கும்
வழிகளை கூறுவதும்,
உண்மை அடியார்களுக்கு
அந்த துன்பத்தை தன் சுமையாக
ஏற்றுக்கொண்டு அவர்களின்
சுமையை குறைப்பதும்
போன்ற அல்லல் தீர்க்கும்
கருணை தெய்வங்களாக இருக்கின்றனர்.
அப்படிப்பட்ட ஒரு தெய்வ ஒளி ஒன்று
சென்னைக்கருகில்
நம்மிடையே ஐம்பது ஆண்டுக்காலமாக
இருந்துகொண்டு துன்புற்ற மக்களை
தன்னை நாடி வர செய்து
பல்லாயிரக்கணக்கான மக்களின் துன்பம் போக்கி
,துயரை துடைத்து வாழ்வில் நம்பிக்கை அளித்து
வளமோடு மகிழ்ச்சியோடு
வாழவைத்துக்கொண்டு வருகிறார்
என்ற செய்தி இன்னும் பல பேருக்கு தெரியாது.
எத்தனையோ இடங்களுக்கு
சென்று பரிகாரம் தேடி பொருளையும்
நிம்மதியையும் இழந்து தவிப்பவர்கள்
இங்கு வந்தால் இந்த மகரிஷி அவர்களின்
சுமைகளை தன் சுமையாக ஏற்றுக்கொண்டு
அவர்களை வாழ்விக்கின்றார் என்பது
அனுபவபூர்ணமான சத்தியமான உண்மை.
எல்லோரும் இறைவனை வணங்க
மலையின் மேல் சிலையாய் நிற்கும்
படிஏறி செல்லவேண்டும்
ஆனால் இங்கிருக்கும் இந்த கருணை மாமலை
தன்னை நாடி வந்தவர்களின் காலடியில்
காவலனாய் இருந்து காப்பேன் என்று
சத்தியம் செய்கிறது.
இப்படிப்பட்ட இந்த அன்பு தெய்வத்தை
இன்னும் நாடாமல் இருந்து
வீணே வழிதெரியாமல்
நாட்களை கடத்துவது தகுமோ?
அந்த மகரிஷி யார்?
அவர்தான் கருணை மாமலை காகபுஜண்டர்.
(இன்னும் வரும்)
அறியாத தகவல் ஐயா...
ReplyDeleteநன்றி...