சிவராத்திரி சிந்தனைகள்
இந்த உடலுக்கும் உயிருக்கும்
உள்ள தொடர்பு பற்றி திருவள்ளுவர்
அழகாக,தெளிவாக, ஆணித்தரமாக
புரியும்படி ஒரு குறளை எழுதியுள்ளார்.
அது என்னவென்றால்
குடம்பை தனிதொழியப் புள்பறன்தொற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
அதன் பொருள் என்னவெனில் உடலுக்கும்
உயிருக்கும் உள்ள தொடர்பு கூடு இருக்க
அதை விட்டு பறந்து செல்லும் பறவை போன்றது.
அதனால்தான் நாம் உயிர் இந்த உடலில்
வசிக்கின்ற போது பிற உயிர்களிடம்
அன்பு காட்டி வாழ்க்கை வாழ வேண்டும்.
அப்போதுதான் அன்பே வடிவமான
சிவனை அறிந்துகொண்டு
இந்த ஜீவன் சிவமாகமுடியும்.
ஏதோ ஒருநாள் அனைவரும்
கூடி கூச்சல் போடுவதாலோ
இரவு முழுவதும்
கண் விழிப்பதாலோ இறைவனை
உணரவும் முடியாது அவனை
அடையவும் முடியாது.
நம் புந்தியில் இருந்துகொண்டு
நம்மை காக்கும் கணபதியை
நம்முள்ளே இருந்துகொண்டு
நம்மை பிராணனாக
இருந்துகொண்டு
இயக்குபவனை,
நடராஜனாக நடனமாடி
நம்மை வழி நடத்தி கொண்டிருப்பவனை
காளியன் தலை மீது நர்த்தனமாடி
அவன் அகந்தையை அழித்த கண்ணனை
,நம்மை பலவழிகளில் இழுத்துசென்று
பரமனை அறிய வொட்டாது
நம்மை பாவக்குழியில் தள்ளும்
பத்து இந்திரியங்களை உருவகப்படுத்தும்
ராவணனை அழித்து பக்தர்களை காத்த
அந்த காருண்ய மூர்த்தியான
ராமச்சந்திர மூர்த்தியை
தேவரை வதைத்த
சூரனை வதம் செய்து
காமத்தை அழிக்கும் கந்தனை
அனைவருள்ளும் சக்தியாய்
விளங்கும் காயத்ரி மாதாவை
ஒவ்வொரு கணமும் நினைந்து
நினைத்து போற்றி துதிக்க வேண்டும்.
ஏதோ மோர் சாதத்திற்கு ஊறுகாய்
தொட்டுக்கொள்ளுவதுபோல்
இறைவனை கடமைக்காக
வணங்குவதால்
எந்த பயனும் இல்லை
இப்பிறவியில் நாம் அனுபவிக்கும்
இன்பமோ துன்பமோ
நாம் முற்பிறவியில் செய்த நல்வினை
தீவினைகளை பொறுத்ததே அன்றி.
வேறொன்றும் இல்லை
என்பதை உணரவேண்டும்
நாம் வாழும் பூமி கர்ம பூமி
நாம் நம் கர்மங்களை
அனுபவித்து தீர்க்கத்தான் இறைவன்
இந்த உடலை அளித்திருக்கிறான்.
அதைகொண்டு வினைகளையும்
அனுபவித்து தீர்க்கவேண்டும்
அதிலிருந்து விடுபட
இறைவனையும் நினைந்து
உருகி வழிபட்டு விடுதலையையும்
பெறவேண்டும்.
வினையால் வந்த இவ்வுடம்பு
வினை தீர்ந்தவுடன் விழுந்துவிடும்
என்றார் ரெட்டியபட்டி ஸ்வாமிகள்.
அதற்க்கு வயதோ, நோயோ
எதுவும் காரணம் சொல்ல முடியாது.
மரணம் எப்போது வேண்டுமானாலும் நேரலாம்
ஏனெனில் காஸ் சிலிண்டரில்
எவ்வளவு காஸ் இருக்கிறது
அது எப்போது காலியாகும் என்று
அனுமானிக்க வேண்டுமானாலும் செய்யலாம்.
ஆனால் அதை துல்லியமாக அறிவது கடினம்.
வழிபாடுகளுக்கும் அதற்கும்
எந்தவிதமான தொடர்பும் இல்லை.
ஆசைகள் இருக்கும்வரை
பிறவிகள் இருக்கும்.
உலக ஆசைகளை விட்டு விலகி
இறைவன்மீது ஆசையை
அதிகரிக்கவேண்டும்.
அப்போதுதான் உப்பு கரிக்கும்
கடல் சூழ்ந்த இந்த உலகில் வாழும்
நாம் பாற்கடலில் பள்ளிகொண்ட
பரந்தாமன்அருள் பெற இயலும்.
அன்பில்லாமல் மேற்கொள்ளப்படும்
விரதங்களும் செய்யப்படும்
வழிபாடுகளும் வீணே
திருக்குறளுடன் விளக்கம் அருமை ஐயா...
ReplyDeleteஉங்களை விடவா
Deleteநான் திருக்குறளை
கையாண்டு விடப்போகிறேன்?
நான் ஏதோ எப்போதோ தான்
திருக்குறளை தொட முடிகிறது
என்ன செய்வது?
என் மனம் முழுவதும்
கங்கை வெள்ளம் போல்
கருத்துக்கள் வந்து
குவிந்து கொண்டிருக்கிறது
எதை எழுதுவது
எதை விடுவது என்று
சிந்திக்கவே நேரமில்லை
கணினியில் உட்கார்ந்தவுடன்
முதலில் வந்து நிற்பவர்களை
வலைக்கு அனுப்பிவிடுகிறேன்
அவ்வளவுதான்.