Tuesday, October 29, 2013

எல்லாம் பிரம்ம மயம்

எல்லாம் பிரம்ம மயம் 





ஒரு கதை உண்டு 


ஒரு அரசனுக்கு திடீரென்று ஞானம்


பிறந்ததாக நினைத்துக்கொண்டான். 

எல்லாம் பிரம்மம் என்று

பிதற்ற தொடங்கினான்.

அரசியை நீயும் பிரம்மம், 

மாட்டையும் பிரம்மம் என்றான் 

காண்பவர் எல்லாரையும் பிரம்மம் 

என்று பிதற்றிக்கொண்டு 
.
நாட்டை சரிவர கவனிக்க வில்லை .

அரசிக்கு தர்ம சங்கடமாய் போய்விட்டது. 

அவள் குருவிடம் சென்று முறையிட்டாள் 

குரு நீ கவலைப்படாமல் போ.

இன்று மதியம் சாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்.

மன்னன் இலையில் மட்டும், மாட்டு சாணி,

 கற்கள் , முள்,குப்பை இவற்றை வை. 

என் இலையில் மட்டும் எல்லா 

உணவுகளையும் வை. என்று சொன்னார். 


மதியம் அரசனும் குருவும் 

உணவு உண்ண அமர்ந்தார்கள்.

இலையில் உள்ளதை பார்த்த அரசனுக்கு 

கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது 

அரசியைப் பார்த்து சத்தம் போட்டான்.


அப்போது குரு பொறுமையாக சொன்னார்.

அரசனே, நீதான் எல்லாவற்றையும் 

பிரம்மமாக பார்ப்பதாக சொன்னாய். 

இலையும் அதில் போடப்பட்டுள்ள 

அனைத்தும் பிரம்மம்.

நீயும் பிரம்மம். பிரம்மம் 

பிரம்மத்தை சாப்பிடட்டும். 

ஆகட்டும் என்றார்.

அப்போதுதான் அரசனுக்கு 

தான் செய்யும் மடத்தனம் புரிந்தது. 


தத்துவம் வேறு 

வாழ்க்கை வேறு

தத்துவத்தை புரிந்துகொள்ளாமல் 

அதை வாழ்க்கையில் நடைமுறைபடுத்த முடியாது

என்பதை உணர்ந்துகொண்டு 

தன் சகஜ நிலைமைக்கு திரும்பினான்.


அரசன்போல் இன்று பலர்  நூல்களைப் படித்துவிட்டு 

தானே பிரம்மம் என்று கூறிக்கொண்டு 

கடமைகளை செய்யாமல், தன்னையும் 

ஏமாற்றிக்கொண்டு பிறரையும் 

ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர்.


அவர்கள் இதை படித்த பிறகாவது 

உண்மை நிலையை அறிந்துகொள்ளட்டும். 

3 comments:

  1. சொன்ன கதையும் சொல்ல வந்த கருத்தும் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
  2. // இன்று பலர் நூல்களைப் படித்துவிட்டு தானே பிரம்மம் என்று கூறிக்கொண்டு கடமைகளை செய்யாமல், தன்னையும்
    ஏமாற்றிக்கொண்டு பிறரையும் ஏமாற்றிக்கொண்டு திரிகின்றனர்.//

    கரெக்டூஊஊஊஊ. இன்னிக்குத்தான் அண்ணா சொல்வது ‘பிரும்ம’ ஆனந்தமாக உள்ளது.

    ’எல்லாம் பிரம்ம மயம்’. ஆனாலும் ‘தத்துவம் வேறு வாழ்க்கை வேறு’

    சூப்பர். ;)

    >>>>>

    ReplyDelete
  3. பிரும்ம மயமாக பிரும்மானந்தமாக இதைப்படித்துக்கொண்டிருந்தேனா!.

    மணியாச்சு .... மணி 10 ஆகப்போவுது. இப்போ சாப்பிட வருவீங்களா மாட்டீங்களா? ஏதோவொரு அதட்டல்.

    ’எல்லாம் பிரம்ம மயம்’. ஆனாலும் ‘தத்துவம் வேறு வாழ்க்கை வேறு’

    இதோ .... ஓடிட்டேன் .... சாப்பிடத்தான். ;)

    ReplyDelete