நவராத்திரி (3)
குழந்தைகள் முதல் பெரியோர் வரை
அனைவரும் கொண்டாடி மகிழும்விழா
என்றால் மிகையாது.
சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும்
மத பேதமின்றி பயன்பெறும் விழா
பெண்ணினம்
பெருமைபடுத்தப்படும் விழா
அறிவுக் கடவுள் கலைமகளை
ஆனந்தமாய் துதிக்கும் அற்புத திருவிழா
அஷ்ட அயிஸ்வரியங்களை அள்ளி
கொடுக்கும் அஷ்ட லட்சுமியை
அலங்கரித்து பூஜிக்கும்
ஆனந்த திருவிழா
வீரத்தையும், விவேகத்தையும்,
ஞானத்தையும் தந்து
அறியாமையை ஒழித்து
அகந்தையின் வடிவாம் மகிஷனை அழித்து
தீய சக்திகளை வெற்றி கொள்ளும்
காளிமாதாவின் கருணையை பறைசாற்றும்
பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் திருவிழா
எங்கு நோக்கினும் தெய்வீக மணம் கமழும்
மக்கள் மனமெல்லாம் பக்தியில்
ஆழ்ந்து பரவசப்படும் காலம்.
இந்த ஆனந்த வெள்ளம்
உலகமெல்லாம்
பரவட்டும்.
மக்கள் மனங்களில்
தீய சிந்தனைகள் நீங்கி
நல்ல சிந்தனைகள் ஓங்கட்டும்.
ஓம் சக்தி
குழந்தைகள் முதல் பெரியோர் வரை
அனைவரும் கொண்டாடி மகிழும்விழா
என்றால் மிகையாது.
சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும்
மத பேதமின்றி பயன்பெறும் விழா
பெண்ணினம்
பெருமைபடுத்தப்படும் விழா
அறிவுக் கடவுள் கலைமகளை
ஆனந்தமாய் துதிக்கும் அற்புத திருவிழா
அஷ்ட அயிஸ்வரியங்களை அள்ளி
கொடுக்கும் அஷ்ட லட்சுமியை
அலங்கரித்து பூஜிக்கும்
ஆனந்த திருவிழா
வீரத்தையும், விவேகத்தையும்,
ஞானத்தையும் தந்து
அறியாமையை ஒழித்து
அகந்தையின் வடிவாம் மகிஷனை அழித்து
தீய சக்திகளை வெற்றி கொள்ளும்
காளிமாதாவின் கருணையை பறைசாற்றும்
பாரதம் முழுவதும் கொண்டாடப்படும் திருவிழா
எங்கு நோக்கினும் தெய்வீக மணம் கமழும்
மக்கள் மனமெல்லாம் பக்தியில்
ஆழ்ந்து பரவசப்படும் காலம்.
இந்த ஆனந்த வெள்ளம்
உலகமெல்லாம்
பரவட்டும்.
மக்கள் மனங்களில்
தீய சிந்தனைகள் நீங்கி
நல்ல சிந்தனைகள் ஓங்கட்டும்.
ஓம் சக்தி
இந்த ஆனந்த வெள்ளம் உலகமெல்லாம் பரவட்டும் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமுதல் படத்தில் பெரிய கொலுபொம்மைகள் போல நிற்கும் இரு குழந்தைகளும் நல்ல அழகு. மிகவும் ரஸித்தேன்.
ReplyDelete>>>>>
ரசிப்பதற்கு கள்ளமிலா உள்ளம் வேண்டும்
Deleteஅதும் உங்களிடம் உள்ளது.
இந்த குழந்தைகள் மும்பையிலிருந்து இந்த கொலுவிற்க்காக சென்னை வந்து போஸ் கொடுத்துவிட்டு உடன் திரும்பிவிட்டார்கள் .
பாராட்டிற்கு பாராட்டுக்கள்
தாங்கள் வரைந்துள்ள மூன்று படங்களும் ஜோர் ஜோர்.
ReplyDeleteகலைவாணியின் அருள் உங்களுக்கு எதேஷ்டமாகவே உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
>>>>>
பாராட்டிற்கு நன்றிகள்.VGK
Delete
ReplyDelete//எங்கு நோக்கினும் தெய்வீக மணம் கமழும் மக்கள் மனமெல்லாம் பக்தியில் ஆழ்ந்து பரவசப்படும் காலம்.
இந்த ஆனந்த வெள்ளம் உலகமெல்லாம் பரவட்டும்.
மக்கள் மனங்களில் தீய சிந்தனைகள் நீங்கி நல்ல சிந்தனைகள் ஓங்கட்டும்.//
அருமையான படைப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.
ASHTAVATHANIKKU SASHTANGA NAMASKARAM
ReplyDeleteஅவள்தான் அனைத்தையும் ஆற்றுபவள்
Deleteஅன்பால் யாவினையும் கூட்டுபவள்.
அவள் கையில்இவன் வெறும் கருவியே
இவனின் வணக்கத்தையும் அருள் கூர்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள் .