Wednesday, October 9, 2013

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் 

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
காசுள்ளபோதே சேர்த்துக்கொள்
என்ற பழமொழியை
பலர் கேட்டிருக்கக்கூடும்

முதல் பழமொழி பல ஆண்டுகளுக்கு
முன் கிராமங்களில் வசித்தவர்களுக்கு தெரியும்.
 நகரத்திலேயே பிறந்து வாழ்பவர்களுக்கு
இதைப் பற்றியறிய வாய்ப்பில்லை.




வயலிருந்து நெற்கதிர்களை
அறுவடை செய்ததும் அதை களத்துமேட்டில் அடித்து
நெல்மணிகளை பிரித்து வெயிலில் உலர்த்திய பிறகு
அதில் கலந்துள்ள பதர்கள், தூசிகள், வைக்கோல் துகள்கள்
ஆகியவற்றை நீக்க நன்றாக காற்று வீசும்போது
முறத்தில் எடுத்து தூற்றும்போது கனமான்
நெல்மணிகள் கீழே விழுந்துவிடும்
மற்றவையெல்லாம் காற்றில் பறந்துவிடும்.
 காற்றில்லாவிடில் இதை செய்ய முடியாது.
அதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
என்று பழமொழி வந்துவிட்டது.

ஆனால் அதன் உண்மையான
பொருள் வேறு.

இந்த உடலில் மூச்சுக்   காற்று இருக்கும்போதே
மனதில் உள்ள தேவையற்ற தீய எண்ணங்களை
,நச்சுப்பொருட்களை நீக்கிகொள்ளவேண்டும்
.மூச்சுக் காற்று நின்றுவிட்டால்
எதையும் செய்யமுடியாமல் போய்விடும்

உடலில் உயிர் இருக்கும்போதே
நல்ல செயல்களை செய்யவேண்டும்.
 அன்பு செய்ய  வேண்டும். .

அதனால்தான் மூச்சுக்காற்றாக இயங்கும்
இறைவனை அது உடலில் வந்து போகும்போதே
அவனை துதித்தூய்ய வேண்டும்
என்பதே அதன் உண்மையான பொருள்.



காசுள்ளபோதே சேர்த்துக்கொள்
அதன் பொருள் என்ன? (இன்னும் வரும்)

pic-courtesy-google images. 

8 comments:

  1. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் ..... முறத்துடன் உள்ள படம் - அருமையான பொருத்தமான தேர்வு.

    //இந்த உடலில் மூச்சுக் காற்று இருக்கும்போதே மனதில் உள்ள தேவையற்ற தீய எண்ணங்களை ,நச்சுப்பொருட்களை நீக்கிகொள்ளவேண்டும். .மூச்சுக் காற்று நின்றுவிட்டால் எதையும் செய்யமுடியாமல் போய்விடும்//

    அருமையான புதிய விளக்கம். - அண்ணாவுடையது. ;) பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி VGK

      Delete
  2. //’காசுள்ளபோதே சேர்த்துக்கொள்’ அதன் பொருள் என்ன? (இன்னும் வரும்)//

    அடடா, இதுவல்லவோ முக்கியம்.

    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றல்லவா
    சொல்லியிருக்கிறார்கள்.

    தீபாவளிப்பண்டிகை வேறு நெருங்கி விட்டது.

    துட்டு அல்லவோ முக்கியம்.

    சீக்கரமாகச் சொல்லுங்கோ.

    நிறைய பேர் தீபாவளி இனாம் கேட்டு தலையைச் சொரிந்து கொண்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். ;)))))

    ReplyDelete
    Replies
    1. //’காசுள்ளபோதே சேர்த்துக்கொள்’ அதன் பொருள் என்ன? (இன்னும் வரும்)//

      அடடா, இதுவல்லவோ முக்கியம்.

      பேராசைக்காரர்களுக்கு எவ்வளவு காசு வந்தாலும் போதாது .காசு முக்கியம்தான். ஆனால் காசுதான் முக்கியம் மற்றவைகள் முக்கியமில்லை என்பவர்கள்
      ஒரு நாள் உணருவார்கள். காசிருந்தும் ஒன்றும் பயனில்லை என்று.

      பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றல்லவா
      சொல்லியிருக்கிறார்கள்.

      பொருள் என்றால் இந்த உலகில் பிறந்தமைக்கு, வாழ்வதற்கு ஒரு பொருள்(அர்த்தம்) இருக்கவேண்டும். அது இல்லாமல் வாழ்பவர்களுக்கு இவ்வுலகம் இல்லை என்று பொருள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மனிதராக பிறவி எடுத்ததற்கு பொருள் இல்லை என்று பொருள்.

      தீபாவளிப்பண்டிகை வேறு நெருங்கி விட்டது.
      துட்டு அல்லவோ முக்கியம்.

      நெருங்கட்டும். பிறர் மெச்சவேண்டும் என்று வாழ்க்கை நடத்துபவர்களுக்குத் தான் துட்டு தான் முக்கியம்


      சீக்கரமாகச் சொல்லுங்கோ.

      நிறைய பேர் தீபாவளி இனாம் கேட்டு தலையைச் சொரிந்து கொண்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். ;)))))

      நன்றாக சொறியட்டும்.பேராசை கொண்டவனும், திருப்தியில்லாதவனும் ,சிரங்கு பிடித்தவனும் சொரிந்துகொண்டு தானிருப்பான். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்.

      Delete
  3. நல்ல விளக்கம் ஐயா - கருத்துரையிலும்...!

    ReplyDelete
  4. Sshr 02 hi s here hsjajfgjnfghsbdyxjsbdyzishdhsiahs.....
    Fack Fauk Fuc gehsv gsvsvzhehsyshzyshzyeh game hacker

    ReplyDelete