Tuesday, March 5, 2013

கட்டுக்கதை என்று தள்ளாதீர்



கட்டுக்கதை 
என்று தள்ளாதீர்

கட்டுக்கதை என்று தள்ளாதீர்
காசும் பணமும்தான்
எல்லாம் என்று எண்ணாதீர் 

துன்பங்களை 
கொடுப்பவன் அவனே 

துன்பங்களை 
கெடுப்பவனும் அவனே

துன்பம் வரும் போது 
துவண்டு விடாமல் 
காப்பவனும்  அவனே 

இவையெல்லாம் 
யாருக்கு நடக்கும்?

எல்லாம் அவன் செயல் 
என்று அவன் திருவடிகளை 
மட்டும் மனப் பூரணமாக
சரணடைந்தவர்களுக்கு  
மட்டும்தான் 

விதியை மதியால் 
வெல்லலாம்.உண்மை 

ஆனால் விதி 
வேலை செய்யும்போது 
மதி வேலை செய்யாது. 

காரில் பெட்ரோல் இருக்கும்
டயரில் காற்று இருக்கும்
ஓட்டுவதற்கு ஓட்டுனரும் இருப்பார். 
ஆனால் வண்டிதான் ஓடாது

கையில் ஓட்டுனர் உரிமமும்
மற்ற எல்லா உரிமங்களும் 
இருந்தாலும்
காவல்துறை அதிகாரி 
வண்டியை நிறுத்தி வழிமறித்து 
அனைத்தையும் கேட்டு 
நம் பயணத்தை 
தாமதித்து விடுவார்

இல்லையேல் 
ரயில் பாதையின்  குறுக்கே 
கூட்ஸ் வண்டி வந்து நின்று கொண்டு
பலமணி நேரம் நிற்க வேண்டி வரும்

அதுவும் இல்லையென்றால்
கேட் மூடப்பட்டுவிடும் 

அதுதான் விதி 

வாழ்க்கையில் மனிதர்கள்
முன் நடிக்கலாம்

நாடகத்தில் நன்றாக நடித்தால் 
கையை தட்டி பாராட்டுவார்கள்

ஆனால் உண்மை வாழ்க்கையில் 
நடிப்பவர்களின் கதி
அதோகதிதான் 

அதுபோல்தான் 
இறைவனிடமும் 
உண்மையான பக்தி இருக்கிறதே 
உடலில் சக்தி இருக்கிறதே என்று
ஊரை ஏமாற்றினாலும் உற்றாரை
ஏமாற்றினாலும் நம் உடலில் உள்ள 
சிம் கார்டில் அனைத்தும் 
நம்மையறியாமல் பதிவு 
செய்யப்பட்டுவிடும்

இந்த உடலை விட்டு 
உயிர் போகிறது 
என்றால் வேறு 
ஒன்றும் இல்லை

நம் உடலில் உள்ள சிம்கார்ட்
எடுக்கப்பட்டவுடன் 
உடல் கீழே விழுந்துவிடும்

உடலில் இருக்கும் 
அத்தனை கருவிகளும்
செயலிழந்துவிடும்
நம் கர்வம் உட்பட 



  



தர்ம தேவதையான 
யமராஜா அலுவலகத்திற்கு 
சிம் கார்ட் கொண்டு 
செல்லப்பட்டு ஆய்விற்கு
 உட்படுத்தப்பட்டு
நம்முடைய ஆன்மாவின்  
அடுத்த பயணம் தொடரும்

கருத்தோடு சிந்திப்பீர்

கட்டுக்கதை என்று தள்ளாதீர்
காசும் பணமும்தான்
எல்லாம் என்று எண்ணாதீர் 

கடமையை துறக்காதீர்
கடவுளை மறவாதீர்

அன்பும் அறமும்தான் 
கொண்ட வாழ்வுதான் 
அருளுக்கு வழி வகுக்கும் 

 படம்-நன்றி-google images 



7 comments:

  1. சிம் கார்ட்...

    நல்ல விளக்கம் ஐயா...

    ReplyDelete
  2. விதியை மதியால்
    வெல்லலாம்.உண்மை

    ஆனால் விதி
    வேலை செய்யும்போது
    மதி வேலை செய்யாது.//

    அதுதான் கடவுளின் கண்கட்டு வித்தை இல்லையா அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. அது கடவுளின்
      கண்கட்டு வித்தை அல்ல

      அது நாம் விதைத்த
      வினைகளின் விளைவுகள்

      கடவுள் அதை பாரபட்சமில்லாமல்
      செயல்படுத்துபவர் மட்டுமே

      Delete
    2. ரோஜா செடியில்
      ரோஜா மலர்களுடன்
      முட்களையும் சேர்த்துதான்
      இறைவன் படைத்திருக்கிறான்

      அதுபோலதான் இந்த உலகில்
      தீமைகளும்,தீயவர்களும்
      அவன் படைப்பே

      நாம் நன்மை பெற வேண்டுமென்றால்
      நல்லவைகளையும், நல்லவர்களையும்
      நாம்தான் தேடி போய்
      நன்மை அடையவேண்டும்.

      Delete

  3. 8:02 AM (13 minutes ago)

    to me
    very nicely said .
    with best wishes,
    tgranganathan



    ReplyDelete
    Replies
    1. நல்லதும் தீயதும்
      எண்ணுவோர் மனதில்தான்
      உள்ளது என்பார்
      மனதின் தன்மை அறிந்தோர்

      தீயதை விடுத்து
      நன்மையை நாடுவோம்
      நாமும் நலம் பெறுவோம்
      நாம் சார்ந்து வாழும்
      இந்த உலகமும் நலம் பெற
      நம்மால் ஆன
      முயற்சிகளை
      அயற்சியில்லாமல்
      தளர்சியில்லாமல்
      மேற்கொள்ளுவோம்
      நம்மை படைத்த
      இறைவன் துணையோடு

      நன்மையையும் செல்வமும்
      நாளும் நல்கிடும்
      திண்மையும் பாவமும்
      சிதைந்து தேய்ந்திடும்
      ஜனமும் மரணமுமின்றி தீர்ந்திடும்
      இம்மையே ராமா
      என்னும் இரண்டெழுத்தினால்.

      Delete