பாடு பட்டால் பலனுண்டு
கூவியழைத்து கூப்பாடு
போட்டால்தான் குறை தீரும்
குழந்தை அம்மா என்று கூப்பாடு போட்டால்தான்
தாய் அதன் பசியை போக்குவாள்
அதைபோல்தான் சாப்பிடுவதற்கு பாடுபட்டு
உழைத்தால்தான் சாப்பாடு கிடைக்கும்
எதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்
இல்லையெனில் எதுவும் கிடைக்காது. எதுவும் நடக்காது
நம் துன்பம் தீர ஒரே வழி பாடுவதுதான்
அதுதான் இறைவனை நோக்கி வழிபாடு செய்வது
அதுவும் அவன் புகழை பாடுவது இறைவனுக்கு உகந்தது
நமக்கும் நன்மை பயப்பது
ஆலயத்திற்கு வராதவர்களை காண இறைவனே
கோயிலிருந்து புறப்பாடு கண்டருளுகிறான்.
பாடுவோம் அவன் புகழை
நாடுவோம் நல்லதோர் வாழ்வை
/// நம் துன்பம் தீர ஒரே வழி பாடுவது தான் ///
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteதுன்பம் தீர மட்டும் பாட்டு அல்ல
Deleteஅதுஇன்பத்தை கூட நினைக்கும் நேரமெல்லாம்
அள்ளி அள்ளி தரும்.
இன்று ஒரே ஒரு பாட்டு பாடியே
உலகில் புகழ் பெற்றுவிடுகிறார்கள் சிலர்.
பாடினால் ஒரே நாளில்
உலக புகழ் பெற்றுவிடலாம்.
ஆழ்வார்களும்,நாயன்மார்களும் இறைவன் மீது
பாடிய பாடல்களை பாடித்தான்
பின்னாளில் பல புலவர்கள்,
ஞானிகள் தோன்றினார்கள்
இன்றும் சங்கீதம் பாடி அவர்களும் இன்புற்று மற்றவர்களையும்இன்புற செய்கின்றனர் கணக்கற்ற பாடகர்களும் இசை கலைஞர்களும்
பாட்டு எழுதுபவர்களும்,
அதற்க்கு இசை அமைப்பவர்களும்
உலகெங்கும் பெரும் பொருள் ஈட்டுவதுடன்,
புகழையும் அடைகின்றனர்.
எனவே பஞ்ச பாட்டு படுவதை விடுத்து
முழு ஈடுபாட்டுடன் உழைத்தால்
வெற்றி பாட்டு பாடலாம்.
உலகமும் நம்மை போற்றி பாடும்.
அருமை.
ReplyDeleteநன்றி.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி,
Delete