என்னே இறைவன் கருணை!.
உலகை எல்லாம் படைத்த ஈசன்
உயிர்களை காக்கும் நேசன்.
அவன்தான் சபேசன்,நடேசன்,
வெங்கடேசன்,சர்வேசன்
அவன் பாதம் பணிவோம் எப்போதும்
கவலையின்றி வாழ்வோம்
இவ்வுலகில் வாழும் காலம் வரை
உயிர்களை படைத்த அந்த ஈசனே
கோயிலில் நிலை கொண்டான் சிலையாக
உயிர்களின் இதயத்திலும் இடம் கொண்டான்
தன் இடபாகத்தில் அமைந்த சக்தியுடன்.
ஒளி பொருந்திய மாலவனோ
அன்னை இலக்குமியுடன் '
நம் உயிரினுள் ஆன்மாவாய்
விளங்கி அருள் புரிகின்றான்
நம்மை படைத்த பிரம்மனின்
நாயகியோ நம் நாவில் நாமகளாய்
நடம் புரிகின்றாள் நம்
மடத்தனத்தை போக்குகின்றாள்
ஐந்து கரம்கொண்ட
ஆனை முகனோ
நம் புந்தியில் நின்று
நமக்கருள் செய்கின்றான்
ஆறு ஆதார சக்கரத்தில்
ஒளியாய் ஒளியாய்விளங்கி
நம்மை வழி நடத்துகின்றான்
சிவனின் நேத்திர ஒளியிலிருந்து
வெளிவந்த அந்த ஆறுமுகத்தான்
.
நேசமுடன் உன்னை பூசிப்பாரின்
நெஞ்சில் நிலையாக நின்று
வாசம் செய்யும் ஸ்ரீனிவாசனே
அன்பென்னும் பிடிக்குள்
அகப்படும் மலையே
அடிமுடி காணா ஜோதியாய் நின்று
இன்று குளிர்ந்து அண்ணாமலையாய்
நாடி வரும் அடியவர்களின்
துயர் தீர்ப்பவனே
உண்ணாமுலையுடன் கூடியிருந்து
அருள் செய்யும் உன் கோயிலை
நாடி வரும் பக்தர்களை
சித்தர்களாக்கும் வல்லமை
உடையோனே
வடநாட்டு கைலாய மலையில்
குடிகொண்டாலும் தென்னாடுடைய
அண்ணாமலையில்
சிவனாய் விளங்குவோனே.
என்னாட்டிலிருந்தும் எவர் உனை
நாடி வந்தாலும் அவர்களின்
அஞ்ஞானம் அகற்றி மெய்ஞானம்
அருளும் இறைவனே
பொருள் தேடுவோருக்கு பொருளும்
மன இருள் நீங்க வழி தேடி
வருவோர்க்கு அருளும்
தப்பாது வழங்கும் பரம்பொருளே
நொடிக்கொருமுறை வண்ண ஜாலம் காட்டும்
வானத்தின் அழகை வர்ணிக்க இயலுமோ?
அதுபோல் உன் புகழை இந்த சீலமற்ற சிறியேனால்
சொல்லில் அடக்க இயலுமோ?
அன்பென்னும் பிடிக்குள்
ReplyDeleteஅகப்படும் மலையே
அத்தனை வரிகளும் வைரமாய்
மனதில் நிலைக்கின்றன ..
படம் தங்கள் கைவண்ணமா ..!!
படமும் கவிதையும் மனதில் நிறைந்தன ..
கண்ணகளில் ஒற்றிக்கொள்ளத்தக்கன,...
பாராட்டுக்கள்.. நன்றிகள்.. வாழ்த்துகள்...
ஆம் தாயே .
Deleteஇவனின் கைவண்ணம்தான்
நேரில்தான் சென்று தரிசிக்கவில்லை
நேரில் சென்று தரிசித்தாலும்
குணசீல பெருமானை ஒவ்வொரு
அங்கத்தையும் ரசித்து படம் வரைவதுபோல்
பார்த்து வணங்க முடியாது.
மேலும் கோயில்களில்
காத்துகிடக்க வேண்டியிருக்கிறது.
கருவறைக்குள் சென்றாலும்
கூட்டம், நெரிசல், மேலும் கெடுபிடிகள்.
எங்கும் நின்று நிதானமாக
தரிசிக்க வழியில்லை.
இதனால் எனக்கு கோயிலுக்கு
செல்லும் ஆசையே போய்விட்டது.
அதனால்தான் இந்த
வேலையில் இறங்கிவிட்டேன்.
எந்த கடவுளை தரிசிக்க நினைத்தாலும்
அவர்களை வரைய தொடங்கிவிடுவேன்.
1 0நாட்கள் முதல் ஒரு மாசம் வரை
அவர்கள் என்னோடு நினைவில்
உலா வருவார்கள்.
என்னை யாரும்
கேட்பார் கிடையாது.
என் நினைவாக படத்தை
ஒரு print போட்டு வீட்டில்
மாட்டி வணங்குங்கள்
இவனின் குறைகள் தீரட்டும் என்று.
This comment has been removed by the author.
ReplyDeleteசன்... சன்... சன்... அனைவரும் அவனின் son...
Deleteஆம் DDsir
Deleteபிள்ளைக்கு
தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும்
தந்தை இறைவன்
என்ற வரிகளை
மறந்துவிட்டீரோ
எதற்கெடுத்தாலும்
திரைப்பட பாடல்களை
மேற்கோள் காட்டி கலக்கும்
திண்டுகல்லாரே