தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
தீபாவளி பற்றிய கதைகள்
ஒரு பக்கம் இருக்கட்டும்.
புராணங்கள் இருக்கட்டும்.
ஒளி இருக்கும் இடத்தில்
இருள் இருக்காது
அறியாமை என்னும் இருள் நீங்கினால்
அறிவில் ஒளி உண்டாகும்
சிந்தனையில் தெளிவு உண்டாகும்.
இறைவன் ஒளியாய் இருக்கின்றான்
நம் உள்ளத்தில்
புறத்தே ஆதவனாய் ஒளி வீசி
இந்த அவனியை இயக்குகின்றான்
புறத்தே உள்ள அவனை
அகத்தேயும் கண்டு ஆனந்தம்
அடைய செய்யும் முயற்சிகளே
விளக்கை ஏற்றுதல், வெடிகளை வெடித்து
அதிலிருந்து வெளிப்படும் வண்ண வண்ண ஒளி
சிதறல்களை கண்டு மகிழ்வது.
உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கில்
ஒளியுண்டாகும் என்றான் பாரதி
இந்த நல்ல நாளில் மக்கள் மனதில்
உள்ள அறியாமை, பொறாமை, கல்லாமை,
பொல்லாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள்
விலகி அன்பு ஒளிவிட்டு பிரகாசிக்கட்டும்.
இல்லங்களில் இல்லாமை நீங்கட்டும்.
தீபாவளி பற்றிய கதைகள்
ஒரு பக்கம் இருக்கட்டும்.
புராணங்கள் இருக்கட்டும்.
ஒளி இருக்கும் இடத்தில்
இருள் இருக்காது
அறியாமை என்னும் இருள் நீங்கினால்
அறிவில் ஒளி உண்டாகும்
சிந்தனையில் தெளிவு உண்டாகும்.
இறைவன் ஒளியாய் இருக்கின்றான்
நம் உள்ளத்தில்
புறத்தே ஆதவனாய் ஒளி வீசி
இந்த அவனியை இயக்குகின்றான்
புறத்தே உள்ள அவனை
அகத்தேயும் கண்டு ஆனந்தம்
அடைய செய்யும் முயற்சிகளே
விளக்கை ஏற்றுதல், வெடிகளை வெடித்து
அதிலிருந்து வெளிப்படும் வண்ண வண்ண ஒளி
சிதறல்களை கண்டு மகிழ்வது.
உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கில்
ஒளியுண்டாகும் என்றான் பாரதி
இந்த நல்ல நாளில் மக்கள் மனதில்
உள்ள அறியாமை, பொறாமை, கல்லாமை,
பொல்லாமை போன்ற எதிர்மறை எண்ணங்கள்
விலகி அன்பு ஒளிவிட்டு பிரகாசிக்கட்டும்.
இல்லங்களில் இல்லாமை நீங்கட்டும்.