அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(17)
பாடல் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே
குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் எழுந்திராய்
அறிவுறாய்அம்பறைமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே
உறங்காது எழுந்திராய் செம்பொற்க் கழலடிச் செல்வா
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே
குலவிளக்கே எம்பெருமாட்டி யசோதாய் எழுந்திராய்
அறிவுறாய்அம்பறைமூடறுத்தோங்கி உலகளந்த உம்பர் கோமானே
உறங்காது எழுந்திராய் செம்பொற்க் கழலடிச் செல்வா
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
விளக்கம்
ஜீவன் இந்த உலகில் வாழ்ந்து வினைகளை அனுபவித்து தீர்க்க உடல் என்னும் கருவியைத் தருகின்றான் கண்ணன் .அது நன்றாக செயல்பட ,நீர், மற்றும் உணவையும் கொடையாக அளிக்கின்றான் அது வினைகளை அனுபவித்துத் தீர்க்கவும் அற வழியில் வாழ்க்கையை நடத்தவும் உதவும் நம்முள்ளே இருக்கும் நம் பெருமான் ,எம்பெருமான் நந்த கோபாலன் .
பெயரைச் சொல்லி உறங்கி கிடக்கும் நம்மை எழுப்புகிறாள் ஆண்டாள்.
ஆயர்குலவிளக்கான கண்ணனின் தாயே யசோதையே எழுந்திராய்.
மூவடியால் உலகையெல்லாம் அளந்த தேவர்களின் தலைவனே நீயும் உறக்கம் நீங்கி எழுந்திராய் என்கிறாள்.
உண்மையில் இறைவனுக்கு ஏது உறக்கம்? அவனை நினையாது நாம்தான் உறங்கிக்கொண்டிருக்கிறோம். இந்த பாடலைக் கேட்டு நாம்தான் விழித்துக்கொள்ளவேண்டும்.
பரந்தாமனை விட்டு எப்போதும் பிரியாமல் இருக்கும் செம்பொன்னால் ஆன கழலை அணிந்த பலராமனே
நீயும் துயில் நீங்கி எழுந்திராய் என்று அனைவரையும் தன் தோழிகளுடன் சென்று ஆண்டாள் எழுப்புகிறாள்.
எந்நிலையிலும் எப்போதும் நாமும் பலராமனைப் போல் பகவானை விட்டு பிரியாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
அனைவருக்கும்
தந்தை இறைவன் தான்
அவன்தான் நமக்கு வேண்டிய உடை>உணவு>நீர்
> அனைத்தையும் தருகிறான்
உயிர்கள் வாழ உணவைத் தருபவள்
பூமகளாகிய புவிமாதா
நீரைத் தருபவனோ நீர்வண்ணனாகிய
ஆழி மழைக் கண்ணன்
அனைத்து உயிர்களுக்குள்ளும்
ஆன்மாவாய் இருப்பவன்
ஆத்ம ராமானாய் இருப்பவன்
ஆனந்தம் தருபவன் பரம்பொருளாகிய கண்ணனே.
அவன் உறங்குவதுமில்லை
விழிப்பதுமில்லை
உறங்குவதும் விழிப்பதும்
ஜீவர்களுக்குத்தான்
கண்ணனையும் தங்களைப்
போல்தான் உறங்குகிறான்> விழிக்கிறான்
என்று அறியாமையினால் ஜீவர்கள் நினைக்கின்றனர்.
மூன்று உலகம் என்பது நம்முடைய
மனதின் மூன்று நிலைகளைக் குறிக்கும்
ஒன்று நாம் விழித்திருந்து
உலக செயல்களை செய்வதாக
எண்ணும் நிலை.
இரண்டாவது உறங்கும்போது
கனவு காணும் நிலை.
மூன்றாவது கனவுகளற்ற ஏதும்
அறியாது மயங்கிக் கிடக்கும் நிலை.
இதில் முதல் நிலையான்
விழிப்புநிலையும் ஒரு நீண்ட
கனவின் பார்ப்பட்டதே என்பதே உண்மை நிலை.
இந்த மூன்று நிலைகளுக்கு
அப்பால் ஒரு நிலை உள்ளது.
அந்த நிலையில்தான்
நம்முடைய ஆன்மா உள்ளது.
அதுதான் எப்போதும் உறங்காது
விழித்திருந்து இந்த மூன்று நிலைகளையும்
சாட்சியாக இருந்து காண்கிறது.
மனம் கூட விழிப்பு மற்றும்
கனவு நிலைகளை கடந்து ஆழ்ந்த உறக்கத்தில்
ஆன்மாவிடம் தான் தங்குகிறது
அது ஆன்மாவிடம் உள்ளபோது
எந்த சலனமும் இல்லாது
அமைதியாய் இருக்கிறது.
அதை விட்டு வெளிவரும்போதுதான்
விருப்பு வெறுப்புகளும்>காம க்ரோதாதி
உணர்ச்சிகளும் நம்மை ஆட்டிப் படைக்கின்றன
நம் மனம் ஆன்மாவிலேயே
லயித்திருந்துவிட்டால். நாம்
எந்த சூழ்ந்லையிலும் அமைதியாக்
ஆனந்தமான மன நிலையில் இருக்கலாம்.
அதற்குதான் நாம் நமக்குள்
அந்தர்யாமியாக விளங்கும் கண்ணனை>
நம் இதயத்திற்குள் ஒளி வீசும் வாசுதேவனை
>பரப்ரம்மமாகிய ராமனை
நாம் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்.
அதற்கு உறக்கத்தை> இந்த உலக
பொருட்களின் மீதுள்ள மயக்கத்தை தாண்டி
நாம் நமக்குள்ளே செல்லவேண்டும்.
அருமை ஐயா...
ReplyDeleteநன்றி DD
Deleteநிறை மங்கலம் நீடு புகழ் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..