Wednesday, December 10, 2014

பகவத் கீதைக்கு அரசின் அங்கீகாரம் எதற்கு?

பகவத் கீதைக்கு அரசின் அங்கீகாரம்  எதற்கு?




பகவான் கண்ணன் இந்த உலக மக்களுக்கு அளித்த
பகவத் கீதைக்கு அரசின் அங்கீகாரம் எதற்கு?

தேவையற்ற கூச்சல்களும்
குழப்பங்களும் தேவையில்லை.

மனம் போன போக்கில் எவர் எதை
வேண்டுமானாலும்
சொல்லிக் கொண்டு திரியட்டும்.

அடுத்த நாள் அவர்கள்  மற்றொரு பிரச்சினையைத்
தூக்கி கொண்டு அலையட்டும்.

கீதை எல்லா நோய்க்கும் மருந்து. 

உடலில் பற்றிய பிணிக்கும், உள்ளத்தில்
கணக்கற்ற பிறவிகளாக நம்மை
பற்றிக்கொண்டு தொடர்ந்து துன்பத்தில்
வைத்துக்கொண்டிருக்கும் பிணிகளையும் ஒருசேர
ஒழிக்கும் தன்மை கொண்ட அற்புத மருந்து
என்றும் குறையாத நிறைவான் ஆனந்தத்தை
அளிக்கும் மருந்து.

நோய் தீரவேண்டும் என்ற வேட்கை கொண்டவன் 
அதை நாடி நலம் பெறட்டும். 

மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்.

எல்லாவற்றிக்கும் நேரம் காலம் வரவேண்டும்.
அப்போதுதான் எதுவும் பயனளிக்கும்.

பல நூறு சுலோகங்களைக் கொண்ட கீதைக்கும் காலம் காலமாக
எத்தனையோ ஆசிரியர்கள்விளக்கம் எழுதி வைத்திருக்கிறார்கள்.
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் எழுதுவார்கள்.

எல்லாவறையும் படித்து புரிந்துகொண்டு
அதன் உண்மைகளை மனதில் கொண்டு
செயல்படுத்தியவர்கள் மிக சிலரே.

அதைப் பற்றியெல்லாம் பாமரர்களாகிய
 நாம் ஏன் கவலைப்படவேண்டும். ?

கீதை வலியுறுத்துவது இரண்டே கொள்கைகள்தான். 

ஒன்று கடமையை.செய். பலனை எதிர்பாராதே.

இரண்டு. கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் கோடி கோடி.

அதை எவராலும் முழுமையாக கடைபிடித்தால் இயலாது.
அதனால் பகவானையே எப்போதும் நினைவில் கொண்டு
அவன் சார்பாக நல்ல செயல்களைசெய்துவந்தால்  போதும்
நான் அவர்களை காப்பாற்றுகிறேன்
என்ற பகவானின் உறுதி மொழி.

இந்த இரண்டையும் நாம் நம் இறுதி காலம் வரை
செய்து வந்தால் போதும்.
இகத்திலும் பரத்திலும்
இன்ப நிலை சத்தியம்.மட்டுமல்ல
சாத்தியமும்கூட 

6 comments:

  1. //ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் கோடி கோடி.//

    அவற்றில் சிலவற்றையாவது பின்பற்றுவோமாகில் - வாழும் வையகம் சொர்க்கம் ஆகும்..

    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

    ReplyDelete
    Replies
    1. பகவத் கீதைக்கு அரசின் அங்கீகாரம் எதற்கு?
      Inbox

      V.S. Krishnan

      12:14 PM (10 minutes ago)

      to me
      Dear Pattabhiraman,

      You are correct. So long we perform our duties well and so long we walk through the path of Dharma (righteousness), we would attain the highest end.

      Gita is a treasure of knowledge and who are in the quest for knowledge would come to it. There is no need to impose Gita on some one compulsorily. Let those who pursue knowledge come to it and let those who prefer to remain in darkness remain there. It is only when we try to propagate something, its importance is reduced.

      Krishnan



      Delete
  2. A needless issue just as one a few weeks ago by HRD minister to replace German by Sanskrit.

    BJP was voted for development . Not for these issues.

    Dear Modi Sir,
    Please advise your colleagues to stay away from issues which divide the people.
    Let her remember this subshitani.
    Yasya naisargiki shobha thanna samskaram arhathi.
    kaha kalaam sashinor mashti kaustubaha kena rajyathi.

    meaning:
    That which is naturally beautiful needs no artificial illumination. Is it necessary at all, to say this is moon or this is Kaustuba Ratna. The glorious shine on their own glory. They do not need your or our recommendations.

    Be concentrating on issues of development.
    strictly speaking, on education, better health for all , better availability of food grains etc.


    subbu thatha.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக சொன்னீர்கள் சூரி சிவா அவர்களே
      இவர்கள் உண்மையாகவே பகவத் கீதையின் கருத்துக்களை மக்களிடம் பரப்ப வேண்டுமென்றால். அதற்குரிய நேரத்தில், இடத்தில தகுந்த கற்றறிந்த பெரியோர்களைகொண்டு பிரசாரம் செய்யட்டும். அதை விடுத்து இதுபோல் செய்து கொண்டிருந்தால் நந்தவனத்திலோர் ஓர் ஆண்டியின் கையில் கிடைத்த பானையைபோல் இவர்களின் கதி ஆகிவிடும். .

      Delete
  3. நன்றிகள் பல....
    அருமை அருமை.....

    ReplyDelete
  4. I stopped writing long back. But still it is receiving comments. Thank you

    ReplyDelete