Monday, March 4, 2013

எய்தவன் இருக்க அம்பை நோவதேன் (முடிவு பகுதி)


எய்தவன் இருக்க 
அம்பை நோவதேன் (முடிவு பகுதி)

பொழுதுபுலர்ந்தது.

உறக்கம் கொள்ளாமல்
விழித்திருந்த அரசன்
படுக்கையை விட்டு எழுந்தான்.
காலை கடன்களை முடித்துக்கொண்டு
இறைவனை வணங்கிவிட்டு
நகரத்தில் இறைவன் குறிப்பிட்ட
திருமணம் நடைபெறும் வீட்டிற்கு
மாறு வேடத்தில் சென்றான்.

வீட்டில் திருமண ஏற்பாடுகள்
நடைபெற்றுகொண்டிருந்தன

தாலியை கட்டுவதற்காக
மணமகள் மனையில் அமர்ந்திருக்க
மாப்பிள்ளை வரவுக்காக எதிர்பார்த்து
காத்திருந்தனர் பெண் வீட்டார்.

அரசன் இறைவனை தேடினான்.
அப்போது இறைவனும் அங்கு
 மாறு வேடத்தில் பிறர் கண்ணுக்கு
தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.

அரசனை சைகை காட்டி அழைத்தான்.
உடனே அரசன் இறைவன் பக்கத்தில்
போய் நின்றான்.

அப்போது திருமண வீட்டு வாசலில்
 நன்றாக கொம்பு சீவிய காளை மாடு
ஒன்று நின்றுகொண்டிருந்தது.

அதன்பக்கத்தில் இரண்டு உருவங்கள்
 பிறர் கண்ணுக்கு புலப்படாமல் வந்து நின்றன .

இறைவன் அரசனை அந்த உருவங்கள்
 பேசுவதை காது கொடுத்து கேட்க சொன்னான்.

ஒன்று மற்றொன்றிடம் கேட்டது.
சில நாட்களுக்கு முன் ஒரு குழந்தையின்
உயிரை கொண்டுவருமாறு யமதர்ம ராஜா
பணித்தாரே அந்த வேலையை முடித்துவிட்டாயா?

எப்படி  என்றது அந்த உருவம்

அந்த குழந்தையின் உயிர்
ஒரு அம்பால் போயிற்று
உலகத்தாரின் கண்களுக்கு.

அந்த குழந்தையை யாரோ ஒரு வேடுவன்
கொன்றுவிட்டான் என்று அனைவரும்
நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அந்த குழந்தையை வேடன்
கொல்லவில்லை

அப்படியானால் யார் அம்பை எய்து
குழந்தையை கொன்றது என்று
மீண்டும் கேட்டது அந்த உருவம்.

யாரும் குழந்தையை கொல்லவில்லை

பல நாட்களுக்கு முன் ஒரு வேடன்
அந்த மரத்தில் ஒரு பறவையை கொல்ல
அம்பை விட்டான் .பறவை பறந்துவிட்டது .
அம்பு மரத்திலேயே சிக்கி கொண்டது.

அன்று அந்த குழந்தை மரத்தடியில்
படுத்துகிடந்த போது காற்றினால் மரக்கிளைகள்
 அசைய அங்கிருந்து அம்பு நழுவி குழந்தையின்
மார்பில் தைத்துவிட்டது
அதனால் குழந்தை இறந்துவிட்டது
அதுதான் உண்மை.

அரசனுக்குக்கு உண்மை
விளங்கியதும் வியப்புற்றான்.

அப்போது அந்த உருவம்
மற்ற உருவத்திடம் சொல்லியது
நாம் வந்த வேலையை பார்க்கலாம் என்று
சொல்லிக்கொண்டே அந்த காளை
மாட்டின் உடம்பினுள் புகுந்துகொண்டது.

மற்றொன்று அங்கு நாதசுரம், மற்றும்
தவில் வாசிப்பவரின் உடலில் போய் புகுந்துகொண்டது.

மணமகன் தாலி கட்ட தயாராக நிற்கையில்
 மேளம் மிக சத்தமாக கொட்டப்பட்டது.

அப்போது அங்கு நின்ற காளைமாடு
மிரண்டு போய் வீட்டினில் புகுந்து
மணமகனை கொம்பினால்
முட்டி கொன்றுவிட்டது.

மணவீடு  பிண வீடாகிவிட்டது
ஒரு நொடியில்

அரசன் அரண்டு போனான்
இறைவா ஏன் இப்படி
கொடூரம் என்று கேட்டான்

அதற்க்கு இறைவன் கவலைப்படாதே
எல்லாம் முந்தய பிறப்பின் செய்த
வினையின் விளைவுகள் இந்த துன்பங்கள்.

அவரவர் செய்த வினைகளின் பயனை 
அனுபவித்துதான் தீர்க்கவேண்டும் என்று
சொல்லி இறைவன் மறைந்துவிட்டார்.

அரசனும் தன்னுடைய சந்தேகத்திற்கு
விடை கிடைத்தது என்ற திருப்தியுடன்
அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

எனவே நன்றாக இருக்க வேண்டுமென்றால் 
நன்மை தரும் செயல்களையே செய்வீர் 
மறந்தும் பிறருக்கு கேடு நினையாதீர்.

விதி வலியது. இரக்கமற்றது. 
விதியின் பாதையில் 
இறைவன் தலையிடுவதில்லை.

அந்த வேலையை அவன்
 மகான்களுக்கு கொடுத்துவிட்டான்.

7 comments:

  1. Ranganathan T G
    10:57 PM (7 hours ago)

    to me
    I REMEMBER WHAT MAA SARADA DEVI TOLD SOME ONE
    THAT "GURU ALONE CAN CHANGE THE COURSE OF DESTINY.
    WITH BEST WISHES.
    RANGANATHAN

    ReplyDelete
  2. Gopalakrishnan Vai.
    11:34 PM (6 hours ago)

    to me
    //விதி வலியது. இரக்கமற்றது.

    விதியின் பாதையில்
    இறைவன் தலையிடுவதில்லை.

    அந்த வேலையை அவன்
    மகான்களுக்கு கொடுத்துவிட்டான்.//

    கதையை ஒருவழியாக முடித்து விட்டீர்கள், இருப்பினும்
    என் மனதை மிகவும் கலங்கச்செய்து விட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையை
      அறிந்துகொண்ட
      பின் மனம் கலங்கலாமோ?

      அந்த உண்மையை
      நமக்கெல்லாம் உணர்த்திய
      அந்த இறைவனை
      நாம் நாம்ஒரு கணமேனும்
      மறந்தும் இருக்கலாமோ

      அவனை மறப்பவர்களைதான்
      மறலி தன்
      உலகத்திற்கு
      அழைத்து செல்கின்றான்.

      மற்றவர்களை
      அவன் கண்டுகொள்வதில்லை

      ஆடாது அசையாது
      வா வா கண்ணா
      உன் தேனமுத
      குழலோசை
      என் செவியில்
      கேட்கட்டும் கண்ணா

      ஆனந்த நடனமிடும் ஆறாமுதா
      வந்தமர்வாய் என்னுள்ளத்தில்
      அங்கு குடிகொண்டுள்ள
      மாயையை விரட்டிவிட்டு

      அழகே உருவெடுத்த
      ஆயர்பாடி கண்ணா
      உந்தன் புகழ் பாடும்
      என்உள்ளத்தில்
      வந்தமர்ந்து அருள்
      செய்வாய் கண்ணா

      உறியில் வைத்த
      வெண்ணையை
      சுவைத்து உண்டவா
      மாதவா,கேசவா,யாதவா,
      அச்சுதா, அனந்தா ,கோவிந்தா
      தறி கேட்டு ஓடும் என் மன
      குதிரையை அடக்கி ஆள வா

      என் செயலாவது இனி
      ஒன்றுமில்லை கண்ணா

      இனி எல்லாம் உன் செயல்
      என்றுணர்ந்தேன்

      என் இதயத்தில் தாபம்
      அகன்றது
      மனம் அமைதியடைந்தது

      உன் வரவினால்
      மாறா ஆனந்தம் பெற்றது

      TRPattabiraman

      Delete
  3. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே...
    இருட்டினில் நீதி மறையட்டுமே...
    தன்னாலே வெளிவரும் தயங்காதே...
    தலைவன் இருக்கிறான் மயங்காதே - ஒரு
    தலைவன் இருக்கிறான் மயங்காதே...

    ReplyDelete
    Replies
    1. தலைவன் இருப்பதை
      உணர்ந்தால் மயக்கம்
      தீர்ந்துவிடும்

      ஆனால் உலக பொருட்களின் மீது
      பற்று கொண்டவர்களும்
      டாஸ்மாக் கடையையேநினைத்து
      கொண்டிருப்பவர்களுக்கும்
      மயக்கம் தீருவது எவ்வாறு ?

      Delete
  4. ஆம் எப்போழுதும் நடக்கும் காரியங்களுக்கு அவன் பொறுப்பெற்க்க மாட்டான் என்று படித்திருக்கிறேன் பிஷ்மரே விதிக்கு உட்பட்வ்ர் ஆகும் போது சாதாரண மனிதன் எம்மாத்திரம்

    ReplyDelete
    Replies
    1. தெய்வங்களே விதிவிலக்கு அல்ல
      என்கிறபோது
      சராசரி மனிதர்கள் எம்மாத்திரம்
      என்ற கேள்வி எழலாம்

      ஆனால் தவசீலர்களுக்கு
      தங்கள் தவத்தினாலும் அன்பினாலும்
      விருப்பு வெறுப்பற்ற தன்மையினாலும்
      பரம்பொருளிடம் கொண்டதன்னலமற்ற
      பக்தியினாலும் எந்த சக்தியையும்
      வெல்லக்கூடிய வல்லமையை
      இறைவன் அவர்களுக்கு
      தருவான் என்பது உண்மை.

      Delete