நவராத்திரி(6)
நவராத்திரி(5)
நவராத்திரி என்றால் கொண்டாட்டம்தான்
அதுவும் இரவைப் பகலாக்கி மின்னொளியில்
ஆடும் இந்த இளம் தளிர்களின் முகத்தில்
பொங்கி வழியும் உற்சாகத்தை பார்க்க வேண்டும்.
ரசிக்க வேண்டும்
மண்ணை உண்ட வாயனை, அடைமழையிலிருந்து ஆயர்குல மக்களைக் காக்க குன்றை குடையாய் பிடித்த கண்ணனை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் மண்ணால் சிலைசெய்து வண்ணம் தீட்டி.
மீனாட்சி கல்யாணத்தை பீங்கானால் வடிவமைத்து
நம் கண் முன்னே கொண்டு நிறுத்துகிறார்
ஒரு கலைஞர்.
கலைத்திறன் இருந்தால் எதில் வேண்டுமானாலும்
கலையை படைக்கலாம் என்பதை கீழ்கண்ட படங்கள் காட்டும்.
பொம்மை படைக்கும் கலைஞர்கள் வாழ்க !
ReplyDeleteசரஸ்வதி கடாக்ஷம் நிரம்பி வழியும் அண்ணா போன்ற கைத்திறமை வாய்ந்த, சொல்லாற்றல், எழுத்தாற்றல் நிறைந்த கலைஞர்களும், பதிவர்களும் வாழ்க வாழ்கவே !
நன்றி..VGK
Deleteகொலு அருமை. வண்ண ஓவியங்கள் அதனினும் அருமை.எங்கள் ஊரில் (காஞ்சிபுரத்தில்) பொம்மைக்கார தெரு உள்ளது.வட நாட்டுக்கு கூட ஏற்றுமதி..பார்வைக்கு வைத்து இருப்பார்கள்..தினம் போய் பார்ப்பேன்.
ReplyDeleteகழுதை மேய்த்தாவது
Deleteகாஞ்சி வாசம் பண்ணு என்று
ஒரு பழமொழி உண்டு.
முக்கியமான ஏழு நகரங்களில்
முக்கியமானது காஞ்சி என்று புராணங்களில்
போற்றப்படும் நகர் காஞ்சி.
காஞ்சியில் போனால் காலாட்டினால்தான்
சாப்பிடலாம் என்று ஒரு பழமொழி உண்டு.
காலாட்டுவது என்றால் ஒரு வேலையும்
செய்யாமல் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
காலை ஆட்டுவதல்ல
அங்கு இருக்கும் பாரம்பரியமான்
நெசவுத்தொழிலை குறிப்பிடுவதற்காக
சொல்லப்பட்டது.
வேகவதியாற்றின் கரையில்
அமைந்த நகரம்.
எப்போதும் வேத கோஷங்கள்
முழங்கும் நகரம்.
அனைத்து தெய்வங்களும் தேர்ந்தெடுத்து
இடம்கொண்டு அகிலத்தை பரிபாலிக்கும் நகரம்.
மகான்களும், ஜீவன்முக்தர்களும்
வந்தமைந்து அருள் பாலிக்கும் நகரம்.
வேண்டிய வரங்களை அள்ளி தருபவனான
வரதராஜபெருமான் கோயில் கொண்ட நகரம்
கம்பனும் நானே கண்ணனும் நானே
என்று ஏகம்பனாய்
விளங்கும் கச்சி ஏகம்பன்
அருள் செய்யும் நகரம்
வணங்குபவர்களின் காமங்களை (ஆசைகளை )
பூர்த்தி செய்பவளும் காமங்களை விட்டு
கடவுளை அடைபவர்களுக்கு ஞானத்தை
அருளும் காமாஷி நித்திய வாசம்
செய்யும். புண்ணிய பூமி.
அடுக்கிகொண்டே போகலாம்
காஞ்சியின் மகிமையை.
அங்கும் இவன் 8 ஆண்டுகள்
வாசம் செய்திருக்கிறான்.
அந்த மண்ணில் வசித்து,பாலாற்று நீரை குடித்து
பரமனிடம் பக்திசெய்து வந்த பலன் தான்
இன்று பதிவுகளில் வெளிப்படும் நல்ல கருத்துக்களும்
படைப்புக்களும் என்றால் மிகையாகாது.
காஞ்சியில் உணவகங்களில் கிடைக்கும்
உணவுகள் தனி ருசி
விலையும் மிக குறைவு.
முந்திரிஅல்வா வெறும் 35 பைசாதான்
பாதாம் அல்வா போன்றே இனிக்கும்
அளவு சாப்பாடு வெறும் 80 பைசாதான்
அதன் மணமும் ருசியும் தனி
இப்போதுள்ள மக்களுக்கு இதெல்லாம் தெரியாது .
சொன்னாலும் புரியாது
இப்போது அந்த உணவகங்கள் இல்லை.
நன்றாக அனுபவித்து உண்டுள்ளேன்.
இனி எந்த யுகத்திலும். அதுபோன்ற
உணவுகளின் சுவையை ருசிக்க முடியாது
என் நினைவுகளில் இன்றும் ருசிக்கின்றன.
அங்கு திரைப்படங்கள் 5 மணிக்கே தொடங்கிவிடும்
அந்நாளில். புதிய படங்களை பார்க்க
சென்னையிலிருந்து வருவார்கள்.
பேருந்து கட்டணம் வெறும்
ஒரு ரூபாய் நாற்பது பைசா மட்டும்தான்.
திரையரங்கு கட்டணமும் மிக குறைவு.
நான் படம் பார்ப்பதை காஞ்சியை விட்டு
கிளம்பும்போது நிறுத்திவிட்டேன்.
என்னுடைய நான் அடைந்த
இனிய தருணங்களை மீண்டும்
நினைவுக்கு கொண்டு வர வைத்த
வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி வாழ்க.
படங்கள் பிரமாதம் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDelete