நவராத்திரி(5)
நவராத்திரி(5)
இன்று சரஸ்வதி பூஜை
சரஸ் என்றால் நீர் நிறைந்த தடாகம்
நீர் நிறைந்த தடாகத்தில்தான்
அன்னங்கள் அழகு நடை பயிலும்.
நம் மனமும் அன்பால் நிறைந்தால்தான்
வாழ்க்கை இன்பமயமாய் இருக்கும்.
இன்பமயமான வாழ்க்கைக்கு
தேவை இறைவன் அருள் ஒன்றே .
அது இருந்தால் போதும்
அனைத்தும் தானே வந்தமையும் .
இறை சிந்தனைஇல்லா வாழ்க்கை
மணம் இல்லா காகித பூக்கள் போல்.
சுகமாய் வாழ பொருள் வேண்டும்.
அதைதருபவள் இலக்குமி தேவி.
எந்த மதத்தை சேர்ந்தவராயினும்
அவர்களின் ஒரே இலக்கு பொருள் சேர்ப்பதும்
அதைக் கொண்டு பல சுகங்களை அனுபவிப்பதுமே.
அது அனைத்து வளங்களையும் நமக்கு அளிக்கிறது.
அலைகடலில் உதித்த ஆதி லக்ஷ்மிதேவியை
மலரிட்டு வணங்கி போற்றி துதிப்போம்.
எல்லாம் இருந்தும் கல்வி செல்வம்
இல்லாவிடில் எந்த பயனும் இல்லை.
கல்லா நிறைய காசு நிறைந்திருப்பினும்
கல்லா மூடரை யார்தான் விரும்புவார்?
அந்த செல்வத்தை வழங்கும்
கலைவாணியை போற்றி
துதிப்போம் இந்நாளில்.
இரண்டும் இருந்து, அதை பயன்படுத்த இயலாது
கோழையாய் இருந்தால் என்ன பயன்?
செல்வத்தை பேணி பாதுகாத்து
பயன்படுத்தும் மனத்திண்மையும்,
நற்குணமும் இல்லாது போயின்
என்ன பயன்?
அதைத் தரும் அம்பிகையை
துதிப்போம் இந்நாளில்.
முக்கண்ணியும், முக்கண்ணனும்,
கண்ணனும்,கந்தனும்,காளியும்,
கணபதியும் ஒரே பரம்பொருளின்
பல வடிவங்கள் என்பதை உணர்ந்து
பேதமற்று வணங்கி வாழ்வின்
அனைத்து நிலைகளிலும்
இன்பத்தையே கண்டு மகிழ்வோமாக.
அருமை...
ReplyDeleteஇனிய விஜயதசமி நல்வாழ்த்துக்கள்...
விஜயதசமி நல்வாழ்த்துக்கள்..DD
Deleteஇறைவன் அருள் ஒன்றே . அது இருந்தால் போதும் அனைத்தும் தானே வந்தமையும் .
ReplyDeleteவிஜயதசமி நல்வாழ்த்துக்கள்...
நன்றி
Deleteவெற்றிமேல் வெற்றி வந்து உங்களை சேரட்டும். உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் விஜயதசமி நல் வாழ்த்துகள்
அன்னங்கள் படத்தேர்வு அருமை. அம்பிகை படம் அசத்தல். நல்ல பகிர்வு. விஜயதஸமி நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவிஜயதசமி நல்வாழ்த்துக்கள்..VGK
Delete