Wednesday, December 31, 2014

இறைவன் நம்முள் இருக்கின்றான்.

இறைவன் நம்முள் இருக்கின்றான்.

இறைவன் நம்முள் இருக்கின்றான்.
அவனருளால்தான் அவன் ஏற்றுள்ள
வெவ்வேறு வடிவங்களை
புறத்தே காண்கின்றோம்.






அவன் இருப்பதை தங்கள் இதயத்தில்

உணராத நாத்திகர்களுக்கு   அவன் வடிவங்கள்
கல்லாகவும் மண்ணாகவும்தான் தோற்றமளிக்கின்றன

அவன் இருக்கின்றான் என்று நம்புவருக்கும்
இல்லை என்று பிதற்றுபவர்களுக்கும்
இறைவன் பார பட்சம் காட்டுவதில்லை

இருவர் இதயத்திலும் ஆன்மாவாய்
இருந்துகொண்டு மூச்சுக் காற்றாய் வந்து
போய்க்கொண்டிருக்கின்றான்

மூச்சில்லாவிட்டால் பேச்சில்லை
ஜீவனாகிய நாம்ஒவ்வொரு பிறவியிலும்
தங்கியிருக்கும் உடல் பஞ்ச பூதங்களின்
கூட்டால் உருவானது

நிலம், நீர் , நெருப்பு, காற்று ஆகாயம்
ஆகிய பூதங்களைக்  கொண்டு
உருவாக்கப்பட்ட இந்த உடல் இயங்க
காற்று முக்கிய பங்குவகிக்கிறது

காற்று ஓரிடத்தில் நிற்பதில்லை
அது ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது
அதன் இயக்கம் நின்றுவிட்டால் அனைத்தும்
நின்றுவிடும்.

அதன் வேகம் ஒவ்வொரு உயிருக்கும்
இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட  அளவில்
இந்த உடலின் உள்ளே
வந்து போய்க்கொண்டிருக்கிறது

உயிர்களில் உள்ள இதயத்தில் உண்டாகும் துடிப்பு
அதை உணர்த்துகிறது. அது அதன் பணியை செவ்வனே
செய்தாலும் அதை பாதிக்கூடிய பாதக செயலை
செய்வது நமுடைய மனதில் தோன்றும்
உணர்ச்சிகள் .

காமம், குரோதம், லோபம், மோஹம் ,மதம், மாச்சர்யம்
என்ற உணர்ச்சிகள் .கட்டுப்பாடின்றி போனால் அது
இதயத்தைப் பாதித்து உயிர்களை
மரணத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது.

இந்த ஆறு குணங்களை கட்டுபடுத்தி நமக்கு
பயன்படுவகையில் நன்மை அளிக்கவேண்டுமென்றால்
அவைகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
இறைவனை நாம் சரணடையவேண்டும்

நாம் செய்யும் செயல்களுக்கு நாம் தான் பொறுப்பு
என்ற அகந்தையை விடவேண்டும்.

அனைத்தும் இறைவன்தான் நம்மை கருவியாகக் கொண்டு
செய்விக்கின்றான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்

எப்போதும் அவன் நாமம் நாவில் கொண்டால்
சாவிலிருந்து தப்பிக்கலாம்

அவன் வடிவை நெஞ்சத்தில் நினைத்தால்
வஞ்சக எண்ணங்கள் நம் மனதில் தோன்றாமல்
தப்பிக்கலாம். 

அன்பே வடிவமானஅவனை நினைத்தால்தான்
அகிலத்தில் உள்ள அனைத்து உயிர்கள்  மீது நாம்
அன்பு செலுத்த முடியும்.

அவனை நினைக்காவிடில் நம்முடைய அன்பு
ஒரு வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டு நம்மை
பாச வலையில் தள்ளிவிடும்


பற்றில்லாத அவனின் பாதங்களை பற்றுக்கோடாக
பற்றிக்கொண்டல்தான் நாம் பற்றிக்கொண்ட
பற்றுக்களிலிருந்து விடுபடமுடியும்.

அப்போது நம் மூச்சு சீராக இருக்கும்
பேச்சும்  நேராக இருக்கும்
இகமும் பரமும் இன்பமாய் இருக்கும்

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(17)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(17)


பாடல் 17 
அம்பரமே தண்ணீரே சோறே அறம்  செய்யும் 
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய் 
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே 
குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் எழுந்திராய் 
அறிவுறாய்அம்பறைமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே 
உறங்காது எழுந்திராய் செம்பொற்க் கழலடிச் செல்வா  
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்   
விளக்கம்

  ஜீவன் இந்த உலகில் வாழ்ந்து வினைகளை அனுபவித்து தீர்க்க உடல் என்னும் கருவியைத் தருகின்றான் கண்ணன் .அது நன்றாக செயல்பட ,நீர், மற்றும் உணவையும் கொடையாக அளிக்கின்றான் அது வினைகளை அனுபவித்துத் தீர்க்கவும் அற வழியில் வாழ்க்கையை நடத்தவும் உதவும் நம்முள்ளே இருக்கும் நம் பெருமான் ,எம்பெருமான் நந்த கோபாலன் .
பெயரைச் சொல்லி உறங்கி கிடக்கும் நம்மை  எழுப்புகிறாள் ஆண்டாள்.

ஆயர்குலவிளக்கான கண்ணனின் தாயே யசோதையே எழுந்திராய். 
மூவடியால் உலகையெல்லாம் அளந்த தேவர்களின் தலைவனே நீயும் உறக்கம் நீங்கி எழுந்திராய் என்கிறாள். 

உண்மையில் இறைவனுக்கு ஏது உறக்கம்? அவனை நினையாது நாம்தான் உறங்கிக்கொண்டிருக்கிறோம்.  இந்த பாடலைக் கேட்டு  நாம்தான் விழித்துக்கொள்ளவேண்டும்.




  பரந்தாமனை விட்டு எப்போதும் பிரியாமல் இருக்கும் செம்பொன்னால் ஆன கழலை அணிந்த பலராமனே 
நீயும் துயில் நீங்கி எழுந்திராய் என்று அனைவரையும் தன் தோழிகளுடன் சென்று ஆண்டாள் எழுப்புகிறாள்.

எந்நிலையிலும் எப்போதும் நாமும் பலராமனைப் போல் பகவானை விட்டு பிரியாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.


அனைவருக்கும்
 தந்தை இறைவன் தான் 

அவன்தான் நமக்கு வேண்டிய உடை>உணவு>நீர் 
> அனைத்தையும் தருகிறான் 

உயிர்கள் வாழ உணவைத் தருபவள்
 பூமகளாகிய புவிமாதா 

நீரைத் தருபவனோ நீர்வண்ணனாகிய 
ஆழி மழைக் கண்ணன் 

அனைத்து உயிர்களுக்குள்ளும் 
ஆன்மாவாய் இருப்பவன் 
ஆத்ம ராமானாய்  இருப்பவன் 
ஆனந்தம் தருபவன் பரம்பொருளாகிய கண்ணனே. 

அவன் உறங்குவதுமில்லை
விழிப்பதுமில்லை

உறங்குவதும் விழிப்பதும் 
ஜீவர்களுக்குத்தான் 

கண்ணனையும் தங்களைப் 
போல்தான் உறங்குகிறான்> விழிக்கிறான் 
 என்று அறியாமையினால் ஜீவர்கள்  நினைக்கின்றனர். 

மூன்று உலகம் என்பது நம்முடைய
 மனதின் மூன்று நிலைகளைக் குறிக்கும்

ஒன்று நாம் விழித்திருந்து 
உலக செயல்களை செய்வதாக
 எண்ணும் நிலை.

இரண்டாவது உறங்கும்போது 
கனவு காணும் நிலை. 

மூன்றாவது கனவுகளற்ற ஏதும் 
அறியாது மயங்கிக் கிடக்கும் நிலை.

இதில் முதல் நிலையான்  
விழிப்புநிலையும் ஒரு நீண்ட 
கனவின் பார்ப்பட்டதே என்பதே உண்மை நிலை.

இந்த மூன்று நிலைகளுக்கு 
 அப்பால் ஒரு நிலை உள்ளது. 

அந்த நிலையில்தான்
 நம்முடைய ஆன்மா உள்ளது.

அதுதான் எப்போதும் உறங்காது 
விழித்திருந்து இந்த மூன்று நிலைகளையும்
 சாட்சியாக இருந்து காண்கிறது.

மனம் கூட விழிப்பு மற்றும் 
கனவு நிலைகளை கடந்து ஆழ்ந்த உறக்கத்தில் 
ஆன்மாவிடம் தான் தங்குகிறது 

அது ஆன்மாவிடம் உள்ளபோது
எந்த சலனமும் இல்லாது 
அமைதியாய் இருக்கிறது. 

அதை விட்டு வெளிவரும்போதுதான் 
விருப்பு வெறுப்புகளும்>காம க்ரோதாதி 
உணர்ச்சிகளும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன 

நம் மனம் ஆன்மாவிலேயே 
லயித்திருந்துவிட்டால். நாம் 
எந்த சூழ்ந்லையிலும் அமைதியாக் 
ஆனந்தமான மன நிலையில் இருக்கலாம். 

அதற்குதான் நாம் நமக்குள்
 அந்தர்யாமியாக விளங்கும் கண்ணனை>
 நம் இதயத்திற்குள் ஒளி வீசும் வாசுதேவனை
>பரப்ரம்மமாகிய ராமனை 
நாம் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்.



அதற்கு உறக்கத்தை> இந்த உலக 
பொருட்களின் மீதுள்ள மயக்கத்தை தாண்டி
 நாம் நமக்குள்ளே செல்லவேண்டும்.  

வருக வருகவே 2015

வருக வருகவே 2015


அரங்கனோடு இணைந்து
அகிலத்தைக் காக்கும் அன்னையே

அலர்மேல் மங்கையே அடியேனின்
கோரிக்கையை சற்றே செவி மடுப்பாய்

அப்பாவி மக்களை கொன்று குவிக்கும்
அரக்கர்களின் மனதில் அன்பு பயிரை
துளிர் விடச் செய்வாய்

உன் வடிவாய் உலகில் பவனி வரும்
பெண்ணினத்தை இழிவு செய்யும்
மூடர்களின் மனதை மாற்றிடுவாய்

கோயிலுக்குள்ளே உன் வடிவை தெய்வமெனக்
கும்பிட்டு சுக போகங்களை வரமாகக்
கேட்கிறார் ,வெளியே வந்த பின் மனம் மாறி
குணம் மாறி மாதர்தம்மை ஏசுகிறார். இந்த
மாந்தர்

உன் மதம் என் மதம் என்று உண்மை நிலை
புரியாது வாதம் செய்து உலகத்து மக்களுக்கு
ஓயாது துன்பம் தருகின்றார். ஒவ்வொருவரும்.







அல்லல் தரும் அரக்கர் கூட்டத்தைகொல்ல

அம்பெடுத்த ராம பிரானை அடையும் வழி அவன்
நாமம் மட்டுமே என்பதை அறியும் அறிவை
அவனியில் உள்ள மக்களுக்கு புகட்ட
வந்தாய் ஆண்டாளாக




ஆண்டுதோறும் அவள் அருளிய பாடல்களை
இசைக்கின்றோம்.மார்கழி மாதம் முழுவதும்
ஆனால் ஆண்டின் மற்ற மாதங்கள் முழுவதும்
வசை பாடியே கழிக்கின்றோம்

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனை நினையாது
பிறர் மீது வரைமுறை இல்லாமல் குறை கண்டே
வாழ்வைத் தொலைக்கின்றோம்



இனியாவது மனித மனம் திருந்தத்ட்டும் .
திருவேங்கடமுடையானின்
திருவடிகளை நாடட்டும். நானிலத்தில்
நல்வாழ்வு பெற்றுஇன்பமுடன் வாழட்டும்.



Tuesday, December 30, 2014

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(16)

 

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை  (பாசுரம்(16)


பாடல் -16
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே
கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே  
மணிக்கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலேழப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா  நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். 

விளக்கம் 
ஆயர்குல மக்களின் தலைவனான நந்தகோபனின் மாளிகை காவலனே மணிகள் ஒலிக்கும் இந்த கதவைத் திறப்பாயாக மாயவனும் கார்மேகவண்ணனுமான கண்ணன் எங்களை இன்று சந்தித்து அருள் தருவதாக கூறியுள்ளான்.அவனை எழுப்புவதற்கு மனதையும் உடலையும் சுத்தமாக்கிகொண்டு வந்துள்ளோம்.  இந்த நோன்பு காலத்தில் 
முதன் முதலாக அவனைக் காண வந்துள்ள எங்களை தடுத்துவிடாதே .கதவைத் திறப்பாயாக. என்று ஆண்டாள் பாடுகிறாள். 


கரைப்பார் கரைத்தால்
 கல்லும் கரையும் என்பார்கள். 

ஆண்டாள் ஒரு வழியாக ஆயர்குல பெண்களை உறக்கத்திலிருந்து  எழுப்பி 
அரிதுயில் கொண்டுள்ள கண்ணனைக்  
காண அழைத்துச்  செல்கிறாள்.

சென்று கண்ணன் உறங்கும் மாளிகை
 காவல்காரனை கதவை திறக்க வேண்டுகிறாள்

.நாங்கள் மனதையும் உடலையும் 
சுத்தமாக்கிகொண்டு வந்துள்ளோம்
 எங்களைத் தடுக்காதே என்றும் வேண்டுகிறாள். 


மனம் ஒரு அதிசய சக்தி 
.அதில் எண்ணங்கள் தோன்றும் இடமும்
 இந்த உடலில் பிராணன் தோன்றுமிடமும் 
ஒன்றே என்கிறார் பகவான் ரமணர்.

அதனால்தான் மனமடங்கினால் 
  பிராணன் நம் வசப்படும்

பிராணனை கட்டுப்படுத்தினால்
 மனம் வசப்படும். 

ஆனால் இரண்டையும் வசப்படுத்துதல் 
என்பது மிகக் கடினமான செயல். 
அது யோகிகளுக்கே கைவரும். 

நம் போன்ற பாமரர்கள் தகுந்த ஆசானின்றி 
அதற்க்கு முயற்சி செய்தால் 
விபரீத  விளைவுகள் ஏற்படும் .
சில நேரங்களில் உயிருக்கு அபாயம் நேரிடும்.

அதனால்தான் ஆண்டாள் 
மிக எளிய வழியை நமக்கு காட்டி தந்துள்ளாள்.





 நம் மனதை கண்ணனின் திருவடிகளில் 
ஒப்படைத்துவிட்டால்> தான் என்ற அகந்தையை விட்டுவிட்டு
 கண்ணன் விட்ட வழி என்று 
அவன் திருவடிகளில் சரணடைந்துவிட்டால் 
ஒரே நேரத்தில் மனமும் அடங்கும்
 பிராணனும் நம் வசப்படும். 

அவன் லீலைகளை பற்றிபேசுவதாலும் 
பாடுவதாலும்> சிந்திப்பதாலும்
 மனம் அமைதி அடைந்து எளிதாக
 அவன் திருவடிகளில் ஒடுங்கிவிடும். 
அதை அடக்கும் வேலை நமக்கு இல்லை.



மாடுகளையும் கன்றுகளையும்
 மேய்த்தவன் மாடுபோல் அடங்கா திரியும்
 நம் மனதையும் மாற்றி 
அவன் வழிக்குக் கொண்டுவருவான்



 அதற்கு அவன் நாமத்தை இடைவிடாது 
உச்சரிக்கவும் வேண்டும்.

 நமக்குரிய  கடமைகளை தவறாது 
செய்யவும் வேண்டும் 

 அனைவரையும் 
அவன் வடிவாகக் காணவேண்டும்

பரோபகாரம் இதம் சரீரம் என்ற 
வாக்கியத்திற்கு உகந்த வகையில் 
பிறருக்கு நாம் ஏதாவது 
ஒரு வகையில் உதவிக்கொண்டிருந்தால்.
 மட்டுமே சர்வம் பிரம்மமயம்  என்ற
 மகா வாக்கியத்தின்
 உட்பொருளை உணர்ந்துகொள்ளமுடியும். 

முயற்சி செய்வோம் .
அந்த முகுந்தன் வழிகாட்டுவான்.  

படங்கள்-நன்றி-கூகுல்

Monday, December 29, 2014

பகவான் ரமணரின் சிந்தனைகள்

பகவான் ரமணரின் சிந்தனைகள்


மனம் என்று ஒன்று இருப்பதால்தான்
இந்த மண்ணில் இத்தனை
சோதனைகளும்  வேதனைகளும்

கடந்த கால பகைமை  எண்ணங்கள்
நினைவில் அழியாமல்
இருப்பதால்தான் நிகழ்கால
மலர்கள் கருகிப் போகின்றன

அகிலமெங்கும் அழிவுகள் தொடர்ந்து 
நிகழ அடிப்படைக் காரணம்
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில்
அழியாமல் இருக்கும் தீய எண்ணங்களே

நிகழ் காலத்தில் வாழும் கலையைக் கற்றுக்கொண்டால்
புதியதாக தோன்றி மலர்ந்து மணம்  வீசும்
அன்பு மலர்களை கண்டு மகிழலாம்

எதிர்காலக் கோட்டைகளை கட்டாதீர்
நிகழ்கால அரண்மனையில் சுகமாக வாழும்
ஆனந்தத்தை  இழக்காதீர்

பகவான் ரமணரின் அறிவுரையை
சிந்தனை செய்வீர் .எக்காலமும் பிறரை
நிந்தனை செய்யாதீர்

அனைவருள்ளும் இறைவன்
வாசம் செய்கிறான் என்று பாவித்து வந்தனை  செய்வீர்
அனைவரின் வாழ்வும் மலரும்.

மனதின் உள்ளே வந்து போகும்
எண்ணங்களை கண்காணிப்பீர் அது உடலுக்கா
அல்லது மனதிற்க்கா அல்லது அந்த
இரண்டையும் கண்காணிக்கும் ஆன்மாவிற்க்கா
என்று ஆராய்ந்து பார்ப்பீர்

எவனோ ஒருவன் வண்டியை ஓட்டுகிறான்.
நீ அதில் அமர்ந்திருக்கிறாய் ,
உன் பாரத்தை ஏன்  இன்னும்
உன் தலையில் சுமக்கிறாய் ?

வண்டி உன் பாரத்தை சுமப்பதுபோல்
உன் தலையில் இருக்கும் பாரத்தையும்
அவன் சுமப்பான் என்பதை என்று உணரப்போகிறாய்?

பாரத்தை தலையிலிருந்து இறக்கி வைத்து விட்டு
ஆனந்தமாக பயணம் செய் என்றார். பகவன் ரமணர்

இவ்வுலகில் பிறந்த யாவரும்
கடமையாற்றுவது கட்டாயம்

கடமையாற்றும்போது தலையில்
நான்தான் அனைத்தையும் செய்கிறேன்
என்ற அகந்தை சுமை வேறு எதற்கு?

தலையில் இருக்கும் அகந்தைக் குப்பையை
அப்புறப்படுத்துவீர் .அருணாச்சலத்தின் அடிவாரத்தில்
அடங்கியுள்ள ஆனந்த ரமணரின் அறிவுரைகளை
எந்நேரமும் சிந்தித்து சித்தம் தெளியப்பெறுவீர்

(பாசுரம்(15) ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(15)

 

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(15)


பாடல்-15 
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்லென் றழையேன்மின்  நங்கையீர் !
போதர்கின்றேன் வல்லை நின் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக 
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள் 
வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை 
மாயனைப் பாடேலோ ரெம்பாவாய் 
விளக்கம் 




14 பாசுரங்களில் உறக்கத்தை விட்டொழித்து 
உலகளந்த உத்தமனின் பேரை பாடி கோயிலுக்கு சென்று வணங்குமாறு  அறிவுறுத்தியும் ஜீவன்கள் உறங்குவதிலேயே சுகம் கண்டு கொண்டு அதிலிருந்து எழுவதற்கு மனம் வராமல் படுக்கையில் இருந்துகொண்டே காலத்தை கடத்தி கொண்டிருக்கின்றனர். 


இந்த உலகில் நல்லதோர் வாழ்க்கை வாழவேண்டுமென்றால் ல்லதோர் சத்சங்கத்தில் நம்மை இணைத்துக்கொள்ளவேண்டும். அதை விடுத்து தீயவர்களுடன் இணைந்தால் நம் வாழ்வு கேலிக்குரிய பொருளாகிவிடும். 


ஆன்மீகத்தில் உண்மையான முன்னேற்றம் ஏற்படவேண்டுமேன்றால் 
சத்சங்கத்தை நாடுவதை விட சிறந்த சாதனம் இல்லை.

காலம் யாருக்காகவும் காத்திருக்காது .
அடுத்த கணம் என்ன நடக்கும் என்று யாரும் அறிய முடியாது. 

கடந்த காலத்தை  வீணடித்ததுபோல்
 நிகழ்காலத்தையும் வீணடிப்பவர்கள் மதியிருந்தும்
 உண்மையை உணராது வீணே மாண்டுபோகின்றனர்

விலங்குகளைப் போல் உண்டு உறங்கி 
இரை தேடி உறவுகொண்டு. 
பந்தத்திலும்>பாசத்திலும்> மோகத்திலும்>சிக்கி கர்வம் கொண்டு திரிந்து அரிதாய்க் கிடைத்த பிறவியை 
ஹரியை எண்ணாமல் 
அழிகின்றனர். 



காலையில் எழுந்த ஆதவன் 
மேற்கே மறைவதைக் கண்டும்
 நம் கண்முன்னே பிறந்த கன்று வளர்ந்துமுதுமை அடைந்து 
 மடிவதைக் கண்ட பிறகும்>
நம்மோடு வாழ்ந்து திடீரென்று மாண்டு 
மறைந்து போனவர்களைக் கண்டும்
 வாழ்வின் நிலையாமையை உணராது 
வெட்டிக் கதைகள் பேசி திரிவதைப் பார்த்த
 ஆண்டாள் உறக்கத்தை விட்டொழித்து 
லீலைகள் பல புரிந்த கண்ணனை 
வணங்க வருமாறு மீண்டும் அன்புடன் அழைக்கிறாள். 

இந்த உலகத்தில் நாம் காணும் புற எதிரிகளைவிட நம் உள்ளத்திலேயே இருந்துகொண்டு நம்மை அழிவுப்பாதைக்கு  கொண்டு செல்லும் தீயஎண்ணங்களே கொடிய எதிரிகள்.

அவர்களை இனம் கண்டுகொள்வது மிகவும் கடினம். கண்ணுக்கு தெரியாத அந்த எதிரிகளை அழிக்க வேண்டுமென்றால் நமக்குள்ளேயே இருந்து நம்மைக் காக்கும் கண்ணனின் திருவடிகளை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை.

  ஆண்டாளின் அறிவுரையை கேட்டு அவன் திருவடிகளில் பக்தி செலுத்தி
 பிறவி பயனை அடைவதில்
 நாட்டம் கொள்வோமாக. 

Sunday, December 28, 2014

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(14)

  ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(14)


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் 
செங்கழுநீர் வாய் நெகிழ்ந் தாம்பல்வாய் கூம்பின காண் 
செங்கல்பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய் !நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரமும் ஏந்தும் தடைக்கைய்யன் பங்கயக் கண்ணானை பாடேலோ ரெம்பாவாய்.  

விளக்கம் 

வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தில் ஆதவன் வரவை முன்னிட்டு அல்லி  மலர்கள் விரிந்த தன்  இதழ்களை மூடத் தொடங்கிவிட்டன 
தாமரை மலரோ தன் இதழ்களை விரிக்கத் தொடங்கிவிட்டது காவிநிற உடை அணிந்த துறவிகள் திருக்கோயிலில் இறைவனை எழுப்பும் விதமாக சங்கினை முழங்க செல்லுகிறார்கள். 
எங்களை முதலில் வந்து எழுப்புவதாகச் சொல்லிவிட்டு இன்னும் உறங்கிக்கொண்டிருக்கும் நங்கையே 
சொன்னபடி செய்யாமைக்கு நாணாமல் வருத்தம் தெரிவிக்காது இருக்கும் நாவுடையவளே சங்கும் சக்கரமும் கையில் ஏந்தி இவ்வுலகைக் காக்கும் தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனை 
பாடித் துதிக்க வாராய் என்கிறாள் ஆண்டாள். 


  இந்த பாடலில் ஆதவனைக்  
 காண தாமரை மலர்கிறது 


அதுபோல் நம் மனமும் தாமரை போன்ற 
கண்களை உடைய சங்கு சக்கரத்தினை கையில் ஏந்தி காட்சி தரும் யாதவ குல திலகம் கண்ணனைக் மாதவனைக் கண்டால் மலரும் மனதில் இன்பம் பெருக்கெடுக்கும். .
ஆனால் நாம் படுக்கையில் இருந்து எழுந்து நீராடி 
இறைவனை தரிசிக்கச் செல்ல மனமில்லாமல் 
தமோ குணத்தில் அழுந்தி கிடக்கிறோம். 
நம்முடைய மந்தத்தனம்  நீங்க வேண்டுமென்றால் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிய கடல்வண்ணனை நம் மனம் என்னும் கடலில் புக அனுமதிக்கவேண்டும்.


துறவிகள் இறைவனை கோயிலில் 
சங்கை ஊதி துயிலெழுப்பும் ஒலியைக் 
 கேட்டும் உணர்வின்றிக் கிடக்கிறோம்.
 ஊழ்வினையினால். 

குருவாயூரப்பன் சுப்ரபாதத்தில் பட்டத்ரி
 "ஹே .குருவாயூரப்பா "நான் மத்தனாயும் ஜடமாகவும் இருக்கின்றேன் 
நல்ல குணங்கள் ஒன்றும் இல்லை.
வாழ்வில் தரித்திரம்.துக்கம் என எப்போதும் 
அவைகளைப் பற்றியே என் சிந்தனைகள் ஓடுகிறது.
 உன்னை நினைப்பதற்கே மனம் 
செல்ல மாட்டேன் என்கிறது என்கிறார்.

அதுபோலத்தான் நம் மனம் எப்போதும் 
உடலையும் குடலையும் கவனிப்பதற்கே 
பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறது.

 மீதி நேரம் தற்பெருமை பேசி திரிவதிலும்>
 பிறர் மீது குறை கூறி அலைவதிலும்
.பிறருக்கு கேடு நினைப்பதிலும் >நோயிலும்
 மீதி உறக்கத்திலும் வீணாகிப் போய்விடுகிறது. 


மார்கழி மாதம் மட்டுமாவது 
பகவானுக்காக ஒதுக்கி அவன் அருளைப் பெற வழி 
காட்டத்தான்  ஆண்டாள் இப்புவியில் அவதரித்தாள்

அப்படியும் நம்முடைய 
அறியாமையினால் நாம் இன்னும் 
அவள் உபதேசங்களை 
மனதில் கொள்ளாது மயங்கி கிடக்கிறோம்.

இன்னும் காலம் கடந்துவிடவில்லை.
 இனியாவது உறக்கத்தை விட்டொழித்து
 பகவானின் புகழைப் பாடி 
அவன் பாதங்களை சரணடைவோம். 

ஓம் நமோ நாராயணாய   

Saturday, December 27, 2014

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை(பாசுரம்(13)

  ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை(பாசுரம்(13)


பாடல்-13
புள்ளின் வாய்க் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக்  களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் வெள்ளி எழுந்து விழாயனும் உறங்கிற்று புள்ளும்  சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குழைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ ? பாவை நீ நன்னாளால்  கள்ளம் தவிர்த்து  கலந்தேலோ ரெம்பாவாய்
விளக்கம் 

  புள் என்றால் மனித உயிர். அதற்க்கு வாய் என்றொரு கருவி இருக்கிறது 
அதன் மூலம் அது உணவையும் உட்கொள்ளும். அதன் உள்ளே அசைந்துகொண்டிருக்கும் நாக்கு அவனுக்கு நன்மையையும் செய்யும் சொல்லணா தீமைகளையும் செய்து விடும். தீமைக்கும் நன்மைக்கும் காரணம் மனதில் தோன்றும் எண்ணங்களே. அந்த எண்ணங்கள் தூய்மையாக இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை.பறவை பறப்பதற்கு இறக்கைகள் தேவை. ஆனால் எண்ணங்கள் இறைக்கையில்லாம்ல் ,சத்தமில்லாமல் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டு மானாலும் பறந்து சென்று தன நோக்கத்தை நிறைவேற்றிவிடும். எனமே நாம் இந்த மனதிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதான் துன்பம் நேராமல் இருக்கவேண்டுமென்றால் நம் மனதை கண்ணனிடம் ஒப்படிது விட வேண்டும். அப்படி செய்துவிட்டால் நாம் அனைத்து துனப்ங்களிளிருந்து காப்பாற்றப்படுவோம். 
மனம் உறங்கும்போதும் விழித்துக் கொண்டிருக்கும். அதை நல்வழியில் செலுத்திடவே ஆண்டாள் கண்ணனின் நாமத்தை சொல்லிக்கொண்டு   .அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டு பக்தர் குழாத்துடன் அவன்  சன்னதிக்கு செல்ல சொல்கிறாள்.
வானிலே ஆதவன் உதிக்கும் நேரத்தை அறிவிக்கும் முகமாக வெள்ளி என்னும் சுக்கிரனும் விழாயன் என்னும் குருவும் உறங்குவதுபோல்  கண்ணிலிருந்து மறையத் தொடங்கி விட்டன.
பறவைகளும் தன்  கூட்டை விட்டு பறந்து இரை கிளம்பும் முகத்தான் சத்தம் போடத் தொடங்கிவிட்டன. காலைப் பொழுது புலர்வதை அறிந்தும் நீ கண்களை திறந்து எழுந்து வந்து குளிர்ந்த நீரில் நீராடாமல்  படுக்கையில் கிடப்பது முறையோ? உறங்குபவர்களை அன்பாக  எழுப்புகிறாள்.
இறைவனுக்காக ஏற்பட்டது  மார்கழி மாதம். அதில்  அனைத்து நாட்களும் நல்ல நாட்களே. அதுபோல் இந்த நன்னாளில் மற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு கண்ணனை நினைத்து அவனுடன் கலக்க வந்திடுவாய். என்கிறாள்  ஆண்டாள். 





ஆனாலும் ஆண்டாள்
 அவர்களை விடுவதாயில்லை.


சில நேரங்களில் தீமை செய்யப் புகுந்தாலும் 
பறவை வடிவில் வந்த அரக்கனுக்கு பகவான்கண்ணன் கையினால்மாளும் 
 பாக்கியம் கிடைத்தது.

மனதில் ஆயிரம் தீய சிந்தனைகள் இருந்தாலும் 
அனுதினமும் நாம் பகவானை சிந்தித்துக் கொண்டே வந்தால் 
அவைகள் மறைந்து
 நம் மனம்  முழுவதும் இறை சிந்தனையால் 
ஒருநாள் நிரப்பட்டுவிடும் 

அப்போது நாமும் நரகத்தில்
 விழாமல் காப்பாற்றப்படுவோம்.

அதற்க்கு நல்லவரோடு 
இணங்கவேண்டும்.



தானே இயங்கமுடியாத
 பல ரயில் பெட்டிகளை ஒரு இஞ்சின் 
இழுத்து சென்று நாம் சேருமிடத்தில் கொண்டு சேர்ப்பதுபோல 
பகவானின்  ஒரு நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டோமானால் 
நாம் அவன் இருக்குமிடத்தை ஒரு முயற்சியுமின்றி எளிதாக அடைவது திண்ணம். 

அதற்கு தான் என்ற அகந்தையற்று அவன் தாள்களை சரணடையவேண்டும் 

சரணடைந்ததுபோல் நடிப்பது பயனளிக்காது. 


Friday, December 26, 2014

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(12)

 

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை  (பாசுரம்(12)



பாடல்-12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி 
நினைத்து முலைவழியே நின்று பால் சோர 
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்  
பனித்தலை வீழ நின் வாசற்க்கடைப் பற்றிச் 
சினத்தினால் தென்னிலங்கை கோமானை செற்ற 
மனத்துக்கினியானை பாடவும் நீ வாய் திறவாய் 
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் 
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய். 

பாடல் விளக்கம் 
இளங்கன்றுகளுடைய எருமைகள் பால் கறப்பார் இன்றி  
சுரந்தபால் மடியில் சேர்ந்துவுடன் கன்றுகள் தாயை நினைத்து குரல் எழுப்பியவுடன் தாய் எருமை தன்  கன்றுகளுக்கு அதை கொடுக்க நினைத்த மாத்திரத்தில் அதன் முலையில் பால் சுரந்து கொட்டகை முழுதும் தரையில் சிதறி சேறாகிவிடும். அப்படிப்பட்ட கால்நடை செல்வங்களை பெற்ற குடும்பத்தில் உள்ளவளே ! நாங்கள் அதிகாலைப் பனி எங்கள் தலைமீது விழ உன் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கிறோம் கோயிலுக்கு சென்று காமத்தினால் தவறிழைத்த இலங்கைக்கு அரசனான ராவணனை  அழித்த ஸ்ரீ ராமனை.நம் அனைவரின் மனதுக்கினியானை பாடவும் உன் பேருறக்கத்தை  விட்டு எழுந்து வா என்கிறாள் ஆண்டாள் இந்த பாசுரத்தில் 


இந்த பாசுரத்திலும் ஆண்டாள்
 உயிர்களின் உறக்கத்தை பற்றிதான் பேசுகிறாள். 

கன்றுகளின் குரலைக் கேட்டவுடன்.
 தாய் எருமை கன்று தன்  அருகில் இல்லாவிட்டாலும் அதை நினைத்த மாத்திரத்தில் பாலை சொரிகிறது தாய் எருமை. 

அதுபோல்தான் நாம்  இறைவனை 
நினைத்தவுடன் நாம் எதுவும் கேளாமலேயே 
அனைத்து இன்பங்களையும் தருகிறான்.

நம் மனதிற்கு ஆறுதல்  தருகிறான்
 துன்பங்களைப் போக்குகிறான் 

ராமாயணத்தில் வரும் சீதை பாத்திரம் 
என்பது நம்முடைய ஆன்மாவைக்
 (ஜீவாத்மா)குறிக்கும் 

பத்து தலை ராவணன் என்பது
 பத்து இந்திரியங்களைக் குறிக்கும் ஞானேன்ந்திரியங்கள் 5 கர்மேந்திரியங்கள் 5

காம வயப்பட்ட இந்திரியங்கள்  
ஆன்மாவை இறைவனிடமிருந்து பிரித்துவிடுகிறது

இறைவனிடம் இருக்கும்போது ஜீவனுக்கு 
அவன் மகிமை தெரிவதில்லை 

இறைவனை மறந்து உலக பொருட்களின் மீது 
ஆசைவயப்பட்டு துன்பத்தில் 
சிக்கிகொள்ளுகிறது ஜீவன் 

 இறைவனைப் பிரிந்தவுடன்தான்
 தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து 
அவனுக்காக ஏங்குகிறது. 

அதை உணர்ந்த ஸ்ரீராமன் ராவணனை
(இந்த உலக விஷயங்களில் கொண்டுள்ள 
பற்றுக்களை அழித்து)  அழித்து சீதையை(ஜீவாத்மாவை தன்னிடம் சேர்த்துக்கொள்கிறான்)  மீட்கிறான் 
 ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் இணைக்கும் பாலமாக குருவாக 
                                     ஆஞ்சநேய மூர்த்தி விளங்குகிறார்.

இந்த உலக சுகத்தில் மூழ்கி 
பகவானை மறந்து கிடக்கும் ஜீவனை ஸ்ரீராமனின்
 பெருமைகளைக் கூறி எழுப்புகிறாள் 
இந்த  பாசுரத்தில் ஆண்டாள் 

நாமும் உறக்கத்தை ஒழித்து 
 ராமனின் பேரை சொல்லுவோம் 
நம் மனதில் உள்ள
 ஆசைகளை வெல்லுவோம் 

Thursday, December 25, 2014

மகேசனை அடைய வழி காட்டும் மதங்களின் கோட்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்

 மகேசனை அடைய வழி காட்டும் மதங்களின் கோட்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்

 

மதம் நுழையாத இடம் எது?

இந்த உலகில் பிறக்கும்
முன் மதம் இல்லை.

ஒரு உயிர் மண்ணில் விழுந்தவுடன் அதை
கையில் எடுப்பவனால் மத சாயம் , பூசப்படுகிறது.

அந்த உயிர் மீண்டும் மண்ணுக்குள் போகும்வரை
அந்த சாயம் போவதில்லை.

ஆனால் மதம் நுழையாத சில தருணங்களும்
இருக்கத்தான் செய்கின்றன.

ஒருவன் பல நாள் பட்டினி  கிடந்து
நினைவு தப்பும் வேளையில் ஒருவன்
அவன் உயிரைக் காக்க உணவு அளிக்கும்போது
மதத்தை பற்றி சிந்திபதில்லை.

ஒருவன் கொடிய நோயினால் துன்பப்படும்போது ஒரு
மருத்துவரிடம் செல்லும்போது அவர் எந்த மதம், எந்த ஜாதி என்று பார்ப்பதில்லை.

தன்  நோய் குணமானால் போதும் என்று மட்டுமே
என்னும் அந்த நேரத்தில்
அவரை மருத்துவராகவே மட்டும் அந்த நேரத்தில் அனைவரும் பார்க்கின்றனர்.

அதுபோல் அந்த மருத்துவரும் வருபவரை
ஒரு நோயாளியாக மட்டுமே பார்க்கின்றார்

உண்மையான காதல் எதையும் பார்ப்பதில்லை.

இறைவனும் அப்படித்தான் அனைத்து
உயிர்களையும் ஒன்றாகவே பார்க்கின்றான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பிறக்கும்முன்பே தாயின் மூலம் பாற்கடலில் சயனித்திருக்கும் பரந்தாமன் அமிர்தமான பாலை தயாராக வைத்திருக்கிறான்

ஆனால் உணவை உண்டு உடலில் சக்தி வந்தபின் அவனிடம் கர்வமும், தலை தூக்கி விடுவதால், தான் என்ற ஆணவமும், சுயநலமும் மிகுந்து சக உயிர்களிடம் பேதம் கண்டு தீமைகளை செய்கின்றான்.

இறைவன் பல இயற்க்கை இடர்பாடுகள், நோய்கள்,
அழிவுகள், ஏமாற்றங்கள் இழப்புகள் என எச்சரிக்கைகளை அளித்தும் மனிதர்கள் மனம் திருந்துவதில்லை.

தில்லை நாதனை சிந்தை  செய்வதில்லை. திருவேங்கடனாதனை வணங்குவதில்லை திமிர் பிடித்து அழிகிறார்கள்.

மகேசனை அடைய வழி காட்டும் மதங்களின் கோட்பாடுகளை கடைபிடிக்கவேண்டும்.

அதை விடுத்து அதை பிறர் மீது திணித்தால்
அழிவைத்தான் சந்திக்க வேண்டி நேரிடும்.

அதைதான் இன்று உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது.

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(11)

  ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(11)

கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து 
செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும் 
குற்றமொன்றில்லாத  கோவலர்தம் பொற்கொடியே 
புற்றர வல்குல் புனமயிலே!போதராய்;
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் 
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட 
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ 
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய் .

  
ஆண்டாள் இந்த பாசுரத்திலும்
உறக்கத்தை விட்டொழித்து 
உலகேழும் உண்டு உமிழ்ந்தவனின் நாமத்தை 
சொல்லி நற்கதி பெறுமாறு மீண்டும் அழைக்கிறாள். 

இறைவன் மீது பக்தி செய்ய வேண்டுமென்றால் 
தூய மனம் வேண்டும். 

கள்ளம் உள்ள உள்ளத்தில் 
இறை பக்தி பிறக்காது 

நாவில் நல்ல சொற்கள் வரவேண்டும்.
 நலம் தரும் சொல்லான நாராயண என்னும் நாமத்தை ஓதிக்கொண்டிருக்கவேண்டும்.

தலைஎழுத்தை மாற்றவல்ல ராம 
என்னும் இரண்டெழுத்தை உச்சரிக்கவேண்டும். 


நம்மால் அதை செய்ய முடியாத பட்சத்தில்
 பகவானிடம் பரிபூர்ண சரணாகதி செய்ய வேண்டும்
அப்படி செய்தால் அவனே  இந்த ஜீவன்
 பட்ட  துன்பங்கள் போதும் என்று கருணையுடன் 
நம்முடைய புத்தியில்  புகுந்து நமக்கு நல்ல வழி காட்டுவான் என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் தெரிவிக்கிறார்.

ஆண்டாள் கண்ணனை முகில்வண்ணன் 
என்று அழைத்து அவன் பேரை பாட வாருங்கள் என்றுநம்மையும்  அழைக்கிறாள்.

முக்தியை அளிக்கும் 
முகுந்தனின் நாமம் சொல்லுவோம். 

Wednesday, December 24, 2014

ஸ்ரீ ஆண்டாளின் புகழ் பாடிடு மனமே!

 ஸ்ரீ ஆண்டாளின் புகழ் பாடிடு மனமே!

மந்தியை மதியில்
குடி வைத்தால் வாழ்வு சந்தி சிரிக்கும்
என்பதை அறியாயோ மனமே


மாதவம் புரிந்து ஸ்ரீராமனின்
பாதம் பணிந்து  அவன் திருநாமத்தையே
உச்சரித்து  தன் இதயத்தில் நிலை நிறுத்தி
உயர்வடைந்த பக்தனும்
பராக்ரமசாலியுமான  மாருதியை
எப்போதும் சிந்தையில் வை மனமே

பொருளைத் தேடுவதிலேயே
குறியாய் இருந்து பந்தம் என்னும்
எலிப்பொறியில் சிக்கி மாள்வதற்க்கா
மனிதப் பிறவி வேண்டிப் பெற்றாய்
மதிஇழந்து அலையும் மனமே

அருள்தரும் அரங்கனின் திருவடியை
நாடி நன்மைகள் பெறவே நல்லதோர்
வழியை நமக்களித்த   நங்கை நல்லாள்
ஸ்ரீ ஆண்டாளின் புகழை பாடிடு அனுதினமே



ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை
பாசுரங்களை பக்தியுடன் அரங்கனின் சன்னதியில்
பாடிடுவாய் அருளும் பொருளும்
ஆனந்த வாழ்வும் கிடைக்கப்  பெற்று
அவனியிலே வாழ்ந்திடுவாய்.