இறைவனின் வடிவழகை
கண்ணார,தரிசித்து பயன் பெறுக.
பெற்றவள் ஒருத்தி
வளர்த்தவள் ஒருத்தி
பெற்றவளோ சிறையில்
வளர்த்தவளோ நிறைவில்
அவன் பெற்றோர்களுக்கு
மட்டும் பிள்ளை அல்லன்
உலகத்திற்கே
செல்ல பிள்ளை அவன்.
அவனை கையில்
ஏந்தி நிற்கின்றாள் யசோதை
அவன் அழகை கண்ட
போதையில் மயங்கி கண்களை
மூடிக்கொண்டுவிட்டாள்.
கண்திறந்து பார்க்கும்
கண்ணனை காணாமல்
.
அதைபோல்தான் பலரும் கோயிலில்
மங்கிய விளக்கொளியில் இருக்கும்
இறைவனின் திருவுருவத்தை
தீபம் ஏற்றும் போது கண்டு மகிழ்ந்து
மன இருட்டை போக்கிகொள்ளாமல்
கண்களை மூடிக்கொண்டு
இருட்டில் மூழ்குகின்றனர்
இனிமேலாவது கோயிலில்
தீபாராதனை நடைபெறும்போது
கண்களை அகல விரித்து
இறைவனின் வடிவழகை
கண்ணார,தரிசித்து
பயன் பெறுவாராக.
கோயிலில் தரிசித்த திருவுருவத்தை
மனதில் நிறுத்தி நம் இதயத்தில்
நிலையாக கொண்டு
இன்புற வேண்டும்
சில இடங்களில்... அங்கே தான் பல பிரச்சனைகளை பேசுகிறார்கள்... என் செய்வது...?
ReplyDeleteஅது போன்ற மக்கள் திருந்துவதற்கு
Deleteபல பிறவிகள் எடுத்தாக வேண்டும்.
கோயிலில் தரிசித்த திருவுருவத்தை
ReplyDeleteமனதில் நிறுத்தி நம் இதயத்தில்
நிலையாக கொண்டு
இன்புற வேண்டும்
மேய்ச்சல் நிலத்தில் அசைபோடக்கூடாது ..
கணகளாலும் னதாலும் கருவறை தெய்வத்தை கண்கொட்டாமல் கண்டுகளித்து ,மனதில் நிறைத்து ,சற்றுநேரம் கோவிலில் தியானத்தில் அமர்ந்து மனதில் தெய்வத்தை உணர்ந்து அசைபோடவேண்டும் ..
அசையாத மனதினிலே தான்
Deleteஅந்த கண்ணன் ஆடாது
அசங்காது நிற்பான்
அவனை அங்கு
அகம் குளிர தரிசிக்கலாம்.
ஆனந்திக்கலாம்