Tuesday, March 12, 2013

இந்த காக புஜண்ட மகரிஷி யார்?

யோகிகளும் 
மகரிஷிகளும் ஞானிகளும் (2)

இந்த காக புஜண்ட மகரிஷி யார்? 

















காகபுஜண்ட மகரிஷி
இந்த புவனத்தில்
பல யுகம் கண்டவர்

பல பிரளயங்களை கண்டவர்


தவத்தில் நிறை கண்டு
பரம்பொருளை உணர்ந்தவர்

சுமேரு என்றழைக்கப்படும்
இமயமலையில் நிலை கொண்டவர்

மாலவனின் அனைத்து
அவதாரங்களும் கண்டு மகிழ்ந்தவர்

நம்மையெல்லாம் ஆட்டுவிக்கும்
ஆடல்வல்லானின் அருட்கூத்தை
அனவரதமும் கண்டு ஆனந்திப்பவர்

தோற்றத்தில் முதுமை பூண்டாலும்
என்றும் மாறா இளமை கொண்டவர்

காக உரு கொண்டவர்

கருணையே உருவெடுத்த
பகுளையுடன் காட்சி தருபவர்

நான்கு திருக்கரம் கொண்டவர்

இறைவனை நம்பாத பித்தரின்
புத்திக்கு எட்டாதவர்

தான் என்னும்அகந்தையற்று
அடிபணிபவனுக்கு காலடியில்
காவலனாய் இருந்து
கண்ணிமை போல் காப்பவர்

இப்புவி வாழ் மக்கள் துயர்  நீங்கி
நலமாக வளமாக
வாழ அன்னை உமையாளின் அருளாசி
பெற்று நாமெல்லாம் உய்ய
'நற்பவீ' என்னும் நல்மந்திரத்தை தந்தவர்

குணத்தில் கருணை மாமலை அவர்

நம் ஊனக்கண்ணால்
காண இயலா ஓளி படைத்தவர்

அப்படிப்பட்ட அந்த ஒளிதான்
ஒலியாகவும் விளங்குகிறது.

இதைபோன்ற ஜீவ ஒளிகள்
புவியில்மனிதர்கள் மீது கருணை கொண்டு
உதவி செய்ய புனித ஆத்மாக்களை
தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம்
தங்கள் பணிகளை
செய்து வருகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்மாக்கள்
முற்பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களாகவும்,
இறை பக்தியில் திளைத்தவர்களாகவும்,
செயற்கரிய பல செயல்களை செய்தவர்களாகவும் ,
ஜீவ ஓளியின் சக்திகளை தவறாக
தனக்காக பயன்படுத்தும் சுயநலம் இல்லாதவர்களாகவும்
 உயிர்களிடத்தில் அன்பும் கருணையும்
உள்ளவர்களாகவும் இருப்பவராக
 பார்த்து தேர்ந்தெடுக்கின்றன .

அப்படி காகபுஜண்டரால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான்
ஞான வாஷிச்ட சிகரம் அருள்மாமணி
 ஸ்ரீ ரமணி குருஜி அவர்கள்.


























தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில்
அலமேலுபுரத்தில் உள்ள அருள்வனத்தில்
காகபுஜண்டரின் அருள் அனுதினமும்
அவர் நாவில் அருள்வாக்காய்
காலையிலும் மாலையும்
அமிர்த மழையாய் பொழிந்து
அடியார்களின் துயர் தீர்த்து
வாழ்வில் வளம் சேர்க்கிறது.

சென்ற ஆண்டு அருள்வனம் அமைந்து
ஐம்பது ஆண்டுகள் நிறைவு செய்ததை
கோலாகலமான விழாவாக கொண்டாடி
மகிழ்ந்தனர் அவரின் சேய்கள்.

இந்த ஆண்டும் அருள்விழா 18.3.2013  அன்று
தொடங்கி 31.3.2013 அன்று நிறைவடைகிறது.

அகிலமெங்கிருந்தும்  அருட்சேய்கள் வந்து
கலந்துகொண்டு ஆனந்த பெருக்கோடு
மன மகிழ்வோடு திகழ்வதை கண்டு இன்புறுவீர்.

அனைத்து நாட்களிலும் பங்கு கொள்வீர்
முடியவில்லையெனில் அனைவரும்
ஒரு தினமாவது வாரீர்.
அருள்வாக்கை கேளீர்.
வாழ்வில் இதுவரை காணாத
அனுபவத்தை பெறுவீர்.

இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/

ஓம் 'நற்பவீ'

(இன்னும் வரும்)




1 comment: