மகரிஷிகளும் ஞானிகளும்( 8)
அருள்வனத்தில் என்ன இருக்கிறது?(7)
வேதங்கள் முதலும் முடிவுமில்லா
அந்த இறைவனால் வெளியிடப்பட்டது
அதை முழுவதும் அறிந்தவரில்லை
அறியவும் முடியாது
ஒரு முனிவர் பல ஆயிரம் ஆண்டுகள்
தேவேந்திரனிடம் தன் ஆயுளை நீட்டித்துகொண்டு
வேதங்கள் பயில ஆரம்பித்தார் .
ஒரு கால கட்டத்தில் அவர் தேவேந்திரனிடத்தில்
தான் எவ்வளவு தூரம் வேதத்தை கற்றிருக்கிறேன்
என்று வினவ அவன் நீர் இன்னும்
தொடக்க நிலையிலேதான் இருக்கிறீர்கள்
என்று சொன்னானான் .
அதற்க்கு பிறகு அவர் அந்த வேலையை
விட்டுவிட்டு இறைவனை நோக்கி தவம்
இயற்ற தொடங்கியதாக ஒரு கதை உண்டு,
கலியுகத்தில் மனிதாகளின்
ஆயுள் குறைவு என்பதாலும் ,
வேதத்தை கற்பவர்களின் எண்ணிக்கை
மிகவும் குறைந்துவிடும் என்பதாலும்
வேதம் நான்காக பிரிக்கப்பட்டது.
வேதத்தில் சொல்லப்படாத
பொருள் இல்லை.
சரி இருக்கட்டும்.
வேதத்தின் சாரம் என்ன ?
இவ்வுலகத்து உயிரினங்கள்
அனைத்தும் இன்பமாக வாழவேண்டும்.
அதற்க்கு என்ன செய்யவேண்டும்.
துன்பங்கள் வந்தால் எவ்விடம்
போக்கிகொள்ளவேண்டும் என்ற
பல விதிமுறைகள அதில்
தெளிவாகவகுக்கப்பட்டுள்ளன
அவற்றை எல்லாம் தெரிந்து தெளிந்து
வாழ்வில் பயன்படுத்திக்கொள்ள
பல ஆண்டுகள் பயிற்சி.தேவை.
அது எல்லோராலும் முடியாது.
ஏனென்றால் இன்றைய வாழ்க்கைமுறை
அதற்கெல்லாம் இடமளிக்காது.
வேதம் கூறும் சாரம் என்ன தெரியுமா?
சத்தியத்தை கடைபிடி.
தர்ம வழியில் வாழ்க்கை நடத்து.
அவ்வாறு நடந்தாயெனில்
அந்த தர்மமே உன்னை
காப்பாற்றும்.என்பதுதான்
அதைதான் திருவள்ளுவரும்
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும்
அறத்தால் வருவதே இன்பம்
என்று எழுதி வைத்தார்.
அந்த கொள்கையை தன்
வாழ்வில் கடைபிடித்தவர்
அகத்திய பெருமான்.
அதனால்தான் அகத்தியர் யார்
என்று உமையவள் கேட்டதற்கு
அகத்தியமே சத்தியம்
சத்தியமே அகத்தியம்
என்றார். சிவபெருமான்
அந்த அகத்திய பெருமானின் விழா
சக்தி அருட்கூடத்தில் 18.3.2013
அன்று விமரிசையாக நடக்கிறது.
வாய்ப்புடையவர்கள்
கலந்துகொண்டு அருள் பெறுங்கள்.
இன்னும் வரும்)
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/
இது குறித்த மேலும் பல தகவல்களுக்கு
கீழ்கண்ட வலை இணைப்பில்
விவரம் அறிந்துகொள்வீர்.
http://www.arulvanam.org/
விளக்கம் அருமை ஐயா...
ReplyDelete