Friday, October 18, 2013

ஜாபாலி மகரிஷியும் ராமாயணமும் (1)

ஜாபாலி மகரிஷியும் 
ராமாயணமும் (1)

இராமாயணத்தில் ஓர் அழகான கட்டம்
சித்ரகூடத்தில் ரகுநாயகனைப் பரதன் சந்தித்து
அவனை அயோத்திக்கு திரும்பிவிட வேண்டுகிறான்




ஆனால் இராமர் அவன்
வேண்டுதலுக்கு இணங்கவில்லை

தசரத மகாராஜாவின் ப்ரோகிதராக
இருப்பவர் ஜாபாலி மகரிஷி .





பரதனுடன் அங்கு வந்திருந்த ஜாபாலி மகரிஷி
உண்மையாகவே இராமனுக்கு நல்லதை
செய்யவேண்டும் என்று உலகத்தோர்
முன்னால் சார்வாகர்களின்
மதத்தை உபதேசித்தார்

"இராமா"! நீ பெருந்தன்மையான மனத்தை
உடையவன்.

உத்தமமான புத்தியை உடையவன் .

சாதாரண மனிதனைப் போல்
பயனில்லாத வார்த்தைகளைச்
சொல்லுவது உனக்கு அழகல்ல.

யார் யாருக்கு என்ன உறவு?
எவனுக்கு எந்த சாதனத்தால்
என்ன கிடைக்கிறது ?
யோசித்துப் பார்ப்பின்
ஒன்றுமே இல்லை

ஒவ்வொரு பிராணியும்
தனித் தனியாகவே பிறக்கிறது

தனியாகவே இறக்கிறது

ஆகையால் உலகில் தாயென்றும்
தந்தையென்றும் நம்மைப் பெற்றவர்கள்
என்றும் அவர்களிடத்தில் ஆசை வைப்பவன்
எவனும் பித்தன் .

ஒருவன் அயலூருக்குப் போக நினைத்து
ஓரிடத்தில் தங்கி அவ்விடம் விட்டு
மறுநாள் வேறு இடத்திற்குப் போவதுபோல்
மனிதர்களும் தாய்,வீடு, வாசல்
என்பவைகளை வழியில் தங்கும் இடங்களைப்
போல் நினைக்கவேண்டும்.

தொடர்ந்து அவர் மேலும்
கூறலானார்.
 (நாளை வரும் )

Pic.courtesy-google images.

7 comments:

  1. /// ஆசை வைப்பவன் எவனும் பித்தன் ///

    தவறில்லை... மேலும் அறிய தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஆசை வைப்பதில் தவறில்லை
      பேராசைப்படுவதுதான் தவறு.

      விதிவசத்தால் தனக்கு கிடைப்பதை
      அனுபவிப்பதில் தவறில்லை.

      ஆனால் பிறரின் உடைமைகளை அபகரித்து
      அதை அனுபவிப்பது தவறு.

      உழைக்காமல் பிறரின் உழைப்பை
      அட்டைபோல் உறிஞ்சி வாழ்வது தவறு

      உழைத்து பெற்ற ஊதியத்தினால்
      வாழ்வது நன்று.

      பித்து பிடித்தவன் பித்தன்

      அவன் தலைஎழுத்து அலைவதுதான்.
      ஏனென்றால் அவன் மனம்
      நிலையில்லாமல்
      இருப்பதால்தான்.

      தொடர்ந்து படியுங்கள்.

      ஏன் ஜாபாலி மகரிஷி
      அவ்வாறு கூறினார் என்று?

      அவர் ஏன் தருமமே உருவெடுத்து
      வந்த இராமபிரானிடம் தர்மத்தை
      கடைபிடிக்கவேண்டாம்
      என்று கூறினார்?

      தொடர்ந்து பார்ப்போம்.

      Delete
  2. ஜாபாலி மகரிஷியும்
    ராமாயணமும் (1)

    நல்ல துவக்கம்.

    //ஒவ்வொரு பிராணியும் தனித் தனியாகவே பிறக்கிறது
    தனியாகவே இறக்கிறது

    ஆகையால் உலகில் தாயென்றும் தந்தையென்றும் நம்மைப் பெற்றவர்கள் என்றும் அவர்களிடத்தில் ஆசை வைப்பவன்
    எவனும் பித்தன் .//

    இவர் சொல்வதுதான் சரி என்பேன். இதைப் பொதுவாக யாராலும் ஒத்துக்கொள்ள முடியாது. விவேகமுள்ளவர்களுக்கு மட்டுமே இது விளங்கும். ’தாயும் பிள்ளையுமேயானாலும் வாயும் வயிறும் வேறு வேறு தானே’ என்பார்கள். அதைத்தான் இவரும் சொல்கிறார்.

    தொடருங்கோ.

    ReplyDelete
    Replies
    1. கட்டுரை இன்னும் தொடர உள்ளது .

      அதற்குள் எந்த முடிவிற்கும்
      வந்து விடாதீர்கள்.

      உங்கள் பாடு ஆபத்தாகிவிடும்.
      சார்வாக மதத்தின் கொள்கைகள் இவை.

      இவர் கொள்கையால் சமுதாயத்தில்
      இருக்கும் பாசம், பந்தம், நேசம், நெகிழ்ச்சி,
      ஒட்டு, உறவு, உதவும் மனப்போக்கு
      ஆகியவற்றிற்கு ஊறு விளைந்துவிடும்
      என்பதால் இந்த மதம் மக்களிடையே
      அவ்வளவாக எடுபடவில்லை.

      மேலோட்டமாகப் பார்க்கும்போது
      இவரின் கொள்கைகள் யதார்த்தமாக
      இருப்பதுபோல் தோன்றும்

      நீங்கள் உடல் நலமில்லாமல்
      அல்லது காசில்லாமல் துன்பப்படும்போது
      உங்கள் மகனோ உங்களை சார்ந்தவர்களோ
      சார்வாக மதத்தை பின்பற்றுபவர்கள் என்றால்
      உங்கள் கதி என்ன ஆகும் என்று
      கற்பனை செய்து பாருங்கள்?

      இன்னும் தொடருவோம்

      Delete
  3. மேலும் எந்தத்தாய் தந்தையையும் விரும்பி ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது இல்லை. அது ஏதோ விதிவசத்தால் இவர்களிடம் பிறக்கிறது.

    பிறந்த பிறகு குழந்தைப்பருவம் முடியும் வரை பாசமாகவே தான் வளர்க்கிறார்கள். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை.

    பிறகு குழந்தை பெரிசாக பெரிசாக பெற்றோரிடம் பாசமாவது நேசமாவது என அந்தக் குழந்தை தனக்கென்று ஓர் துணையைத் தேடிசெல்கிறது. இது ஓர் இயற்கை உந்துதல்.

    அங்கு அவர்களுக்கு ஏற்படும் நெருக்கத்தால் புனரபி ஜனனம் மீண்டும் நிகழ்கிறது. இது தான் உண்மை. பாசம் நேசம் என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக் தான்.

    ஏனெனில் ஒவ்வொரு பிராணியும் தனித் தனியாகவே பிறக்கிறது
    தனியாகவே இறக்கிறது. அதுபோலவேதான் மனிதனும். யார் இறந்தாலும் யாராலும் அடுத்த வேளை சாப்பாடு இல்லாமல் இருக்கவே முடிவது இல்லை. இறந்தவருக்காக அழவே தெம்பு வேண்டியுள்ளது. அதற்காகவே சாப்பிடவும் வேண்டியுள்ளது, என்பதே யதார்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. மேலும் எந்தத்தாய் தந்தையையும் விரும்பி
      ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வது இல்லை.
      அது ஏதோ விதிவசத்தால் இவர்களிடம் பிறக்கிறது.

      எல்லா ஆணும் பெண்ணும் திருமணமானவுடன்
      அடுத்த இலக்காக குழந்தை பெறுவதைத்தான்
      கொண்டிருக்கிறார்கள்

      .ஒரு சில காம வெறியர்களைத் தவிர.

      குழந்தை பெறாவிடில் மாமியார் வீடு
      முதல் பிறந்தவீடு தொடங்கி இந்த சமூகம்
      அவர்களை பிள்ளை பெற தூண்டுகிறது.

      பிள்ளை பெறாத பெண்ணை மலடி என்றும்,
      ஆணை ஒன்பது என்றும் பழித்து
      பல நிலைகளில் அவர்களின் மனதை
      ரணகளமாக்கும் கொடூர ஜன்மங்கள்
      நிறைந்தது இந்த உலகம்.

      திருமண விழாக்களில், வளைகாப்பு, விழாக்களில்,
      குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாக்களில்
      அவர்கள் ராசியில்லாதவ்கள் என்று
      அக்மார்க் முத்திரை குத்தி அவமானப்படுத்தப்படுவதை
      நான் பல இடங்களில் கண்டு
      வேதனைப்பட்டுள்ளேன்.

      பலர் லட்சக்கணக்கில் செலவு செய்து
      குழந்தை பல ஆண்டுகளுக்கு
      பெற்று மகிழ்ந்ததையும்
      சிலருக்கு எந்த சிகிச்சையும் பலனளிக்காமல்
      விரக்தியின் எல்லைக்கு போய் முடிவில்
      ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொண்டு
      பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டதையும்
      நாம் காணலாம்.

      குழந்தை பெற அசைப்படுவது
      மனிதர்கள்தான்.

      ஆனால் என்ன குழந்தை பிறக்கும்,
      எந்த ஜீவன் யார் வயிற்றில் பிறக்க வேண்டும்
      அது எப்படி வாழ வேண்டும் என்பதை
      அந்த இறைவனே அறிவான்.

      Delete
    2. ஏனெனில் ஒவ்வொரு பிராணியும்
      தனித் தனியாகவே பிறக்கிறது
      தனியாகவே இறக்கிறது.

      உண்மைதான்.
      அதை ஏற்றுக்கொள்ளும்
      மனப்பக்குவம் வரவேண்டும்.

      கட்டிடம் கட்டும் பணி முடியும் வரை
      சாரங்கள் அவசியம்.

      அதுபோல் மனம் முதிர்ச்சி அடையும்வரை
      எல்லாம் அவசியம்.
      இல்லாவிடில் அதிர்ச்சிதான்
      அடுத்து ஹார்ட் அட்டாக்தான்,ஏற்ப்படும்
      ICU தான் .COMA தான் .

      அதுபோலவேதான் மனிதனும்.
      யார் இறந்தாலும் யாராலும் அடுத்த வேளை
      சாப்பாடு இல்லாமல் இருக்கவே முடிவது இல்லை.
      இறந்தவருக்காக அழவே தெம்பு வேண்டியுள்ளது.
      அதற்காகவே சாப்பிடவும் வேண்டியுள்ளது, என்பதே யதார்த்தம்.

      இறந்தால்சாப்பிடாமல் பட்டினி கிடந்து அழுவது அந்தக்காலம். எப்போதெல்லாம். கல்யாண வீட்டில் நடப்பதுபோல் காபி உபசாரம் நடக்கிறது.
      எல்லோரும் அழுவதுபோல் நடிக்கிறார்கள். நடிகர் நடிகைகளையும் மிஞ்சி. கல்யாணத்திற்கு செலவழிப்பதுபோல் தொலைகாட்சி பேட்டிகள், மலர் அலகாரம் என பல லட்சங்களை அள்ளி தெளிக்கிறார்கள். இருக்கும் போது ஒரு வாய் காஞ்சி ஊற்றாத இந்த பகல் வேஷக்காரர்கள்.

      என்ன செய்வது ?
      இந்த செத்த சமாசாரத்தை நம்பி பல லட்சம் பேர்கள் வாழ்கிறார்கள்.

      அவர்களுக்கு இது பிழைப்பு.
      நமக்கோ உழைத்த காசின் இழப்பு

      என்ன செய்ய? இந்த சமூகத்தை
      பகைத்துக் கொண்டு நாம் வாழமுடியாது.

      Delete