பகவான் ரமணரின் சிந்தனைகள்
மனம் என்று ஒன்று இருப்பதால்தான்
இந்த மண்ணில் இத்தனை
சோதனைகளும் வேதனைகளும்
கடந்த கால பகைமை எண்ணங்கள்
நினைவில் அழியாமல்
இருப்பதால்தான் நிகழ்கால
மலர்கள் கருகிப் போகின்றன
அகிலமெங்கும் அழிவுகள் தொடர்ந்து
நிகழ அடிப்படைக் காரணம்
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில்
அழியாமல் இருக்கும் தீய எண்ணங்களே
நிகழ் காலத்தில் வாழும் கலையைக் கற்றுக்கொண்டால்
புதியதாக தோன்றி மலர்ந்து மணம் வீசும்
அன்பு மலர்களை கண்டு மகிழலாம்
எதிர்காலக் கோட்டைகளை கட்டாதீர்
நிகழ்கால அரண்மனையில் சுகமாக வாழும்
ஆனந்தத்தை இழக்காதீர்
பகவான் ரமணரின் அறிவுரையை
சிந்தனை செய்வீர் .எக்காலமும் பிறரை
நிந்தனை செய்யாதீர்
அனைவருள்ளும் இறைவன்
வாசம் செய்கிறான் என்று பாவித்து வந்தனை செய்வீர்
அனைவரின் வாழ்வும் மலரும்.
மனதின் உள்ளே வந்து போகும்
எண்ணங்களை கண்காணிப்பீர் அது உடலுக்கா
அல்லது மனதிற்க்கா அல்லது அந்த
இரண்டையும் கண்காணிக்கும் ஆன்மாவிற்க்கா
என்று ஆராய்ந்து பார்ப்பீர்
எவனோ ஒருவன் வண்டியை ஓட்டுகிறான்.
நீ அதில் அமர்ந்திருக்கிறாய் ,
உன் பாரத்தை ஏன் இன்னும்
உன் தலையில் சுமக்கிறாய் ?
வண்டி உன் பாரத்தை சுமப்பதுபோல்
உன் தலையில் இருக்கும் பாரத்தையும்
அவன் சுமப்பான் என்பதை என்று உணரப்போகிறாய்?
பாரத்தை தலையிலிருந்து இறக்கி வைத்து விட்டு
ஆனந்தமாக பயணம் செய் என்றார். பகவன் ரமணர்
இவ்வுலகில் பிறந்த யாவரும்
கடமையாற்றுவது கட்டாயம்
கடமையாற்றும்போது தலையில்
நான்தான் அனைத்தையும் செய்கிறேன்
என்ற அகந்தை சுமை வேறு எதற்கு?
தலையில் இருக்கும் அகந்தைக் குப்பையை
அப்புறப்படுத்துவீர் .அருணாச்சலத்தின் அடிவாரத்தில்
அடங்கியுள்ள ஆனந்த ரமணரின் அறிவுரைகளை
எந்நேரமும் சிந்தித்து சித்தம் தெளியப்பெறுவீர்
மனம் என்று ஒன்று இருப்பதால்தான்
இந்த மண்ணில் இத்தனை
சோதனைகளும் வேதனைகளும்
கடந்த கால பகைமை எண்ணங்கள்
நினைவில் அழியாமல்
இருப்பதால்தான் நிகழ்கால
மலர்கள் கருகிப் போகின்றன
அகிலமெங்கும் அழிவுகள் தொடர்ந்து
நிகழ அடிப்படைக் காரணம்
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில்
அழியாமல் இருக்கும் தீய எண்ணங்களே
நிகழ் காலத்தில் வாழும் கலையைக் கற்றுக்கொண்டால்
புதியதாக தோன்றி மலர்ந்து மணம் வீசும்
அன்பு மலர்களை கண்டு மகிழலாம்
எதிர்காலக் கோட்டைகளை கட்டாதீர்
நிகழ்கால அரண்மனையில் சுகமாக வாழும்
ஆனந்தத்தை இழக்காதீர்
பகவான் ரமணரின் அறிவுரையை
சிந்தனை செய்வீர் .எக்காலமும் பிறரை
நிந்தனை செய்யாதீர்
அனைவருள்ளும் இறைவன்
வாசம் செய்கிறான் என்று பாவித்து வந்தனை செய்வீர்
அனைவரின் வாழ்வும் மலரும்.
மனதின் உள்ளே வந்து போகும்
எண்ணங்களை கண்காணிப்பீர் அது உடலுக்கா
அல்லது மனதிற்க்கா அல்லது அந்த
இரண்டையும் கண்காணிக்கும் ஆன்மாவிற்க்கா
என்று ஆராய்ந்து பார்ப்பீர்
எவனோ ஒருவன் வண்டியை ஓட்டுகிறான்.
நீ அதில் அமர்ந்திருக்கிறாய் ,
உன் பாரத்தை ஏன் இன்னும்
உன் தலையில் சுமக்கிறாய் ?
வண்டி உன் பாரத்தை சுமப்பதுபோல்
உன் தலையில் இருக்கும் பாரத்தையும்
அவன் சுமப்பான் என்பதை என்று உணரப்போகிறாய்?
பாரத்தை தலையிலிருந்து இறக்கி வைத்து விட்டு
ஆனந்தமாக பயணம் செய் என்றார். பகவன் ரமணர்
இவ்வுலகில் பிறந்த யாவரும்
கடமையாற்றுவது கட்டாயம்
கடமையாற்றும்போது தலையில்
நான்தான் அனைத்தையும் செய்கிறேன்
என்ற அகந்தை சுமை வேறு எதற்கு?
தலையில் இருக்கும் அகந்தைக் குப்பையை
அப்புறப்படுத்துவீர் .அருணாச்சலத்தின் அடிவாரத்தில்
அடங்கியுள்ள ஆனந்த ரமணரின் அறிவுரைகளை
எந்நேரமும் சிந்தித்து சித்தம் தெளியப்பெறுவீர்
அகந்தைப் பற்றி சரியாகச் சொன்னீர்கள் ஐயா...
ReplyDeleteஅகந்தையை நாம் அழிக்காவிட்டால்
Deleteஅது நம்மை அழித்துவிடும் DD
மனிதனாய்ப் பிறந்தவர்களுக்கு சிந்தனை வரமா சாபமா? அவரவர் சிந்தனையை அமைத்துக் கொள்ளும் வகையைப் பொறுத்து!
ReplyDeleteஅதற்கும் ஒரு உண்மையான
Deleteசுயநலமற்ற வழிகாட்டி தேவை.