நாமக்கல் ஆஞ்சநேயன்
அஞ்சனை மைந்தன்
ஐந்தெழுத்தின்
அம்சமாய் பிறந்தவன்
வாயு குமாரன்
ராம தூதன்
அன்னை சீதையின்
சோகம் தீர்த்தவன்
அசுரர்களின்
கொட்டத்தை அடக்கியவன்
பக்த சிரோமணி
அபயமளிக்கும் அழகன்
அடிபணிகின்றேன்
உன் திருவடிகளை
வெற்றிலை மாலை அணிவித்து வணங்கினால்
வெற்றிகளை அளவின்றி தருபவன்
வடை மாலை சாற்றினால் வாழ்வில்
வரும் தடைகளை தகர்ப்பவன்
பக்தியுடன் வெண்ணைகாப்பு சாற்றினால்
சக்தி தந்து காப்பவன்.
இவன் கைவண்ணத்தில்.
Gopalakrishnan
ReplyDeleteஸ்ரீராமஜயம்
வணக்கம். தங்கள் கை வண்ண்ம் இங்கு கண்டேன்.
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தத்ரூபமாக வரைந்துள்ளீர்கள்.
இறை அருள் நிறையவே பெற்றுள்ளீர்கள்.
மனமார்ந்த் பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.
நன்றி VGKsir
அவித்த உணவின் சுவையை
அதை வைத்திருக்கும் பாத்திரம்
அறியுமோ என்ற நிலையில்
இருகின்றேன் யான்
எல்லோரும் உன்னிடம்
இருக்கிறது என்கிறார்கள்
என்னுள் இருக்கின்ற ஒன்று
உன்னிடமும் இருக்கின்றது
என்கிறேன் யான்
இருந்தும் என்னுள் இருக்கின்ற
ஒன்றை இன்னமும் உணர்ந்துகொள்ளும்
தன்மையை அந்த ஒன்று இன்னும்
எனக்கு தர மறுப்பது ஏன்
என்று எனக்கு புரியவில்லை?
அருமை படைப்புக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவைகோ ஐயாவுக்கு அளித்த கருத்தும் அருமை...
நன்றி DD
Delete