Thursday, March 7, 2013

சிவராத்திரி சிந்தனைகள் (2)


சிவராத்திரி 
சிந்தனைகள் (2)

அய்யா 10.3.2013 அன்று 
என்ன விசேஷம்?

அட மண்டு இதுகூட தெரியாதா
அன்னைக்குதான்
சிவராத்திரி

அப்படியா. எல்லோரும்
சிவன் கோயிலுக்கு போயி
சாமிகும்பிட்டு ராத்திரி முழுவதும்
கண் விழிப்பாங்களே அதுவா?

ஆமாம் அதுதான்

அது சரி அன்னிக்கு எல்லோரும்
ஒரு மந்திரம் சொல்லுவாங்களே அது என்ன ?

அதுதான் ஓம் நமசிவாய .என்று
சொல்லப்படும் பஞ்சாஷர மந்திரம்.

அதை சொன்னால் என்ன கிடைக்கும்?

சிவராத்திரி அன்னைக்கி சொன்னா
சிவலோக பதவி கிடைக்கும்







அது சரி சாமி பஞ்ச பூதம்னா என்ன?

நிலம்,நீர் நெருப்பு,
காற்று  ஆகாயம்
இந்த ஐந்தும்தான்
பஞ்ச பூதங்கள்

சிவபெருமான்தான்
இந்த பஞ்ச பூதங்களாக இருக்கிறார்

அப்படியா ?

அப்ப இந்த ஐந்தும்
சிவ ஸ்வரூபங்கள்ன்னு சொல்லுங்க

பரவாயில்லையே
சொன்னதை புரிஞ்சிகிட்டயே

இன்னும் இல்லை சாமி நான்
இன்னும்  முக்கியமான கேள்வியை
இன்னும் கேட்கவில்லையே?

சரி சொல்லு

அதனால்தான் சிவபெருமான் தான்
பஞ்ச பூதங்களாக இருப்பதை
 மனிதர்களுக்கு உணர்த்தும் பொருட்டு
பஞ்ச பூத ஸ்தலங்களில் பூமி(காஞ்சிபுரம்)
அப்பு லிங்கமாகவும்(நீர்) (திருவானைக்காவல்) ,
வாயு லிங்கமாகவும்,(காற்று)(திருகாளஹஸ்தி )
அக்னி லிங்கமாகவும்(நெருப்பு)(திருவண்ணாமலை)
ஆகாச லிங்கமாகவும் (சிதம்பரம்)கோயில் கொண்டு
அருள் பாலிக்கிறார்



அப்படியானால் பஞ்சபூதங்களால்
ஆக்கப்பட்ட நம் உடலாகி விளங்கி
அதன் உள் ஒளியாகி நின்று நம்மை
சிவபெருமான் நம்மையெல்லாம்
காக்கின்றார் என்று சொல்லுங்கள்

ஆமாம் அப்படிதான்.

அப்படியானால் சிவனாக விளங்கும்
நிலத்தை சீரழிக்கிரோமே
அது சிவனுக்கு செய்யும்
அவமரியாதை இல்லையா?

நீராக விளங்கி நம் உயிர்காக்கும்
நீர் ஓடும் நதிகளில் கண்ட கழிவுகளை விட்டு
அசுத்தப்படுத்துவது சிவபெருமானுக்கு
செய்யும் அவமரியாதையில்லையா ?

நம் பாவங்களை போக்கும்
கங்கை நதி எங்கிருந்து வருகிறது?

சிவனின் சிரசிலிருந்து வருகிறது?

அந்த நதியில் பிணங்களை போட்டு
அசுத்தப்படுத்துவது சிவனுக்கு
செய்யும் துரோகமில்லையா?

நாம் வணங்கும் கடவுளை,
நம்மை படைத்து நம்மை காத்து
வாழ வைக்கும் கடவுளை
நாமே இழிவு செய்தால். மற்றவர்கள்
ஏன்  நம்மை கேலி செய்ய மாட்டார்கள்

 நமக்கு தெய்வம் எப்படி நன்மை செய்யும்.?

செய்யாது.நீ சொல்வது சரிதான்.
 யார் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது?

நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறீர்களா?

சொல்லு.

மற்றவர்கள் யாரும் சொன்னால்
கேட்கபோவதில்லை

நீங்களும் நானும் வேண்டுமானாலும்
அந்த தப்பை செய்யாமல்
சிவபெருமானை
வணங்கி மகிழ்வோம்.

படங்கள்-கூகிள்

2 comments:

  1. நல்ல பதில்களை விட நல்ல கேள்விகள் ஐயா...

    விளக்கம் அருமை...

    ReplyDelete
  2. பாட்டும் நானே
    bhaavamum நானே
    கேள்வியும் நானே
    பதிலும் நானே

    ReplyDelete