ஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (2)
ஜாபாலி மகரிஷியும்
ராமாயணமும் (2)
ராமாயணமும் (2)
ஸ்ரீ ராமன் தான் கொண்ட கொள்கையில்
உறுதியாக இருக்கிறானா என்பதை
சோதிக்கும் வகையில் கீழ்கண்டவாறு
ஜாபாலி மகரிஷி அவனிடம் கூறுகிறார்.
இராமா! உன் தந்தையின் ராஜ்ஜியம்
உனக்கு கிடைக்க வேண்டியது .
அதி விரைவில் நீ அயோத்திக்கு
சென்று பட்டாபிஷேகம் செய்துகொள்.
அரசர்கள் அனுபவிக்கத் தகுந்த
சகல போகங்களையும் அனுபவித்துக்கொண்டு
சொர்க்கத்தில் தேவேந்திரன் சுகமாக
இருப்பதுபோல் கோசல நாட்டை
பரிபாலனம் செய்,
மீண்டும் மீண்டும் தந்தையின் ஆணை
என்று திரும்ப திரும்பப் பிதற்றாதே!என்றார்
மேலும் அவர் கூறுகிறார்.
தசரதன் என்பது ஒரு உடல்
அது மடிந்து சாம்பலாகிவிட்டது.
அழிந்த அவ்வுருவத்திர்க்கும்
உனக்கும் இப்போது
எந்த தொடர்பும் இல்லை
கண்ணெதிரில் காத்துக் கிடக்கும்
சுகங்களைத் தள்ளிவிட்டு ,தருமம் என்றும்,
பரலோக என்றும் மூடர்களைப் போல்
நீயும் பேசுகிறாய்
.முட்களும், கற்களும்,நிறைந்த
இந்த காட்டில் ஏன் உன்னை
வருத்திக்கொள்ளுகிறாய் என்று
அவனை உசுப்பிவிடுகிறார்.
மகா புத்திசாலியான நீ பரலோகம்
உண்மை என்று நம்புவது
வியப்பாக உள்ளது !
பரலோகம் என்று
ஒன்றும் கிடையாது
பித்ருவாக்கிய பரிபாலனம் செய்தால்
( அதாவது தந்தை சொற்படி நடந்தால்)
உனக்கும் தசரதருக்கும் விசேஷமான
நன்மை கிடைக்கும் என்பது
எப்படிப் பொருந்தும்?
நமது இந்த ராஜ்ஜியமும் ,
அதனால் கிடைக்கும் போகங்களும் ,
அதிகாரமும் சுகமும் ஆகியவைகள்தான்
நிதரிசனமான உண்மை.
எனவே அவைகளை
எல்லாம் கைப்பற்று .
ஸ்வர்க நரகங்களையும்
பாவ புண்ணியங்களையும்
திரும்பிப் பாராதே !
நான் சொல்லும் இந்த நீதி
உலகோர் எல்லோரும்
ஏற்றுக்கொள்ளும்படியான ஒன்று .
எனவே நீ பரதனின் கோரிக்கையை
ஏற்று ராஜ்ய பாரத்தை ஏற்றுக்கொள்
என்று கூறினார்.
(இன்னும் வரும்)
pic.courtesy-google images
.
உறுதியாக இருக்கிறானா என்பதை
சோதிக்கும் வகையில் கீழ்கண்டவாறு
ஜாபாலி மகரிஷி அவனிடம் கூறுகிறார்.
இராமா! உன் தந்தையின் ராஜ்ஜியம்
உனக்கு கிடைக்க வேண்டியது .
அதி விரைவில் நீ அயோத்திக்கு
சென்று பட்டாபிஷேகம் செய்துகொள்.
அரசர்கள் அனுபவிக்கத் தகுந்த
சகல போகங்களையும் அனுபவித்துக்கொண்டு
சொர்க்கத்தில் தேவேந்திரன் சுகமாக
இருப்பதுபோல் கோசல நாட்டை
பரிபாலனம் செய்,
மீண்டும் மீண்டும் தந்தையின் ஆணை
என்று திரும்ப திரும்பப் பிதற்றாதே!என்றார்
மேலும் அவர் கூறுகிறார்.
தசரதன் என்பது ஒரு உடல்
அது மடிந்து சாம்பலாகிவிட்டது.
அழிந்த அவ்வுருவத்திர்க்கும்
உனக்கும் இப்போது
எந்த தொடர்பும் இல்லை
கண்ணெதிரில் காத்துக் கிடக்கும்
சுகங்களைத் தள்ளிவிட்டு ,தருமம் என்றும்,
பரலோக என்றும் மூடர்களைப் போல்
நீயும் பேசுகிறாய்
.முட்களும், கற்களும்,நிறைந்த
இந்த காட்டில் ஏன் உன்னை
வருத்திக்கொள்ளுகிறாய் என்று
அவனை உசுப்பிவிடுகிறார்.
மகா புத்திசாலியான நீ பரலோகம்
உண்மை என்று நம்புவது
வியப்பாக உள்ளது !
பரலோகம் என்று
ஒன்றும் கிடையாது
பித்ருவாக்கிய பரிபாலனம் செய்தால்
( அதாவது தந்தை சொற்படி நடந்தால்)
உனக்கும் தசரதருக்கும் விசேஷமான
நன்மை கிடைக்கும் என்பது
எப்படிப் பொருந்தும்?
நமது இந்த ராஜ்ஜியமும் ,
அதனால் கிடைக்கும் போகங்களும் ,
அதிகாரமும் சுகமும் ஆகியவைகள்தான்
நிதரிசனமான உண்மை.
எனவே அவைகளை
எல்லாம் கைப்பற்று .
ஸ்வர்க நரகங்களையும்
பாவ புண்ணியங்களையும்
திரும்பிப் பாராதே !
நான் சொல்லும் இந்த நீதி
உலகோர் எல்லோரும்
ஏற்றுக்கொள்ளும்படியான ஒன்று .
எனவே நீ பரதனின் கோரிக்கையை
ஏற்று ராஜ்ய பாரத்தை ஏற்றுக்கொள்
என்று கூறினார்.
(இன்னும் வரும்)
pic.courtesy-google images
.
ஜாபாலி மகரிஷி சொல்வதெல்லாம் நியாயமாகவே தெரிகிறது. ஆனால் இவற்றையெல்லாம் தர்மவானான ஸ்ரீராமர் கேட்கப்போவது இல்லை.
ReplyDeleteதொடருங்கள். படிப்போம்.
ஒரு கதையைப் படிக்கும்போது
Deleteகதை தெரிந்திருந்தாலும் கூட
அப்போதுதான் அதை படிக்கிறோம்
என்ற உணர்வோடு படித்தால்தான்
சுவையாக இருக்கும்.
எப்போதும் தன்னைப் பற்றியே
நினைத்துக்கொண்டு சுயநலத்தைக்
குறிக்கோளாகக் கொண்டவர்கள் எப்படி
சிந்திப்பார்கள் என்பதை ஜாபாலி முனிவர்
நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார்.
இந்த நிகழ்வில்.
தான் சொல்வதே நியாயம் என்று
சாதிப்பவர்கள் அன்றும் இவ்வுலகில் உண்டு
இன்றும் உண்டு. என்றும் உண்டு.
தர்மங்கள் அநேகம் உள்ளன
வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும்
கடைபிடிக்கப்பட்வேண்டிய தர்மங்கள்
ஏராளமாக சாத்திரங்கள் வகுத்துள்ளன.
சில ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும்
முடிவில் மனிதர்களின் மனம் பண்பாட்டு
இன்பமாக வாழவும்.அனைவரும்
இணக்கமாக வாழவும் வழி வகுக்கின்றன
என்பது மறுக்கமுடியாத உண்மை.
தர்மங்களை கடைபிடிப்பதற்கு
சரியான அதைப் பற்றிய
தெளிந்த அறிவு வேண்டும்.
பொறுமை வேண்டும்.
அசைக்கமுடியாத
நம்பிக்கை வேண்டும்.
மன உறுதி வேண்டும்
இல்லையேல்
குழப்பம்தான் மிஞ்சும்.
தொடர்கிறேன் ஐயா
ReplyDeleteதொடர்ந்து வாருங்கள் .வருகைக்கு நன்றி.
Deleteஅருமை ஐயா... தொடர்கிறேன்...
ReplyDeleteதொடர்ந்து வாருங்கள் .
Delete