காஞ்சி பரமாசார்யா
இன்று எல்லோரும்
காஞ்சி பரமாசார்யாவின்
அருமைகளையும் பெருமைகளையும்
அவரோடு அவர்களுக்குள்ள
தொடர்பு பற்றியும் எழுதுகிறார்கள்,
பேசுகிறார்கள்.
ஆனால் நான் அவர் வெகு அருகில்
வசித்தபோதும் அவரை சென்று
தரிசித்ததும் கிடையாது.
அவர் பெருமைகளை பற்றி
ஒன்றும் அறிந்துகொண்டதும் கிடையாது.
நான் நிறைய புண்ணியம் செய்திருந்ததால்
அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லையோ
என்னவோ எனக்கு தெரியாது.
ஆனால் இப்போதுதான் நாம் நல்ல
வாய்ப்பை தவறவிட்டு விட்டோமோ
என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆனால் அதற்காக
நான் வருத்தப்படவில்லை.
ஏனென்றால் இதுவும் இறைவனின் சித்தம்
என்று உறுதியாக நம்புகிறவன் நான்.
இருந்தாலும் 34 வருடத்திற்கு
முன் அவரை ஓவியமாக தீட்டினேன்.
அந்த படம் இதோ.
ஓவியத்தில் உங்களிடமே (மனதில்) வந்து விட்டார் ஐயா... அதுவே போதும்...
ReplyDeleteநன்றி DD
Deleteஇப்போது எனக்கு பரம திருப்தி
என் ஏக்கம் தீர்ந்தது
ஓவியம் அருமை.
ReplyDeleteஎன் தாத்தா பரமாச்சார்யாவுக்கு மிக நெருக்கமாக மடத்தில் இருந்தார்.
பாம்பே சுப்பராமன் என்று சொன்னால் புரியும் எல்லோருக்கும்.
நன்றி.
Deleteபடம் பல ஆண்டுகளுக்கு முன்
அவர் படம் வரைந்தேன்.
அவர் கலவையிலிருந்து பாத யாத்திரையாக
ரிக்ஷாவை பிடித்துகொண்டு காஞ்சிபுரம் நோக்கி
நடந்து வருகையில் நேரில் பார்த்திருக்கிறேன்
அவ்வளவுதான்.
எனக்கு பரமாசார்யாவை பற்றியோ
மடத்தை பற்றியோ அன்றும் ஒன்றும் தெரியாது
இன்றும் தெரியாது.
அவர் மீது ஒரு பக்தி. அவரை பற்றி
நினைக்கையிலே மனதில் ஒரு நெகிழ்வு.
ஒரு சாந்தம்
உண்மையான துறவியாக வாழ்ந்தார்.
அகந்தையை விட்டவர்.
அனைவரையும் அன்பால் அணைத்து
வழி நடத்தி உயரிய நிலையை
அடைய செய்த
இறைஅருள் பெற்ற ஞானி.
உடலாகிய சுமையை
உதறிதள்ளினாலும்
இன்றும் நெஞ்சார நினைப்பவர்க்கு
துன்பம் தீர்ப்பவர்.
சீரிய நெறிகளை காட்டி
வழி நடத்துபவர்.