நவராத்திரி (7)
இன்று விஜய தசமி நன்னாள்.
இவன் உள்ளத்தில் புகுந்துகொண்டு எந்நேரமும் ஒலித்துக்கொண்டிருக்கும் இராம நாமத்தின் பெருமைதனை இவ்வுலகிற்கு பகிர்ந்துகொள்ளவும்
இறைக்கருணைதனை விளக்கும் பதிவுகளை
இவனின் படைப்புகளுடன் வெளியிடவழிவகை செய்த
இறைவனுக்கும் எண்ணிக்கையில் சிறிதானாலும் தொடர்ந்து பின்னூட்டமிட்டு இவனை உற்சாகபடுத்திய
நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை
காணிக்கையாக்குகிறேன்.
கருத்துக்களை பகராவிட்டாலும்
ஆயிரக்கணக்கில் இவன்படைப்பை பார்வையிட்ட
அன்பர்களுக்கு நன்றி.
இறைவனின் கருணையை எடுத்தியம்ப
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் போதாது
எனவே இவன் ஆன்மீக பணி தொடரும்.
இறைகருணையை விளக்கும்
இந்த பதிவு 600 ஆவது பதிவு
இன்பமாக தொடங்கிய நவராத்திரி விழா
இனிதே நிறைவு பெறும் நன்னாள்
அனைத்து சக்திகளை பெற்றிருந்தும்
அழிவு சக்தியாக வாழ்ந்து அனைவருக்கும்
துன்பத்தை அளித்த மகிஷனை மரிக்க வைத்த
மகிஷாசுர மர்தினி அனைவருக்கும்
ஆசிகளையும் வரங்களையும்
அள்ளித்தரும் நாள்.
கரையில்லா கல்வியை
கற்க தொடங்கும் நன்னாள்
முகத்தில் கண்களிருந்து பயனில்லை
கல்வியை கற்காதவரை .
கலைமகளின் பூரண ஆசியுடன் இன்று
அனைவரும் கலைகளையும்,
கல்வியையும் கற்கபுகும் சுபதினம்
உயிர்வாழ உதவும் பயிர்க்கருவிகளுக்கும்,
உலகமெல்லாம் இன்புற்றுவாழ உதவும்
தொழிற்கருவிகளுக்கும் வழிபாடு செய்து
நன்றியினை தெரிவிக்கும் நாள்.
இந்நாளில் தொடங்கும் அனைத்து செயல்களும்
வெற்றியை எட்டட்டும்.
இனி வரும் காலமுழுவதும்
மக்கள் மகிழ்ச்சியோடு வாழட்டும்.
அன்பினால் அனைவரும்
ஒன்றுபட்டும்.
சூறாவளி புயல்போல் வீசி
மக்களின் மனதில் அழிவுகளை ஏற்படுத்தும்
அகந்தை மற்றும் பொறாமை புயல்கள்
வலுவிழந்து போகட்டும்.
எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள்
அதற்காக வீணாக்கும் சக்தியை நல்ல செயல்கள்
செய்ய பயன்படுத்தட்டும்
கொலு வைத்த நாளிலிருந்து
அனைவருக்கும் நன்மைகளைதந்த நவராத்திரி
பழகி களித்த பொம்மை வடிவில் இருந்த
இறைவடிவங்களும் ,பல்லுயிர்களின் வடிவங்களும்
இனி அரிதுயில் கொள்ளச் சென்றுவிடும்.
ஆனால் அவைகள் நம் மனதில் விட்டு
சென்ற மகிழ்ச்சியும் எழுச்சியும்
நம் மனதில் நின்று நீங்காது நம்மை
நாளும் பரவசப்படுத்தும்
என்பதில் ஐய்யமில்லை
இன்று விஜய தசமி நன்னாள்.
இவன் உள்ளத்தில் புகுந்துகொண்டு எந்நேரமும் ஒலித்துக்கொண்டிருக்கும் இராம நாமத்தின் பெருமைதனை இவ்வுலகிற்கு பகிர்ந்துகொள்ளவும்
இறைக்கருணைதனை விளக்கும் பதிவுகளை
இவனின் படைப்புகளுடன் வெளியிடவழிவகை செய்த
இறைவனுக்கும் எண்ணிக்கையில் சிறிதானாலும் தொடர்ந்து பின்னூட்டமிட்டு இவனை உற்சாகபடுத்திய
நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை
காணிக்கையாக்குகிறேன்.
கருத்துக்களை பகராவிட்டாலும்
ஆயிரக்கணக்கில் இவன்படைப்பை பார்வையிட்ட
அன்பர்களுக்கு நன்றி.
இறைவனின் கருணையை எடுத்தியம்ப
எத்தனை பிறவிகள் எடுத்தாலும் போதாது
எனவே இவன் ஆன்மீக பணி தொடரும்.
இறைகருணையை விளக்கும்
இந்த பதிவு 600 ஆவது பதிவு
இன்பமாக தொடங்கிய நவராத்திரி விழா
இனிதே நிறைவு பெறும் நன்னாள்
அனைத்து சக்திகளை பெற்றிருந்தும்
அழிவு சக்தியாக வாழ்ந்து அனைவருக்கும்
துன்பத்தை அளித்த மகிஷனை மரிக்க வைத்த
மகிஷாசுர மர்தினி அனைவருக்கும்
ஆசிகளையும் வரங்களையும்
அள்ளித்தரும் நாள்.
கரையில்லா கல்வியை
கற்க தொடங்கும் நன்னாள்
முகத்தில் கண்களிருந்து பயனில்லை
கல்வியை கற்காதவரை .
கலைமகளின் பூரண ஆசியுடன் இன்று
அனைவரும் கலைகளையும்,
கல்வியையும் கற்கபுகும் சுபதினம்
உயிர்வாழ உதவும் பயிர்க்கருவிகளுக்கும்,
உலகமெல்லாம் இன்புற்றுவாழ உதவும்
தொழிற்கருவிகளுக்கும் வழிபாடு செய்து
நன்றியினை தெரிவிக்கும் நாள்.
இந்நாளில் தொடங்கும் அனைத்து செயல்களும்
வெற்றியை எட்டட்டும்.
இனி வரும் காலமுழுவதும்
மக்கள் மகிழ்ச்சியோடு வாழட்டும்.
அன்பினால் அனைவரும்
ஒன்றுபட்டும்.
சூறாவளி புயல்போல் வீசி
மக்களின் மனதில் அழிவுகளை ஏற்படுத்தும்
அகந்தை மற்றும் பொறாமை புயல்கள்
வலுவிழந்து போகட்டும்.
எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள்
அதற்காக வீணாக்கும் சக்தியை நல்ல செயல்கள்
செய்ய பயன்படுத்தட்டும்
கொலு வைத்த நாளிலிருந்து
அனைவருக்கும் நன்மைகளைதந்த நவராத்திரி
பழகி களித்த பொம்மை வடிவில் இருந்த
இறைவடிவங்களும் ,பல்லுயிர்களின் வடிவங்களும்
இனி அரிதுயில் கொள்ளச் சென்றுவிடும்.
ஆனால் அவைகள் நம் மனதில் விட்டு
சென்ற மகிழ்ச்சியும் எழுச்சியும்
நம் மனதில் நின்று நீங்காது நம்மை
நாளும் பரவசப்படுத்தும்
என்பதில் ஐய்யமில்லை
அண்ணாவின் 600வது பதிவுக்கு மனம் நிறைந்த இனிய அன்பு வாழ்த்துகள்.
ReplyDelete>>>>>
நன்றிVGK
Deleteஅண்ணா வரைந்துள்ள அம்பாள் படங்களுக்குப் பாராட்டுக்கள்.
ReplyDelete>>>>>
பாராட்டுக்கு நன்றிVGK
Delete//இன்பமாக தொடங்கிய நவராத்திரி விழா இனிதே நிறைவு பெறும் நன்னாள் //
ReplyDelete//கரையில்லா கல்வியை கற்க தொடங்கும் நன்னாள்//
அண்ணா 600ஐ முடித்து விரைவில் 1000ஐ எட்டிப்பிடிக்க முயற்சிக்கப்போகும் நன்னாள் கூட ;)))))
>>>>>
அந்த நாளும் வந்திடாதோ!
Delete//ஆனால் அவைகள் நம் மனதில் விட்டுச்சென்ற மகிழ்ச்சியும் எழுச்சியும்
ReplyDeleteநம் மனதில் நின்று நீங்காது நம்மை நாளும் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை //
மறக்க மனம் கூடுதில்லையே !
http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.
தொடர்ந்து இவன் கருத்துக்களுக்கு பின்நூட்டமிட்டுவரும் உங்களுக்கும் மிக பெரிய நன்றி
Deleteஐயா 600 வது பதிவிற்கு உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDelete///இனி வரும் காலமெல்லம்
மக்கள் மகிழ்ச்சியோடு வாழட்டும்///
தங்கள் வாக்கு பலிக்கட்டும் ஐயா
நன்றி
பிறர் நலம் பேணுவோம்.ஏனென்றால்
Deleteஅதில் நம் நலமும் அடங்கியுள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணரத் தலைப்பட்டால் இவ் வையகம் சொர்க்க பூமியாகிவிடும்.
நன்றி
சிறப்பான பகிர்வு ஐயா...
ReplyDelete600 வது பதிவு - மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா... நன்றிகள் பல...
தொடர்ந்து இவன் கருத்துக்களுக்கு பின்நூட்டமிட்டுவரும் உங்களுக்கு மிக பெரிய நன்றி
Delete600 வது பதிவுக்கு இனிய் வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!!
ReplyDeleteஎதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்கள்
அதற்காக வீணாக்கும் சக்தியை நல்ல செயல்கள்
செய்ய பயன்படுத்தட்டும்
அவ்வப்போது உங்கள் பொன்னான நேரத்தை இவனுக்காக ஒதுக்கி ஆக்கபூர்வமான கருத்துக்களை அளித்தமைக்கு நன்றி. தொடர வேண்டுகிறேன்.
Delete