Thursday, March 7, 2013

கருணை தெய்வங்கள் (1)


கருணை தெய்வங்கள் (1)

ஆனைமுகனே  உன் தயவின்றி 
இவ்வுலகில் யாதும் நிகழாது 
என்றுணர்ந்தே உன்னை  
என் சிந்தையில் வைத்து 
போற்றுகின்றேன்  எப்போதும்  






















விண்ணிலிருந்து  
தான் படைத்த உயிர்களை 
தீயவர்களிடமிருந்து காக்க 
 மண்ணுக்கு வந்த இறைவன் 
மீண்டும் விண்ணுக்கு
செல்ல மனமில்லாமல்
சிலையாய்நின்றுவிட்டான் 
மலைகளின்  உச்சியிலே 

என்னே அவன் 
கருணை பாருங்கள்

அதை நெஞ்சில் நினைந்து
 நினைந்து அவனை போற்றுங்கள் 

அன்னை பார்வதி 
உச்சி முகர்ந்து சீராட்டி பாராட்டி 
வளர்த்த பிள்ளையாம் ஆனைமுகன்
மீண்டும் அன்னையிடம் செல்லாமல் 
உச்சி பிள்ளையாராக 
அந்நாளில் திரிசிரம் என்று 
சிவபெருமானின்
பெயரால் அழைக்கப்பட்டு பின்னாளில் 
திருசிராப்பள்ளி என்னும் திருச்சியிலே
அனைவரும் காணும் வண்ணம் 
இருப்பிடம் கொண்டான் 

வணங்கும் அடியவர்களின் 
உள்ளங்களை எல்லாம்
தன் அன்பால்
ஆட்கொண்டான் 

நினைப்போர் 
நெஞ்சினிலே நிலையாய்  
நின்றருள் செய்கின்றான் 
நிர்மலமான ஞானமும் 
நீடித்த ஆயுளும்கூடிய 
நல்வாழ்வும் தந்து 

3 comments:

  1. கருணை தெய்வங்கள் (1) - ஆனைமுகனை தொழுது ஆரம்பித்துள்ளீர்கள்... எல்லாம் சிறப்பாக அமையும்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் சீராகவும்
      சிறப்பாகவும் வாழவேண்டும் என்றுதான்
      அனுதினமும் ஓய்வின்றி இறைவனை
      உணர்ந்துகொள்ளும் வழிகளை
      வாழ்வின் நடைமுறையோடு ஒற்றி
      எளிமையாக ஆக்கி தருகின்றேன்.

      ஏற்ப்பவர்கள் வாழ்வில்
      நிச்சயம் ஏற்றம் பெறுவார்கள்

      தோற்றவர்கள் மீண்டும்
      எழுந்து நின்று
      வெற்றி பெறுவார்கள்

      மன அழுத்தம் உள்ளவர்கள்
      அதிலிருந்து நீங்கி
      நலம் பெறுவார்கள்

      அவநம்பிக்கை கொண்டவர்கள்
      அந்த தீய குணம் நீங்கி
      அம்பிகையிடம்
      நம்பிக்கை கொள்ளுவார்கள்

      என் கடமை கொடுப்பதுமட்டும்தான்
      ஆற்றில் நீர் ஓடுவதைபோல
      மழை பெய்வதை போல
      பயனுருவோர் பயனுறட்டும்

      வெறுமனே பார்த்துக்கொண்டு
      நிற்ப்பவர் நிற்கட்டும்.

      Delete
  2. வெற்றியை கொடுக்கட்டும் ஆணை முகன் அனைவருக்கும்

    ReplyDelete