Wednesday, October 2, 2013

கடவுளைக் காண முடியுமா?

கடவுளைக் காண முடியுமா? 



ஒரு பானை செய்யும் குயவன்
அந்த பானையை செய்வதற்கு முன்
அதற்கான மூலப்பொருளான மண்ணை தயார்படுத்துகிறான்
பிறகு வடிவமைக்கிறான். வெய்யிலில்  உலர்த்துகிறான்.
தீயில் சுடுகிறான். அதை விற்கிறான்.
அதை பிறர் வாங்கி பயன் படுத்துகின்றனர்.

அதை விற்றபிறகு அவன் அதைப்பற்றி
சிந்தை செய்வது கிடையாது.

அந்த பானை சிறிது காலத்திற்கு பிறகு
உடைந்து மீண்டும் மண்ணாகிறது.

அது எந்த இடத்தில்  மண்ணாகிறதோ
அந்த இடத்தில அது மீண்டும் பானையாக
 உருவெடுப்பதில்லை   அது விழும் இடத்தை பொருத்து செங்கலாகலாம்,அல்லது பொம்மையாகலாம் .
,வீட்டு மண் சுவராகலாம். அது எது வேண்டுமானாலும் ஆகலாம்.

அதைப்போல்தான் நம்முடைய உடலும்
 மண் போன்றதுதான்.

வடிவங்கள் மாறினாலும்
மூலப்பொருளான மண் மாறப்போவதில்லை.

அதுபோல்தான் உடல்களையே உயிராக
கருதும் மனப்பான்மை இருக்கும் வரை
இந்த கேள்விகளுக்கு பதில் இல்லை.

 உயிர் உடலில் இருக்கும்வரை
இந்த உடல் இயங்கும். அது வெளியேறிவிட்டால்
அது வெறும் மண்தான்.

மண்பானை உடைவதைபற்றி
உண்மையை அறிந்தவர்கள் கவலைப்படுவார்களோ?

உயிர் அழிவதில்லை
ஏனெனில் அதனுள் ஆன்மாவாகிய
இறைவன் இருக்கின்றான்.

அனுபவங்களினால் ஓரறிவாக
இந்த உலகில் ஜனித்த உயிர் வளரத் தொடங்குகிறது.
அது படிப்படியாக வளர்ந்து இந்த உண்மையை
அறிந்து தெளிய வேண்டும்.

அதற்க்கு ஆத்ம  விசாரணை
செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்யாதவர்கள் அறியாமையில்
 மூழ்கி கிடந்து வருந்துவதை தவிர வேறு வழியில்லை.

 கடவுள் எங்கிருக்கிறார், எப்படி இருக்கிறார்,
 எவ்வாறு செயல்படுகிறார், அவரைப் பார்க்கமுடியுமா
என்றெல்லாம் வாதம் செய்து எதுவும் அறியமுடியாது.

முறையான, நம்பிக்கையுடன் கூடிய
சிந்தனை வேண்டும். பொறுமை வேண்டும்.
முயற்சி செய்யாமல் எந்த முன்னேற்றமும் விளையாது.

கடவுளை அறிந்த, உணர்ந்த ஞானிகளை
தேடி சென்று அகந்தையை விட்டொழித்து
இறை ஞானத்தை பெறவேண்டும்

கடவுளை காசு கொடுத்து பெறமுடியாது.
கடவுளை காசுக்கு விறபவர்களிடம்
சென்று பெறமுடியாது

கடவுளை அவரவர் தனக்குள்ளே
உணரவேண்டிய பொருள்.

அது கண்காட்சி பொருளல்ல

எப்படி ஒரு குயவன் தான் செய்யும் பானைகள்
செய்யும்போது உடைந்தாலோ, கையாளும்போது உடைந்தாலோ,
தவறி உடைந்தாலோ, பிறருக்கு விற்றபின் உடைந்தாலோ
கவலைப்படாமல் மீண்டும் மீண்டும் பானைகளை செய்வதில் ஈடுபடுவதுபோல்தான் இறைவனும் மனிதர்களையும் உயிர்களை, படைப்பதும், காப்பதும், அழிப்பதும் ,மறைப்பதும் செய்வது.

இதை அறியாமல், விபத்துக்களுக்கும்,
இயற்கை பேரழிவுகளுக்கும்,
இறைவன் மீது குற்றம்சுமத்தி திரிவது
அறியாமை யின் பாற்  பட்டதாகும்.


8 comments:

  1. கடவுளை அறிந்த, உணர்ந்த ஞானிகளை தேடி சென்று அகந்தையை விட்டொழித்து இறை ஞானத்தை பெறவேண்டும்

    கடவுளை காசு கொடுத்து பெறமுடியாது. கடவுளை காசுக்கு விறபவர்களிடம் சென்று பெறமுடியாது

    கடவுளை அவரவர் தனக்குள்ளே உணரவேண்டிய பொருள்.

    அது கண்காட்சி பொருளல்ல//

    அருமை அருமை அருமை. அனைத்தும் அருமை. குயவனின் மண் உதாரணம் அதைவிட அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. எடுத்துக்காட்டு மிகவும் அருமை... உணர வேண்டும் என்பதும் உண்மை ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமை ஐயா. அனைவரும் உணர வேண்டிய பாடம். நன்றி

    ReplyDelete