Saturday, March 2, 2013
சக்தியுடன், வெற்றியுடன் வாழ்வதற்கு.
சக்தியுடன்,
வெற்றியுடன் வாழ்வதற்கு.
நாம் வசிக்கும் இந்த உலகம்
சதா சர்வ காலமும்
சுழன்று கொண்டே இருக்கிறது.
அது சுழன்றுகொண்டிருப்பது
மட்டுமல்லாமல் சூரியனையும்
சுற்றிகொண்டிருக்கிறது.
இதைபோல் எண்ணிலடங்கா கோள்கள்
இந்த விண் வெளியில்
சுழன்றுகொண்டிருக்கின்றன
ஒவ்வொன்றும் அதனதன்
பாதையில் விட்டு விலகாமல்
ஒன்றோடொன்று மோதாமல்
பல கோடி ஆண்டுகளாக
சுழன்றுகொண்டிருக்கின்றன.
இவைகளை தவிர
எந்த கட்டுப்பாட்டிற்கும்
வசப்படாமல் அண்டத்தில்
சுற்றிகொண்டிருப்பவைகள்
கணக்கற்றவை.
சூரியன் மட்டும் ஓரிடத்தில்
நிலையாய் நிற்கிறான்.
அவனிடமிருந்துசக்தியை
பெற்று இந்த உலகம் வாழுகிறது.
பூமியில்உள்ள
உயிர்களனைத்தும் சக்தி
பெற்று வாழ்வதற்கு வகை
செய்யும் வகையில்
பூமி சுழன்றுகொண்டிருக்கிறது.
இதனால் இரவும் பகலும்
தட்பவெப்ப நிலைகளும்
மாறி மாறி வந்து உயிர்கள்
தோன்றி வளர்ந்து,வாழ்ந்து
மடிந்து மீண்டும் மீண்டும்
தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
பூமி சூரியனை சுற்றுவதும்
நமக்கு தெரிவதில்லை
அது தன்னைத்தானே
சுற்றிகொள்வதும்
நமக்கு தெரிவதில்லை.
ஏதும் அறியாதவண்ணம்
அந்த பரந்தாமன் நம்மையெல்லாம்
கண்ணின் இமைபோல்
காத்து ரட்சிக்கின்றான்
இது எப்படி.?
பரந்தாமன் கையில்
உள்ள சக்கரம்தான்
அனைத்து சுழற்சிகளுக்கும் காரணம்.
அவன் கையில் உள்ள
சக்கரம்தான் சுழல்கிறதே தவிர
அவன் சுழல்வதில்லை.
அவன் பாம்பணையில்
அரிதுயில் கொண்டிருக்கிறான்
அதைப்போல்தான்
அவன் படைத்த உயிர்களின்
இதயத்தில் வாசுதேவனாக,குகனாக
ஈஸ்ஸ்வரனாக வீற்றிருப்பதால்தான்
எல்லாம் சுழன்றும் நாம் ஏதுமறியாது
இயங்கிகொண்டிருக்கின்றோம்.
அவன் இந்த உடலை
விட்டு நீங்கிவிட்டால்
இந்த உடலின் இயக்கம்
நின்றுவிடும்.
இந்த உடலை அப்புறப்படுத்த
நம்மை சுற்றியுள்ளவர்களும்
இந்த உலகமும் வேகமாக
இயங்கதொடங்கிவிடும்.
நம் இயக்கம் நிற்பதர்க்குள்
நம்மை இயக்குபவனை
அறிந்துகொண்டு
நன்றி செலுத்த வேண்டாமா?
அந்த சக்கரதாழ்வானை
அனுதினம் வணங்குவோம்.
அவன் அருள் பெறுவோம்
சக்தியுடன்,வெற்றியுடன்
வாழ்வதற்கு.
அதுமட்டுமல்லாது
அந்த சக்கரம் ஏந்திய
தடைக்கையனின்
தாள்களையும் விடாது
பற்றிகொள்ளுவோம்
தவறாமல்.
Subscribe to:
Post Comments (Atom)
அந்த சக்கரதாழ்வானை
ReplyDeleteஅனுதினம் வணங்குவோம்.
அவன் அருள் பெறுவோம்
பரந்தாமன் கையில்
உள்ள சக்கரம் சுழற்சியையும் கோள்களின் சுழற்சியையும் ஒப்பிட்டிருப்பது அற்புதம் ..
நிறைவான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
நீண்ட நாட்களுக்கு பிறகு
Deleteஎன் வலைபதிவிற்கு வந்து
கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
/// இது எப்படி.? ///
ReplyDeleteஆஹா.. இரண்டுமே ஒப்பிட்டு அருமை...
அது அப்படித்தான்
Deleteவெற்றி பெறுவதற்கு
சக்தி தேவை
வெற்றி பெற்றபின் அந்த வெற்றியை
தக்க வைத்துகொள்வதர்க்கு சக்தி தேவை
தோற்றாலும் மீண்டும்
வெற்றி பெறுவதற்கு
உழைக்க சக்திதேவை